ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஒன்றிணைந்து தொழிற்சங்கங்கள் போராடினால் வெற்றி பெறலாம்

நீதியரசர் அரி.பரந்தாமன்
சென்னை, பிப். 12- பிரிந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெற லாம் என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதி பதி அரி.பரந்தாமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில கருத்தரங்கம் சென்னையில் நேற்று (10.2.2017) நடைபெற்றது. இதில், அரி. பரந்தாமன் பேசியதாவது:-
கருத்தரங்கில் நிறைவேற்றப் பட்டுள்ள 11 தீர்மானங்களில் 7 தீர்மானங்கள் மக்களுக்கானது. கோரிக்கைகளுக்காக மக்கள் வீதிகளில் இறங்கி போராடி னால்தான், அவசரச் சட்டமே கொண்டு வர முடியும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங் கியும் இன்று வரை ஓய்வு பெற்ற நீதிபதிக்கு ஓய்வூதியம் வழங்கும் முறை அமல்படுத்தப் படவில்லை.
கல்வி, மருத்துவம் உள் ளிட்ட அனைத்து துறைகளிலும் தனியார் மயத்தின் தாக்கம் அதி கமாக உள்ளது. நீட், மீனவர், காவிரி மேலாண்மை வாரியம், 7 தமிழர்கள் விடுதலை, லோக் பால், லோக் ஆயுக்த உள்ளிட்ட பிரச்சினைகளை தொழிற்சங் கங்கள் விவாதிக்க வேண்டும். அதன்படி, பிரிந்து நிற்கும் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் வெற்றி பெற லாம் என்றார்.
முன்னதாக, சங்கத்தின் சிறப் புத் தலைவர் கு.பாலசுப்ரமணி யன் பேசியதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நியாய விலைக் கடைக்கு அரசு அனுப்பும் பொருள்களை சரியான எடையளவுடன் அனுப்புமாறு கேட்கிறோம். எந்த அரசும் அதைச் செய்வ தில்லை. தமிழகத்தில் 2 கோடியே 4 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால், இன்றளவும் போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன.
அரசு அறிவித்ததைப் போன்று ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கவேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், காலவ ரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.
-விடுதலை,12.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக