சென்னை, பிப். 12- சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய் திக்குறிப்பு வருமாறு:
சென்னை மாநகராட்சி எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில மற்றும் பிற அரசுத் துறை சார்ந்த பணியா ளர்கள், தனியார் நிறுவனங்க ளில் பணிபுரியும் பணியாளர் கள், தொழில் புரிவோர், வணி கர்கள் ஆகியோர் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட் டம் 1919இ-ன்படி, 6 மாதங்க ளுக்கு ஒருமுறை தொழில் வரி செலுத்த வேண்டும். மேலும் நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங் கள் நிறும வரி மூலதனத்தை பொருத்து வரி செலுத்த வேண் டும்.
2016--17 நிதியாண்டுக்கான 2-ஆம் அரையாண்டு தொழில் வரியை மார்ச் 31ஆ-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். சராசரி அரையாண்டு வருமானம் ரூ.21 ஆயிரம் வரை உள்ளோர் தொழில் வரி செலுத்த தேவையில்லை. ரூ.21 ஆயிரத்து 1 முதல் ரூ.30 ஆயிரம் வரை அரையாண்டு வருமானம் பெறு வோர் ரூ.100-ஆம், ரூ.30 ஆயிரத்து 1 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் பெறுவோர் ரூ.235-ஆம், ரூ.45 ஆயிரத்து 1 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் பெறுவோர் ரூ.510ஆ-ம், ரூ.60 ஆயிரத்து 1 முதல் ரூ.75 ஆயிரம் வரை வருமானம் பெறுவோர் ரூ.760 -ஆம், ரூ.75 ஆயிரத்து 1-க்கு மேல் வருமானம் பெறுவோர் ரூ.1095ஆ-ம் தொழில் வரியாக செலுத்த வேண்டும். இந்த வரியை மார்ச் 31-ஆம் தேதிக் குள் செலுத்த தவறும் பட்சத் தில் அபராதம் அல்லது வட்டித் தொகை கணக்கீடு செய்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,12.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக