வியாழன், 9 பிப்ரவரி, 2017

பணிநிரந்தரம் செய்யக்கோரி  தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்



சென்னை, பிப். 9- -சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக, தினக் கூலி தொழிலாளர்களை உடனே பணிநிரந் தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண் டும் என வலியுறுத்தி சென்னை செங்கொடி சங்கம் சார்பில் ரிப்பன் வளாகத்தில் நேற்று பெருந்திரள் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு 2009ஆம் ஆண்டு அரசாணை 256 மூலம் 7 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 12 ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தினக்கூலிதொழிலாளர்கள் பணித்தொடர்ச்சியுடன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக் கப்பட்டனர்.

இதில்தினக்கூலி தொழிலாளர்கள் பணிநிரந்தரம் குறித்து கடந்த 5.9.2014 அன்று செங்கொடி சங்கம் (சிஅய்டியு) சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரிய செங்கொடி சங்கத்துடன் பிப்.4 அன்று பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களை விரைவில் பணிவரன் முறை செய்வதாக உறுதிக்கடிதம் அளித்தது.ஆனால் நிர்வாகம் உறுதி மொழியை இதுவரை காப்பாற்றவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இத்தொழிலாளர்கள் ஒருவருடம் காத்திருப்பிற்கு பிறகு இனி பொறுப்பதற்கில்லை என்ற முடிவோடு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-விடுதலை,9.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக