புதுடில்லி, பிப்.21 இந் திய கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறை அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளை நம் பியே இருக்கிறது. இந்திய என்ஜினீயர்கள் பெரும்பா லோர் அமெரிக்க நிறுவனங் களுக்காக நேரடியாகவோ அல்லது அவுட்சோர்சிங் முறை யிலோ பணியாற்றி வருகிறார்கள்.
ஆனால் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் வெளிநாட்டினருக்கு செல்வதை விரும்பாமல் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இதனால் இந்திய சாப்ட் வேர் என்ஜினீயர்கள் பெரும் பாலானோர் வேலை இழக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 80 சதவீத என்ஜினீயர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் புதிய தொழில்நுட்ப வரவால் இந் திய என்ஜினீயர்கள் பெரு மளவில் பாதிக்கப்படுவார்கள் என்று இப்போது புதிய தக வல் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்திய கம்ப்யூட்டர் தொழில் நிறுவனங்களின் கூட் டமைப்பு (நாஸ்காம்) நடத் திய தலைமை பண்பு கருத் தரங்கம் நடந்தது. இதில் பிரபல பிரெஞ்சு கம்ப்யூட்டர் நிறுவனமான கேப்கேமினி நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி சிறீனிவாஸ் காண்டுலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் நுட் பங்கள் வேகமாக ஊடுருவி வருகின்றன. குறிப்பாக டிஜிட் டல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தகுந்த மாதிரி பணியாற்றுவதற்கு இந்திய என்ஜினீயர்களுக்கு போதிய திறன் பயிற்சி இல்லை.
இந்தியாவில் சாப்ட்வேர் துறையில் 39 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச் சிக்கு தகுந்தமாதிரி பயிற்சி பெற்று வருகிறார்கள். பெரும் பாலானோருக்கு இதுபற்றிய விவரங்கள் எதுவும் போத வில்லை.
பல கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு அடிப் படை தொழில்நுட்ப அறிவு கூட இல்லை. அந்த கல்லூ ரிகள் மிக தரம் தாழ்ந்த அள வில் இருப்பதால் மாணவர் களை உரிய முறையில் தயார் படுத்தவில்லை. அதுபோன்ற நபர்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. பல மாணவர்களிடம் தாங்கள் எழுதிய கடைசி செமஸ்டர் தேர்வு பற்றி கேள்வி கேட் டால் கூட பதில் சொல்ல தெரிய வில்லை. இப்படிப்பட்டவர் களால் எந்த பயனும் இருக் காது. இனி அவர்களுக்கு பயிற்சி அளித்து இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தவும் முடியாது.
ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கும் இந்த தொழில்நுட்ப திறன் இல்லை. எனவே இதன் காரணமாக 65 சதவீத நடுநிலை மற்றும் சீனியர் அளவிலான என்ஜினீயர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இதை தடுக்க வேண்டும் என்றால் மாண வர்கள் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனைத்து திறனும் பெற்றவர்களாக வெளி வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,°21.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக