சென்னை, பிப்.24 அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூடுதல் நேரம் பணியாற்றிய தால் அதற்கான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும், வங்கிப் பணிகளை அயல்பணிகளாக அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு தொழி லாளர் துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்றுமுன்தினம் டில்லி யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், இந்திய வங்கிகள் கூட்ட மைப்பு, அய்க்கிய வங்கிகள் தொழிற்சங்கம் ஆகியவை பங்கேற்றன.
இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 28-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
-விடுதலை,24.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக