திங்கள், 13 பிப்ரவரி, 2017

தொழிலாளர்களையும், தொழிலதிபராக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர் வீகேயென்

மு.க.ஸ்டாலின் இரங்கல்

திருச்சி, பிப். 13- மறைந்த தொழி லதிபர் வீகேயென் கண்ணப்பன் அவர்களின் உடலுக்கு திருச்சி யில் நேற்று (12-.2.-2017)  தி.மு.க செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி னார். பின்னர் அவர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில்:

வீகேயென் என்று திருச்சி மக்களால் அன்போடு அழைக் கப்படும் வீகேயென் கண்ணப் பன் அவர்களின் திடீர் மறைவு என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. பண்பிற்கும், பாசத் திற்கும் அவர் போல் இன்னொ ருவரை அடையாளம் கண்டு பிடிப்பது மிகவும் அரிது.

தொழிலதிபரையும், கழக தொண்டரையும் இழந்து நான் தவிக்கிறேன். நான் மட்டுமல்ல தி.மு.க. தலைவர் கலைஞர், கழக குடும்பத்தில் உள்ள அனை வருமே தவிக்கிறோம். பெரி யார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணை வேந்தரான வீகேயென் கண்ணப்பன் அவர் கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத் தில் ஈடுபாடு கொண்டவர்.

கழகத்தில் எந்தப் பதவியும் பெறாமல் கழக உணர்வுடன், கழகத் தொண்டர்களுக்காகப் பாடுபட்டவர். மிசா அடக்கு முறைகளையும் மீறி கழகக் கொடியை துணிச்சலுடன் எங் கும் பயன்படுத்தியவர். கழக ஆட்சி இருந்த போது புகழ் பெற்ற திருச்சி சமயபுரம் மாரி யம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக அரும் பெரும் நற்பணிகளை செய்தவர் என் பதை திருச்சி மக்கள் மறக்க மாட்டார்கள்.

தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டும் தொழிலதி பர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர். இதுவரை 110க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து சொந்தமாக தொழில் துவங்க வைத்துள்ளார். தொழிலாளிகளையும் தொழில திபராக்க வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வை கொண்ட அவரை இன்றைக்கு தொழிலாளர் வர்க்கமும் இழந்து தவிக்கிறது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலும் அவருக்கு எனது மரி யாதையை செலுத்தியிருக்கி றேன். அவரை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும், வீகேயென் குழுமத்தில் அடங்கிய கம்பெ னிகளின் தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

-விடுதலை,13.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக