ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

தொழிலதிபர் வீகேயென் கண்ணப்பன் உடலுக்கு தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து மரியாதை


திருச்சி, பிப்.12 பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக இணை வேந்தரும், தொழிலதிபரும், வீகே யென் நிறுவனங்களின் உரிமை யாளருமான மறைந்த வீகேயென் கண்ணப்பன் அவர்களின் உட லுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், மோகனா அம்மையாரும் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத் தினார்கள்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.குணசேகரன், பெரியார் மணி யம்மை பல்கலைகழக துணை வேந்தர் நல்.இராமச்சந்திரன், திருச்சி பெரியார் கல்வி நிறு வனங்களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், திருச்சி மண்டலத் தலைவர் ஆரோக்கி யராஜ், செயலாளர் நற்குணன், திருச்சி மகாலிங்கம், கணேசன், மாவட்டச் செயலாளர் மோகன்தாஸ், ஆல்பர்ட், மு.சேகர், தஞ்சை மு.அய்யனார், நெய்வேலி வெ.ஜெயராமன், வழக்குரைஞர் சி.அமர்சிங், நெய்வேலி வெ.ஞானசேகரன், காரைக்குடி என்னாரெசு பிராட்லா மற்றும் பெரியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட ஏராளமானவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
குடும்பத்தினருக்கு
தமிழர் தலைவர் ஆறுதல்
பொறியாளர்கள் வீகேயென் ராஜா, வீகேயென் கல்யாண், வீகேயென் நாராய ணன், வீகேயென் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஆறுதல் கூறினார்.
-விடுதலை,12.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக