புதுடில்லி, பிப்.9 கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக தொழில் நிறுவனங்கள், சம்பளத்தை காசோலை மற்றும் மின்னணு பரிமாற்ற முறையில் வழங்க அவசர சட்டம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. சம்பள பட்டுவாடா சட்டத்தில் இதற்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது.
இதை தொடர்ந்து மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இது, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காசோலை அல்லது வங்கி கணக்கு மூலம் டிஜிட்டல் முறையில் சம்பளம் வழங்க வகை செய்கிறது.
,விடுதலை,9.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக