நெய்வேலி, ஆக.24_ நெய்வேலி, என்.எல்.சி. தொழிலாளர்களின் போ ராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கக் கூட்ட மைப்பினர் தெரிவித்தனர்நெய்வேலி, என்.எல்.சி. நிர்வாகம் தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரத்தை ஞாயிற்றுக்கிழமை வெளி யிட்டு, வேலைநிறுத்தத் தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுத்தது.
இதைத் தொடர்ந்து, ஹெச்.எம்.எஸ். தொழிற் சங்க அலுவலக வளாகத் தில் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பி னரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், நிர்வாகம் வெளியிட்ட சம்பள விகிதம் அறிக்கை குறித்து விவாதிக்கப் பட்டது.
அதன் பின்னர், செய்தி யாளர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: என்.எல்.சி. நிர்வாகம் ஊழியர்களின் சம்பளம் குறித்து தவறான தகவல் களை கொடுத்து வரு கின்றது. நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றும் தொழிலாளிக்குகூட ரூ.75,000 சம்பளம் வழங்கப் படவில்லை. 4,200 அதிகாரி கள், பொறியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.850 கோடி சம்பளமாக வழங்கப்படு கிறது. ஆனால், 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,300 கோடி சம்பளமாக வழங்கப்படுகின்றது.
கடைநிலைத் தொழி லாளிக்கு அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, பஞ்சப்படி சேர்ந்து சம்பள மாக ரூ.19,277 கிடைக்கிறது. 35 வருடம் பணி முடித்தத் தொழிலாளிக்கு சம்பள மாக ரூ.53,110 கிடைக்கிறது. நிர்வாகம் 10 சதவீதம் உயர்வு வழங்கும் பட்சத்தில் கடைநிலைத் தொழி லாளிக்கு ரூ.20,820-ம், 35 வருடம் பணி முடித்த தொழிலாளிக்கு ரூ.57,340 மட்டுமே கிடைக்கும். ஆனால், புதிதாக பணியில் சேரும் தொழிலாளிக்கு சம்பளமாக ரூ.23,569-ம், அதிகாரிக்கு ரூ.59,885-ம் சம்பளமாக கிடைக்கிறது.
அதுவே, 35 வருடம் பணி முடித்த தொழி லாளிக்கு ரூ.72,150-ம், அதிகாரிக்கு ரூ.1,82,375 மொத்த சம்பளமாக கிடைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த பொதுத் துறை நிறுவனத்திலும் இல்லாத அளவிற்கு 3 தொழி லாளிக்கு 1 அதிகாரி என்ற விகிதத்தில் பணியாற்றும் நிலைமை என்.எல்.சி. நிறு வனத்தில்தான் உள்ளது என்று தொழிற்சங்க நிர்வா கிகள் தெரிவித்தனர்.
அதுவே, 35 வருடம் பணி முடித்த தொழி லாளிக்கு ரூ.72,150-ம், அதிகாரிக்கு ரூ.1,82,375 மொத்த சம்பளமாக கிடைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த பொதுத் துறை நிறுவனத்திலும் இல்லாத அளவிற்கு 3 தொழி லாளிக்கு 1 அதிகாரி என்ற விகிதத்தில் பணியாற்றும் நிலைமை என்.எல்.சி. நிறு வனத்தில்தான் உள்ளது என்று தொழிற்சங்க நிர்வா கிகள் தெரிவித்தனர்.
மேலும், அனைத்துத் தொழிற்சங்கங்களின் மத்திய நிர்வாகிகள் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில், சுமூக முடிவு ஏற்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
-விடுதலை,24.8.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக