மறைந்த திராவிடர் தொழிலாளர்
கழகத் தலைவர்
கட்டுப்பாடு மிக்கவர்
கொள்கையில் ஆழமிக்கவர்
நாகலிங்கம் படத்தைத்
திறந்துவைத்து தமிழர் தலைவர் நினைவேந்தல்
உரை

சென்னை, ஜுன் 20_ மறைந்த நாகலிங்கம் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி 18.6.2015
அன்று
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில்
நடைபெற்றது. திராவிடர் தொழிலாளர் பேரவையின் மாநில செயலாளராகப் பணியாற்றியவரான
நாகலிங்கம் படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
கழகப்பணியில் ஈடுபட்டு தம்முடைய வீட்டுக்குத்
திரும்பிக்கொண்டிருந்தபோது 4.10.2013 அன்று அவர் விபத்துக்கு ஆளாகி தொடர்ச்சியாக மருத்துவர்களின் தீவிரக்
கண்காணிப்பில் இருந்துவந்தார். 7.4.2015 அன்று மறைந்தார். படத்தைத் திறந்துவைத்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்
நினைவேந்தல் உரையில் குறிப் பிட்டதாவது:
மிகுந்த துன்பத்துக்கும், துயரத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய
நிகழ்ச்சியாக, திராவிடர் தொழி லாளர் அமைப்பினுடைய பொறுப்பாளர், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில்
நிறைந்திருப்பவரான அருமைத் தோழர் மானமிகு நாகலிங்கம் அவர்களு டைய படத்திறப்பு என்ற
இந்த நிகழ்ச்சி அவருடைய தொண்டுக்கு நாம் வீர வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்ச்சி.
மிகப்பெரிய சோகத்துக்கு ஆளாகி இருக்கக்கூடிய
நிலையிலே, அதை ஏற்றுக்கொண்டு, அவர் வழிநடத்து வதற்கு நான் திண்டுக்கல்
சென்றிருக்க வேண்டும். அங்கே செல்ல வாய்ப்பு இல்லை என்ற காரணத்தாலே இங் கேயே அந்த
நிகழ்ச்சியை வந்து நடத்திக்கொள்ளுகி றோம் என்கிற பெரு உள்ளத்தோடு இங்கே வந்திருக்
கக்கூடிய அவருடைய அன்புசெல்வங்கள், குடும்பத் தவர்கள், அருமைத்தோழர்கள், தோழியர்கள், அறி வார்ந்த பெருமக்கள் எல்லோருக்கும் அன்பான
வணக் கம். தோழர் நம்முடைய நாகலிங்கம் அவர்களைப்பற்றி நினைவுகள் எப்போதும்
பசுமையாகவே இருக்கின்றன.
இங்கே கழகத்துணைத்
தலைவர் அவர்களும், வீர பாண்டி அவர்களும், மற்றவர்களும் குறிப்பிட்டதைப் போல, கட்டுப்பாடு மிகுந்த ஓர் எடுத்துக்காட்டான
இலட்சியத் தோழர், தொண்டர் தோழர் நாகலிங்கம் ஆவார்.
அப்படிப்பட்டவர்களைப் பார்ப்பது என்பது மிகமிக அரிது. இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக்
காட்டியதைப்போல திராவிடர் கழகத்தின்சார்பில் தொழிலாளர் அமைப்பை
அரசியல்கட்சிகளைப்போல நாம் வளர்க்கவில்லை என்பது உண்மை. அதற்கு காரணமும்
சொன்னார்கள். திராவிடர் கழகம் மக்களை தன் பின்னாலே அழைத்துப்போகக்கூடிய ஓர்
இயக்கமாக இருக்கிறது, மற்ற அரசியல் கட்சிகள் மக்கள் பின்னாலே அவர்கள்
செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்களுடைய எண்ணங்களை மாற்றக்கூடிய நிலையிலே இல்லை. மக்களுடைய
வாக்குகளை பெறு வதற்காக அவர்கள் மனம் கோணாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ
அதைச் செய்வது எல்லா அரசியல் கட்சிகளுடைய இயல்பு.
ஆனால், திராவிடர் கழகம் என்ற சமூக அமைப்பு மக்களுடைய அந்த நீரோட்டத்தோடு போகக்கூடிய
தல்ல, எதிர்நீச்சலடித்து திருத்த வேண்டியவர்களைத்
திருத்தவேண்டிய ஒரு கடமை. அதுபோலவே நம் முடைய தொழிலாளர் அமைப்பு. தந்தைபெரியார்
அவர்கள் பேசிய ஓர் உரையில் தலைப்பிருக்கிறது. திராவிடர் கழகம் என்றாலே
தொழிலாளர்கள் அமைப்புதான்.
எனவே இந்தத் தொழிலாளர் அமைப்பு என்பது
இருக்கிறதே அதிலும் திராவிடர் கழகமே ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் அமைப்புதான்.
ஏனென்றால், சூத்திரர்கள் கழகம். சூத்திரர்கள் என்றாலே
மனுதர்மப்படி தொழிலாளர்கள்தான்.
மீகாமன் நாகலிங்கம்
ஆகவே, இந்தத் தொழிலாளர் அமைப்பிலேயே தனியே போக்குவரத்து தொழிலாளர் என்று தனியே ஆரம்பித்து பெரிய அளவிலே அதை, மறைந்தும் மறை யாமல் என்றும் நம் நெஞ்சங்களில்
நிறைந்திருக்கிற கே.ஜி.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய திண்டுக்கல் சுப்பிரமணியம்
அவர்கள் கடுமையாக உழைத்து அருமையாக கட்டினார். அவர் திடீரென்று மறைந்த வுடனே அந்த
சோகம் தாங்கமுடியாத நிலையிலே இந்த கப்பலுக்கு யார் கேப்டன்? என்று நினைத்த நேரத்திலே ஓர் அருமையான மீகாமன்
தோழர் நாகலிங்கம் கிடைத்தார்.
நாகலிங்கம் அடக்கமானவர், கொள்கை உறுதி நிறைந்தவர். அதிரடியாகப் பேச
மாட்டார். ஆனால், நிரம்ப ஆழமானவர். அன்பு நெஞ்சத்தோடு எவரி
டத்திலும் பழகக்கூடியவர். அவர் இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதுமாதிரி
ஒவ்வொருவர் இடத்திலும் நேரிடையாகச் சென்று தோழர்களிடம் பகிர்ந்து கொண்டு
படிப்படியாக இந்த இயக்கத்தை தொழி லாளர்கள் இயக்கத்தை திராவிடர் கழகத்திலே ஒரு
கட்டுமானத்திலே எப்படி கட்டடங்களை அஸ்தி வாரத்திலே நிறுத்தி மேலே கொண்டுவருவார்களோ, அதுமாதிரி கொண்டுவந்தவர். அப்படிப்பட்டவருக்கு
விபத்தின் காரணமாக, தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள் இயற்
கையின் கோணல் புத்தி என்று. அதன் காரணமாக நாம் அவரை இழக்க வேண்டியிருந்தது. இந்த
நேரத் திலே நாம் எவ்வளவு துயரப்பட்டாலும், நாகலிங்கம் திரும்பி வரமுடியாது. அதேநேரத்திலே அவர் ஊட் டிய உணர்வை நாம்
எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம்.
அந்த உணர்வு நம்மை எதற்காக அவர் தன்னுடைய
வாழ்க்கையை அர்ப்பணித்தார் ஓய்வு பெற்ற நிலை யிலேகூட. மிகப்பெரிய அளவுக்குப்
பணியாற்றியபோது இருந்ததைவிட, பணி ஓய்வு பெற்றபிற்பாடு அவர் கடுமையாக உழைத்தார்.
அதுதான் திராவிடர் கழகத்துக்காரர்கள் சிறப்பு.
இந்த இயக்கத்திலே வேலை செய்தால் என்ன கிடைக்கும்? மானம், மரியாதை கிடைக்கும். அவ் வளவுதானே தவிர, வேறு ஒன்றும் பெரிய லாபங்கள் இருக்காது.
அதைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டினார்கள். அதுவும்
தனித்தன்மையோடு இருக்கக்கூடிய இயக்கம் திராவிடர் தொழிலாளர் கழகம் என்பது.
அப்படிப்பட்ட ஓர் இயக்கத்துக்குக் கிடைத்த அரும் செல்வமாக பெரும் நிதியாக நமக்கு
நாகலிங்கம் அவர்கள் கிடைத்தார்கள். பெரும் செல்வம். ஒரு வறியனுக்குக் கிடைத்த
செல்வம். ஓர் ஏழைக்கு கிடைத்த செல்வம் திடீரென்று பறி போய்விட்டால் அவனுடைய நிலைமை எப்படி இருக் குமோ, அதுபோல அதில் நல்ல வசதியானவர்கள் எல்லாம்
வாழ்ந்துகொண்டிருக்கும்போது நேபாள பூகம்பம்மாதிரி ஒரே நாளில் பார்த்தீர்கள்
என்றால், இப்போது அங்கே இருந்து ஒரு செய்தி வருகிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை நேபாளத்தில் அதிகமாகி
இருக்கிறது. காரணம் என்ன என்று சொன்னால் முழுக்க முழுக்க அப்படிப்பட்ட ஒருநிலை.
அப்படிப்பட்டவர் களை நாம் நினைத்து வேதனைப்படுவது மட்டுமல்ல, அவர்களுடைய பணி தொடர வேண்டும். நாம் அதற்கு
உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி, அவருடைய வாழ்வு சிறக்க, அவருடைய பணி நடக்க பாராட்ட வேண்டும். ஒன்றரை
ஆண்டு காலம் தொடர்ந்து போராடியதன் காரணமாக அவருடைய குடும்பத்தினரை நான் நெஞ்சம்
நிறைந்து பாராட்டுகிறேன் மிகுந்த துன்பத் துக்கிடையேகூட. கொள்கையோடு நீங்கள்
வந்திருக் கிறீர்கள்.
அவர் எதை விரும்பினார்களோ, அதைப்பற்றி செய்வேன் என்று சரவணன் அவர்களும், மற்றவர் களும் சொன்னார்கள். இதுதான் அவருக்குச் செய்த சரியான இறுதிமரியாதை.
எனவே, உங்களுக்கு இயக்க சார்பாக நன்றி
செலுத்திக்கொள்வதோடு, அவர் இருந்தால் இந்த இயக்கம், இந்தக் குடும்பத்தோடு தொடர்புடைய இயக்கமாக
இருக்குமோ, இந்தக் குடும்பம் விடுதலையோடு, எங்களோடு தொடர்புடை யவர்களாக இருப்பீர்களோ
அப்படிப்பட்ட இரு வழிப்பாதைத் தொடர்புகள் தொடர வேண்டும்.
அதற்காக எல்லோரும் ஒத்துழைப்போம் என்று சொல்லி
திராவிடர் தொழிலாளர் கழகத்தை சிறப் பாகக் கட்டி, அருமையாக எடுத்துக்காட்டாக நடத்து வதற்கு தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்
மறுபடி யும் நாம் சந்திப்போம். கலந்துரையாடுவோம். அதைச் செய்வதுதான் நாகலிங்கம்
அவர்களுக்கு செய்யும் சிறப்பு.
திருச்சி பெரியார் சர்வீஸ்
ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரில் ஒரு பிரிவு
இன்னொரு செய்தி எல்லா ஓட்டுநர்களுக்கும் அவர்
பயிற்சி கொடுத்தார். பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து பெரியார் கல்வி நிறுவனங்களிலே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனங்களிலே
என்னு டைய ஓட்டுநர்கள் உள்பட. அது நம்முடைய பாது காப்புக்கு பெரிய ஆயுள் காப்பீடு
மாதிரி மிகப்பெரிய அளவில் அதையெல்லாம் செய்தார் நம்முடைய நாகலிங்கம் அவர்கள்.
திருச்சியிலே இருக்கிற பெரியார் சர்வீஸ் ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரிலும் ஓர் பிரிவு
அமைக்கப்படும். எனவே, அவருடைய மறைவு என்பது ஈடுசெய்யமுடியாத ஓர்
இழப்பு. அந்த இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. அதை நாம் நிரப்ப முயற்சி
செய்யவேண்டும். அவருடைய புகழ் வாழ்க, அவருக்கு வீரவணக்கம். நன்றி, வணக்கம்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல்
உரையாற்றினார்.
திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன், திண்டுக்கல் மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டியன், திராவிடர் தொழிலாளர் கழகப் பொறுப்பாளர் சென்னை
செல்வராசு, திண்டுக்கல் எம்.செல்வம், ஏ.மோகன் ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைக்கழகப் பேச்சாளர் முனைவர் க.அன்பழகன், வட மாவட் டங்களின் அமைப்புச் செயலாளர்
வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன், வட சென்னை மகளிரணி தங்கமணி குணசீலன், பெரி யார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், எம். பாண்டி, ஏ.சிதம்பரம், இரா.ஜவகர், கேஜிஎஸ். ஜீவானந்தம், ராஜி, மூர்த்தி, சிவகுருநாதன், சித்ரா, பூமா, ராஜி, நிவேதா, சுவேதா, ராதா, சின்னத்திரை நட்சத்திரங்கள் அரவிந்த், அன்வர், செந்தில், வினோத் மற்றும் நாகலிங்கம் இளைய மகனும், கலைத் துறையைச் சேர்ந்தவருமாகிய திண்டுக்கல் சரவணன் நண்பர்கள் ராஜாசங்கர், காளியப்பன், ஜெயக்குமார், கும்பகோணம் பஷீர், அருள்மோகன், விழுப்புரம் பழனி, நவநீதம், சுல்தான் மற்றும் ஆதித்யா ஜானி வசந்த் உள்பட பலரும் தமிழர்தலைவரிடமிருந்து
அய்யாவின் அடிச்சுவட்டில், பெரியார் ஒரு சகாப்தம், வாழ்வியல் சிந்தனைகள உள்ளிட்ட நூல்களைப் பெற்
றுக்கொண்டனர். மாநில மாணவரணி, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பிரின்சு என்னரெசு பெரியார் நன்றி கூறினார்.
-விடுதலை20.6.15,பக்கம்-4
விடுதலை20.6.15,பக்கம்-4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக