கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியில்
மகன், மகள் என்று பாகுபாடு காட்டக்கூடாது
உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, பிப்.1 கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியில் ஆண், பெண் பாகுபாடு காட்டக்கூடாது என கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிராகரிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 மாதத்தில் வேலை வழங்க வேண் டுமென உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், ஆலங் குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த முத்துச்செல்வி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் தந்தை வேல்முருகன் நுகர் பொருள் வாணிபக்கழகத்தில் பாதுகாவலராக பணியாற்றினார். பணிக்காலத்தில் கடந்த 2012இல் உயிரிழந்தார். இதனால் எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி, என் தாயின் ஒப்புதல் சான்றுடன் விண்ணப் பித்தேன். எனக்கு பணி வழங்க முடியாது எனக்கூறி வாணிபக் கழக தலைவர் 20.5.2016இல் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டப்படி பெற் றோரை பராமரிப்பதில் ஆணும், பெண்ணும் சமம். எனவே அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண் டும்,’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகை யில், திருமணம் ஆனாலும் வாரிசு வேலை பெறுவதற்கு ஆண் பிள்ளைகளுக்கு எந்த தடை யும் இல்லை. ஆனால் பெண் ணுக்கு இந்த உரிமை மறுக்கப் படுகிறது. பெற்றோர் பராமரிப்பு சட்டப்படி ஆண், பெண் பிள் ளைகள் சமம். அதே போல அரசமைப்பு சட்டப்படி ஆணும், பெண்ணும் சமம். இதை யெல்லாம் வைத்துப் பார்க்கும் போது திருமணம் ஆன பெண் ணும் வாரிசு வேலை பெறலாம் என்றார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: கருணை அடிப்படையில் வழங் கப்படும் வேலையில் மகன், மகள் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. இந்த ஆண், பெண் இரு வரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். எனவே மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் (நிர்வாகம்) மனு தாரரின் மனுவை பரிசீலித்து, காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் தகுதிக்கு ஏற்ப வேலையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டார்.
-விடுதலை,1.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக