சென்னை: மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப் படி உயர்த்தியதை அடுத்து தமிழகத்திலும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப் படியை உயர்த்தி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் இது குறித்து கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். இதனால் ஆசிரியர்கள் தங்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கு பிறகும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ள நிலையில் அவர்களின் கோரிக்கைகளில் ஒன்றான அகவிலைப் படியை உயர்த்தி தருவதில் அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. இதையடுத்து அகவிலைப் படியை மத்திய அரசுபோல 6 சதவீதம் உயர்த்தி வழங்குவதாக அரசு நேற்று காலை அறிவித்தது. மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.1.2015 முதல் அகவிலைப் படி உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதையொட்டி தமிழக அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2015 முதல் 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு ஊழியர்கள் போல தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1.1.2015 முதல் 6 சதவீத கூடுதல் அகவிலைப் படியை பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்., இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.336 முதல் ரூ.4620 வரை சம்பளம் அதிகரிக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அகவிலைப்படி 1.1.2015 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு ஊதியம் பெறுவோர் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1222.76 கோடி செலவாகும்.இவ்வாறு அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

-தினகரன்,23.4.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக