ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

1970ஆம் ஆண்டின் சட்டத்தை நீக்காமல் ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்க முடியாது


உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்
சென்னை,பிப்.26- நிரந்தரத் தொழிலாளர்களும், நிரந்தர மற்ற தொழிலாளர்களும் இணைந்து போராடினால்தான் கோரிக் கைகள் நிறைவேறும் என்று சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.
சிஅய்டியு, ஏஅய்டியுசி, அய்என்டியுசி உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் சார்பில் வியாழனன்று (மார்ச் 23) சென் னையில் ஒப்பந்தத் தொழிலா ளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரிபரந்தா மன் பேசியது வருமாறு:
1970ஆம் ஆண்டு ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத னால் தொழிற்கூடங்களில் ஒப் பந்தம், தினக்கூலி உள்ளிட்ட பெயர்களில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனால் நிரந்தரத் தொழி லாளர்களின் பேரம் பேசும் வலிமை குறைந்தது. எனவே தான், 1970ஆம் ஆண்டின் காலகட்டத்தை விட அதிகமான சுரண்டல் தற்போது நடந்தாலும், வலுவான போராட்டங்களை தொழிற்சங்கங்களால் நடத்த முடியவில்லை.துப்புரவுத் தொழிலாளர்களில் ஒப்பந்த முறை கூடாது என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்து விட் டது. இதேபோன்று 1976ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப் பித்திருந்த ஆணையை 2001இல் உச்சநீதிமன்றம் ரத்து செய்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைத்தது. நிரந்தரமற்ற தொழி லாளர் முறையை ஒழிக்க உத்தர விட்டாலும், நீதிமன்றங்கள் அதனை ரத்து செய்து விடுகின்றன. இதுதான் இன்றைய நிலை.
மாருதி சுசூகி கார் தொழிற் சாலையில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக 2300 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 1800 பேர் நிரந்தர மற்ற தொழிலாளர்கள். 2012ஆம் ஆண்டு அத்தொழிற் சாலையில் ஏற்பட்ட மோதலில் மேலாளர் உயிரிழந்தார். 147 பேர் சிறை யில் அடைக்கப்பட்டனர். இரண் டரை ஆண்டுகளுக்குப் பிறகே 113 பேருக்கு பிணை கிடைத் தது. 5 ஆண்டுகளாகியும் 34 பேருக்கு பிணை கிடைக்க வில்லை. கோடிகோடியாக ஊழல் செய்தவர்களுக்கு 21 நாளில் நீதிமன்றங்கள் பிணை கொடுத்து விடுகின்றன. இந்தச் சூழலில் 1970ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை முழுமை யாக நீக்காமல் ஒப்பந்தத் தொழி லாளர் முறையை ஒழிக்க முடி யாது. இவ்வாறு அவர் பேசினார்.
சிஅய்டியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் பேசுகையில், பன் னாட்டு நிறுவனங்களும், உள் நாட்டு நிறுவனங்களும் சங்கம் அமைக்கும் உரிமையை மறுக் கின்றன. அந்நிய முதலீடுகள் வருவதாகக் கூறி சட்டங்கள் திருத்தப்படுகிறது. தொழிற்சங் கங்கள் தொழில்வளர்ச்சியை ஒருபோதும் எதிர்க்கவில்லை. அந்நிய முதலீடுகள் வேலை வாய்ப்பை உருவாக்கினால், இந்திய சட்டங்களை மதித்தால் எதற்காக எதிர்க்கப் போகி றோம்? என்று கேள்வி எழுப் பினார். தொழிலாளர் துறையின் செயலாளர்களே தொழிலாளர் களின் நலனுக்கு மாறாக செயல்படுகின்றனர். இந்தியா வில் உள்ள 44 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 சட் டங்களாக மாற்றப்போவதாக மத்திய அரசு கூறுவது, முதலாளி களுடைய நலனுக்கானது. இதற்கெதிராகத்தான் தொழி லாளர்களின் நலனுக்காக தற் போது உள்ள சட்டங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் அமல் படுத்தக் கோருகிறோம் என்றும் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.
-விடுதலை,26.2.17

100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள்

வேலை வாய்ப்பு தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, பிப்.26 வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கும் கூடுதலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பினை வழங்க மத்திய அரசு அனு மதியளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர் புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாட்டின் 31 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சி களிலும் சிறப்பாக செயல்படுத் தப்படுகிறது. 2016--17-ஆம் ஆண் டில் இத்திட்டத்தின் கீழ் தமிழ கத்தில் இதுவரை 33.43 கோடி தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டதில் தொழிலாளர் களுக்கு ஊதியமாக 4,655 கோடி வழங் கப்பட்டுள்ளது. முந்தைய நிதி யாண்டுடன் ஒப்பிடு கையில், தமிழகத்தில் நிலவும் வறட்சி யின் காரணமாக, 2016-17-ஆம் ஆண்டில் மூன்று கோடி தொழி லாளர்கள் பயன்படுத்தும் நாட் கள் அதிகரித்துள்ளன.
இத்திட்டத்தின்கீழ் தினமும் சராசரியாக 12 லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்த நிலை யில், தற்போது வறட்சி காரண மாக இத்திட்டத்தின்கீழ் பயன டையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு 32 மாவட் டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்துள் ளதைத் தொடர்ந்து,  தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையினை ஏற்று, மத்திய அரசு நடப்பு நிதியாண்டில்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப் பட்ட 100 நாட்களுக்கும், கூடு தலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பினை வழங்க அனும தித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 23 லட்சம் கிராமப்புறத் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டத் தின் கீழ் வறட்சியிலிருந்து பாது காத்து கொள்ளும் நடவடிக்கை களாக குட்டைகள், ஏரிகளை தூர் வாருதல் மற்றும் பண் ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை,26.2.17

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

பிப். 28இல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்




சென்னை, பிப்.24 அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும், வங்கி ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய உயர்வுக் கான நடவடிக்கைகளை முன்கூட்டியே தொடங்க வேண்டும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூடுதல் நேரம் பணியாற்றிய தால் அதற்கான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும், வங்கிப் பணிகளை அயல்பணிகளாக அளிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக் கப்பட்டது.

இதையடுத்து, மத்திய அரசு தொழி லாளர் துறை தலைமை ஆணையர் முன்னிலையில் நேற்றுமுன்தினம் டில்லி யில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், இந்திய வங்கிகள் கூட்ட மைப்பு, அய்க்கிய வங்கிகள் தொழிற்சங்கம் ஆகியவை பங்கேற்றன.

இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் 28-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
-விடுதலை,24.2.17

வியாழன், 23 பிப்ரவரி, 2017

கழிவுநீரை சுத்திகரிக்காத ஆலைகளை மூட உத்தரவிடலாம் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி பிப்.23 'கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதி செய்யாத ஆலைகளை மூடு வதற்கு உத்தரவிடலாம்' என, மாநில மாசு கட்டுப்பாடு வாரி யங்களுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலைகளில், கழிவுநீர் கலக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசா ரித்த, தலைமை நீதிபதி, ஜே. எஸ்.கேஹர் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு பிறப் பித்துள்ள உத்தரவில் கூறியுள்ள தாவது: ஒவ்வொரு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங் களும், தங்கள் எல்லைக்கு உட்பட்ட அனைத்து தொழிற் சாலைகளுக்கும், 'அடிப்படை கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி களை செய்ய வேண்டும்' என, பொதுவான அறிவிக்கைகளை அளிக்க வேண்டும்; இதற்காக மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும். இந்த அவகாசம் முடிந்தபின், அந்த ஆலைகளுக்கு மாசு கட்டுப் பாட்டு வாரியம் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி செய்யாத தொழிற்சாலைகளை மூடுவதற்கு, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் உத்தரவிடலாம். அவற்றுக்கு அளிக்கப்பட்டு வரும் மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரியங்களுக்கும் உத்தரவிடலாம்.ஒவ்வொரு உள்ளாட்சி மற்றும் நகராட்சி களிலும், பொது சுத்திகரிப்பு நிலையங்களை, மூன்று ஆண்டு களுக்குள் அமைக்க வேண்டும்; இதை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை, போதிய நிதியில் லாத நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கலாம்.இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி மற்றும் கட்டணம் குறித்து, அந்தந்த மாநில தேசிய பசுமை தீர்ப்பாய அமர் விடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, உச்சநீதிமன்றம் அமர்வு கூறியுள்ளது.

முன்னதாக, குஜராத் மாநி லத்தில், நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உத்தர விடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதை விசாரித்த, உச்சநீதி மன்றம், இது குறித்து, மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச் சகம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், குஜராத் உட்பட, 19 மாநில தலைமைச் செயலர் களுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

-விடுதலை,23.2.17

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை, பிப். 23- 7ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழி யர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி யமைக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத் துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடை பெற்றது.இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந் துரைத்துள்ள திருத்திய ஊதிய விகி தங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற் கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இக்குழுவில் உறுப்பினர்களாக, நிதித்துறை கூடுதல் தலைமை செய லாளர், உள்துறை முதன்மை செய லாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர் வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், பி.உமாநாத் (உறுப்பினர் செயலாளர்) ஆகியோர் இருப்பர்.இந்த அலுவலர் குழு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவ லர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றி யமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் - குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதிய தாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந் துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரை களை வழங்கும்.

அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற் றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரிய வாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தர விட் டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங் கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர் களும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் பங்கேற்றனர்.

-விடுதலை,23.2.17

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சிவகாசியில் 800 பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

விருதுநகர், பிப். 21- 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வா தாரமான பட்டாசுத் தொழி லைப் பாதுகாக்க வேண்டும்.

மேலும், விபத்துகளை தவிர்க் கும் வகையில் தேவையான விதிமுறைகளை உருவாக்கிட தமிழக அரசும், பட்டாசு உற் பத்தியாளர்களும் தொழிற்சங் கங்களும் கூட்டாக விவாதித்து முடிவு செய்திட வேண்டும். ஆலை மூடலை கைவிட வேண் டும். உடனே ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் அறிக்கை வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கை யில் கூறியதாவது : விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சுற்றிலும் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளிலும், அதைச் சார்ந்த உப தொழில்களிலும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

விபத்துகளை தடுத்திட அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து பட் டாசு உற்பத்தியாளர்கள் பிப்ர வரி 20 முதல் காலவரையற்ற ஆலை மூடலை அறிவித்துள்ள னர். திடீரென ஆலை மூடல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்து கடும் பாதிப்புக்குள் ளாகி உள்ளனர். கடந்த 2016 ஜூலை 2 இல் சிவகாசி பைபாஸ் சாலையில் பட்டாசு கடைக்கு அனுமதி வாங்கி விட்டு கடையின் பின்னால் ரசாயன மருந்து குடோன் வைத்திருந்ததால் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், கடைகள், வீடுகள் இடிந்தன.

இரு சக்கர வாகனங்கள் எரிந்தன. அருகிலிருந்த 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த அக்டோபர் 20 இல் தேவகி ஸ்கேன் மய்யத்தின் அருகில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தை யொட்டி மருத்துவர் உள்பட 9 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மது ரைக் கிளை தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. தமிழக அரசு, உயிரிழந்தவர் களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம் இழப்பீடு வழங்க இடைக்கால உத்தரவு பிறப் பித்தது. பட்டாசுக் கடை அரு கில் 4 புறமும் 3 மீட்டர் தூரம் எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது. கடைகளில் பட்டாசு காட்சிப் பொருளாக மட்டுமே வைக்க வேண்டும். ஊருக்கு வெளியே குடோன்கள் அமைத்து பட்டாசுகளை அங்குதான் வைக்க வேண்டும். குடியிருப் புப் பகுதி, பள்ளிக்கூடம், மருத் துவமனைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றிலிருந்து 50 மீட்டர் தள்ளி குடோன் அமைக்க வேண்டும்.

விபத்தினை தவிர்க்க விபத்துத் தடுப்பு உபகரணங் கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை வகுத்திருப்பதாக கூறப் படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல தவறான கொள் கைகளால் பல தொழில்களை போலவே பட்டாசு தொழிலும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. இதனை எதிர்த்திட உற்பத்தியாளர்களும் தொழிலா ளர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும். அதேநேரம் வாழ் வதற்குத்தான் வேலையே தவிர சாவதற்கு அல்ல, பாதுகாப் பான சிவகாசி, விபத்தில்லாத பட்டாசுத் தொழில் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. விபத்து களை தவிர்க்கும் வகையில் தேவையான விதிமுறைகளை உரு வாக்கிட தமிழக அரசும், பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிற்சங்கங்களும் கூட்டாக விவாதித்து முடிவு செய்திட வேண்டும். ஆலை மூடலை கைவிட வேண்டும். உடனே ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-விடுதலை,21.2.17

கணினித் துறையில் 65 சதவீத பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் நாஸ்காம் நடத்திய கருத்தரங்கில் தகவல்

புதுடில்லி, பிப்.21 இந் திய கம்ப்யூட்டர் சாப்ட்வேர்  துறை அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகளை நம் பியே இருக்கிறது. இந்திய என்ஜினீயர்கள் பெரும்பா லோர் அமெரிக்க நிறுவனங் களுக்காக நேரடியாகவோ அல்லது அவுட்சோர்சிங் முறை யிலோ பணியாற்றி வருகிறார்கள்.

ஆனால் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பணிகள் வெளிநாட்டினருக்கு செல்வதை விரும்பாமல் அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதனால் இந்திய சாப்ட் வேர் என்ஜினீயர்கள் பெரும் பாலானோர் வேலை இழக் கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 80 சதவீத என்ஜினீயர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதிய தொழில்நுட்ப வரவால் இந் திய என்ஜினீயர்கள் பெரு மளவில் பாதிக்கப்படுவார்கள் என்று இப்போது புதிய தக வல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்திய கம்ப்யூட்டர் தொழில் நிறுவனங்களின் கூட் டமைப்பு (நாஸ்காம்) நடத் திய தலைமை பண்பு கருத் தரங்கம் நடந்தது. இதில் பிரபல பிரெஞ்சு கம்ப்யூட்டர் நிறுவனமான கேப்கேமினி நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி சிறீனிவாஸ் காண்டுலா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தகவல் தொழில்நுட்ப துறையில் புதிய தொழில் நுட் பங்கள் வேகமாக ஊடுருவி வருகின்றன. குறிப்பாக டிஜிட் டல் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தகுந்த மாதிரி பணியாற்றுவதற்கு இந்திய என்ஜினீயர்களுக்கு போதிய திறன் பயிற்சி இல்லை.

இந்தியாவில் சாப்ட்வேர் துறையில் 39 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச் சிக்கு தகுந்தமாதிரி பயிற்சி பெற்று வருகிறார்கள். பெரும் பாலானோருக்கு இதுபற்றிய விவரங்கள் எதுவும் போத வில்லை.

பல கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு அடிப் படை தொழில்நுட்ப அறிவு கூட இல்லை. அந்த கல்லூ ரிகள் மிக தரம் தாழ்ந்த அள வில் இருப்பதால் மாணவர் களை உரிய முறையில் தயார் படுத்தவில்லை. அதுபோன்ற நபர்களை இந்த பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. பல மாணவர்களிடம் தாங்கள் எழுதிய கடைசி செமஸ்டர் தேர்வு பற்றி கேள்வி கேட் டால் கூட பதில் சொல்ல தெரிய வில்லை. இப்படிப்பட்டவர் களால் எந்த பயனும் இருக் காது. இனி அவர்களுக்கு பயிற்சி அளித்து இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்தவும் முடியாது.

ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கும் இந்த தொழில்நுட்ப திறன் இல்லை. எனவே இதன் காரணமாக 65 சதவீத நடுநிலை மற்றும் சீனியர் அளவிலான என்ஜினீயர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இதை தடுக்க வேண்டும் என்றால் மாண வர்கள் இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனைத்து திறனும் பெற்றவர்களாக வெளி வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

-விடுதலை,°21.2.17

பி.எஃப். தொகையைப் பெற இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி



சென்னை, பிப்.20 வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத் திய பணம், ஓய்வூதிய முதிர்வுத் தொகை, காப்பீட்டுத் தொகை ஆகியவற்றை இணையதளம் மூலமாக விண்ணப்பித்துப் பெறும் வசதி, வரும் மே மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போது காப்பீட்டுத் தொகை, முதிர்வுத்தொகை ஆகிய வற்றை கோரி, சுமார் ஒரு கோடி விண்ணப்பங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப் புக்கு (இ.பி.எஃப்.) கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த விண்ணப்பங்களை இ.பி.எஃப். அமைப்பின் ஊழி யர்கள் சரிபார்த்து, சந்தாதாரர் களுக்கு உரிய தொகையை வழங் குவதற்கு கால தாமதமாகிறது. எனவே, அவர்களுக்கு தாமத மின்றி சேவைகளை வழங்குவதற் காக, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து, இ.பி.எஃப். ஆணையர் வி.பி.ஜாய், கூறிய தாவது: அனைத்து இ.பி.எஃப். அலுவலகங்களும் இன்னும் இரண்டு மாதங்களில் மய்யக் கணினி அமைப்பு (சர்வர்) மூலம் இணைக்கப்படும். அதன் பிறகு, அனைத்து வகையான விண்ணப் பங்களுக்கும் இணையதளம் மூலமாகவே சேவைகள் அளிக் கப்படும்.

இதற்காக, முதல் கட்டமாக, 50 மண்டல அலுவலகங்கள் தற்போது மய்யக் கணினி அமைப்புடன் இணைக்கப்பட் டுள்ளன. மொத்தமுள்ள 123 மண் டல அலுவலகங்களும் மய்யக் கணினி அமைப்புடன் இணைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

இணையவசதி முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, சந்தாதாரர்கள் விண்ணப்பித்த சில மணி நேரத்திலேயே அவர் களது விண்ணப்பம் சரிபார்க்கப் பட்டு, அவர்களுக்கு உரிய சேவையை வழங்குவதற்கு இ.பி. எஃப். அமைப்பு திட்டமிட்டுள் ளது.

இதனிடையே, அனைத்து பி.எஃப். சந்தாதாரர்களும், ஓய் வூதியதாரர்களும் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்று பி.எஃப். அமைப்பு கேட்டுக் கொண் டுள்ளது. மேலும், சந்தாதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு, வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

-விடுதலை,20.2.17

திங்கள், 13 பிப்ரவரி, 2017

வாழ்க்கை இணையேற்பு விழா




கோ. கருணாநிதி - சுகுணா ஆகியோரது இளைய மகன் க. அறிவழகனுக்கும், ச. சித்தார்த்தன் -- க. தமிழ்ச்செல்வி ஆகியோரது இளைய மகள் சி. அமிர்த சுபாவுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா அம்மையார் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (தஞ்சாவூர், 12.2.2017) 

-விடுதலை,13.2.17

தொழிலாளர்களையும், தொழிலதிபராக்க வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர் வீகேயென்

மு.க.ஸ்டாலின் இரங்கல்

திருச்சி, பிப். 13- மறைந்த தொழி லதிபர் வீகேயென் கண்ணப்பன் அவர்களின் உடலுக்கு திருச்சி யில் நேற்று (12-.2.-2017)  தி.மு.க செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தி னார். பின்னர் அவர் வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில்:

வீகேயென் என்று திருச்சி மக்களால் அன்போடு அழைக் கப்படும் வீகேயென் கண்ணப் பன் அவர்களின் திடீர் மறைவு என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. பண்பிற்கும், பாசத் திற்கும் அவர் போல் இன்னொ ருவரை அடையாளம் கண்டு பிடிப்பது மிகவும் அரிது.

தொழிலதிபரையும், கழக தொண்டரையும் இழந்து நான் தவிக்கிறேன். நான் மட்டுமல்ல தி.மு.க. தலைவர் கலைஞர், கழக குடும்பத்தில் உள்ள அனை வருமே தவிக்கிறோம். பெரி யார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இணை வேந்தரான வீகேயென் கண்ணப்பன் அவர் கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத் தில் ஈடுபாடு கொண்டவர்.

கழகத்தில் எந்தப் பதவியும் பெறாமல் கழக உணர்வுடன், கழகத் தொண்டர்களுக்காகப் பாடுபட்டவர். மிசா அடக்கு முறைகளையும் மீறி கழகக் கொடியை துணிச்சலுடன் எங் கும் பயன்படுத்தியவர். கழக ஆட்சி இருந்த போது புகழ் பெற்ற திருச்சி சமயபுரம் மாரி யம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக அரும் பெரும் நற்பணிகளை செய்தவர் என் பதை திருச்சி மக்கள் மறக்க மாட்டார்கள்.

தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டும் தொழிலதி பர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர். இதுவரை 110க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளித்து சொந்தமாக தொழில் துவங்க வைத்துள்ளார். தொழிலாளிகளையும் தொழில திபராக்க வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வை கொண்ட அவரை இன்றைக்கு தொழிலாளர் வர்க்கமும் இழந்து தவிக்கிறது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலும் அவருக்கு எனது மரி யாதையை செலுத்தியிருக்கி றேன். அவரை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும், வீகேயென் குழுமத்தில் அடங்கிய கம்பெ னிகளின் தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.

-விடுதலை,13.2.17