ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

1970ஆம் ஆண்டின் சட்டத்தை நீக்காமல் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது


உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்
சென்னை,பிப்.26- நிரந்தரத் தொழிலாளர்களும், நிரந்தர மற்ற தொழிலாளர்களும் இணைந்து போராடினால்தான் கோரிக் கைகள் நிறைவேறும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.
சிஅய்டியு, ஏஅய்டியுசி, அய்என்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று (மார்ச் 23) சென் னையில் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரிபரந்தா மன் பேசியது வருமாறு:
1970ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத னால் தொழிற்கூடங்களில் ஒப் பந்தம், தினக்கூலி உள்ளிட்ட பெயர்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனால் நிரந்தரத் தொழி லாளர்களின் பேரம் பேசும் வலிமை குறைந்தது. எனவே தான், 1970ஆம் ஆண்டின் காலகட்டத்தை விட அதிகமான சுரண்டல் தற்போது நடந்தாலும், வலுவான போராட்டங்களை தொழிற்சங்கங்களால் நடத்த முடியவில்லை.துப்புரவுத் தொழிலாளர்களில் ஒப்பந்த முறை கூடாது என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்து விட் டது. இதேபோன்று 1976ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப் பித்திருந்த ஆணையை 2001இல் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைத்தது. நிரந்தரமற்ற தொழி லாளர் முறையை ஒழிக்க உத்தர விட்டாலும், நீதிமன்றங்கள் அதனை ரத்து செய்து விடுகின்றன. இதுதான் இன்றைய நிலை.
மாருதி சுசூகி கார் தொழிற் சாலையில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக 2300 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 1800 பேர் நிரந்தர மற்ற தொழிலாளர்கள். 2012ஆம் ஆண்டு அத்தொழிற் சாலையில் ஏற்பட்ட மோதலில் மேலாளர் உயிரிழந்தார். 147 பேர் சிறை யில் அடைக்கப்பட்டனர். இரண் டரை ஆண்டுகளுக்குப் பிறகே 113 பேருக்கு பிணை கிடைத் தது. 5 ஆண்டுகளாகியும் 34 பேருக்கு பிணை கிடைக்க வில்லை. கோடிகோடியாக ஊழல் செய்தவர்களுக்கு 21 நாளில் நீதிமன்றங்கள் பிணை கொடுத்து விடுகின்றன. இந்தச் சூழலில் 1970ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை முழுமை யாக நீக்காமல் ஒப்பந்தத் தொழி லாளர் முறையை ஒழிக்க முடி யாது. இவ்வாறு அவர் பேசினார்.
சிஅய்டியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் பேசுகையில், பன் னாட்டு நிறுவனங்களும், உள் நாட்டு நிறுவனங்களும் சங்கம் அமைக்கும் உரிமையை மறுக் கின்றன. அந்நிய முதலீடுகள் வருவதாகக் கூறி சட்டங்கள் திருத்தப்படுகிறது. தொழிற்சங் கங்கள் தொழில்வளர்ச்சியை ஒருபோதும் எதிர்க்கவில்லை. அந்நிய முதலீடுகள் வேலை வாய்ப்பை உருவாக்கினால், இந்திய சட்டங்களை மதித்தால் எதற்காக எதிர்க்கப் போகி றோம்? என்று கேள்வி எழுப் பினார். தொழிலாளர் துறையின் செயலாளர்களே தொழிலாளர் களின் நலனுக்கு மாறாக செயல்படுகின்றனர். இந்தியா வில் உள்ள 44 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 சட் டங்களாக மாற்றப்போவதாக மத்திய அரசு கூறுவது, முதலாளி களுடைய நலனுக்கானது. இதற்கெதிராகத்தான் தொழி லாளர்களின் நலனுக்காக தற் போது உள்ள சட்டங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் அமல் படுத்தக் கோருகிறோம் என்றும் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.
-விடுதலை,26.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக