புதுடில்லி பிப்.23 'கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதி செய்யாத ஆலைகளை மூடு வதற்கு உத்தரவிடலாம்' என, மாநில மாசு கட்டுப்பாடு வாரி யங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகளில், கழிவுநீர் கலக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசா ரித்த, தலைமை நீதிபதி, ஜே. எஸ்.கேஹர் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு பிறப் பித்துள்ள உத்தரவில் கூறியுள்ள தாவது: ஒவ்வொரு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங் களும், தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்து தொழிற் சாலைகளுக்கும், 'அடிப்படை கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி களை செய்ய வேண்டும்' என, பொதுவான அறிவிக்கைகளை அளிக்க வேண்டும்; இதற்காக மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். இந்த அவகாசம் முடிந்தபின், அந்த ஆலைகளுக்கு மாசு கட்டுப் பாட்டு வாரியம் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி செய்யாத தொழிற்சாலைகளை மூடுவதற்கு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் உத்தரவிடலாம். அவற்றுக்கு அளிக்கப்பட்டு வரும் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியங்களுக்கும் உத்தரவிடலாம்.ஒவ்வொரு உள்ளாட்சி மற்றும் நகராட்சி களிலும், பொது சுத்திகரிப்பு நிலையங்களை, மூன்று ஆண்டு களுக்குள் அமைக்க வேண்டும்; இதை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை, போதிய நிதியில் லாத நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கலாம்.இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி மற்றும் கட்டணம் குறித்து, அந்தந்த மாநில தேசிய பசுமை தீர்ப்பாய அமர் விடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, உச்சநீதிமன்றம் அமர்வு கூறியுள்ளது.
முன்னதாக, குஜராத் மாநி லத்தில், நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உத்தர விடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதை விசாரித்த, உச்சநீதி மன்றம், இது குறித்து, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச் சகம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், குஜராத் உட்பட, 19 மாநில தலைமைச் செயலர் களுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
-விடுதலை,23.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக