பிஎப் பணத்தை முழுவதுமாக எடுத்து வீடு வாங்குவதற்கு புதிய திட்டம் விரைவில் அமல் படுத்தப்பட இருக்கிறது. இதற் கான பரிந்துரையை பிஎப் நிறுவனம் தொழிலாளர் அமைச்ச கத்துக்கு அனுப்பியுள்ளது.பிஎப் சந்தாதாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியை (பிஎப்) அட மானமாக வைத்து வீடு வாங்கிக் கொள்ளும் திட்டம் செயல்படுத்த ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டி ருந்தது.
கடந்த 2015இல் இதுகுறித்து பிஎப் அறங்காவலர் கூட்டத்தில் முன்வரைவு வைக்கப்பட்டது. வீட்டுக்கான முன்பணம் மற்றும் தவணை தொகையை இதில் செலுத்திக் கொள்ளலாம். வீட்டு வசதி மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு அமைச்சக திட்ட பலன் களையும் இத்திட்டத்தில் விரிவு படுத்த பரிந்துரை செய்திருந்தது.
இதுதவிர பிஎப் சந்தாதாரர்கள் குறைந்த விலையில் வீடு வாங் கிக் கொள்ளும் திட்ட சாத்தியக் கூறுகைளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
இந்நிலையில், பிஎப் பணத் தில் வீடு வாங்குவதற்கான திட்டத்தை தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி நிறுவனம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய் துள்ளது. குழு வீடு திட்டத்துக்கான புதிய விதியை சேர்க்க இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிஎப் சந்தாதாரர்கள் 10 அல்லது அதற்கு மேல் சேர்ந்து ஒரு கூட்டுறவு சங்கத்தை ஏற் படுத்தி குழுவாக விண்ணப்பித்து இடம் தேர்வு செய்து வாங்கி வீடு கட்டிக் கொள்ளலாம். வீடாக தேர்வு செய்தும் வாங்கிக் கொள் ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் சிறப்பு அம்சமாக பிஎப் பணத்தை வீடு கட்ட முழுவதுமாக எடுத்துக் கொள்ள முடியும். அதோடு, அதற் கான தவணையை கூட மாதாந்திர பிஎப் பிடித்தம் செய்யப்படும் தொகையில் இருந்து செலுத்தி விடலாம் என்பது குறிப்பிடத் தக்கது.
-விடுதலை,28.1.17