வியாழன், 9 பிப்ரவரி, 2017

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 50 நாள் வேலைவாய்ப்பு

புதுடில்லி, பிப்.9 கிராமப்புற பகுதிகளில் ஏழை தொழிலாளர் களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு (மொத்தம் 150 நாட்கள்) அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோல், ஆந்திர மாநில த்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக 50 நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இதுபற்றி மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், வறட்சி பாதித்த தருணங்களில் மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. தமிழகமும், ஆந்திராவும் எங்களை அணுகின. எனவே, அங்கு கூடுதலாக 50 நாள் வேலைவாய்ப்பு அளிக்க அனுமதி அளித்துள்ளோம் என்றார்.

-விடுதலை,9.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக