நெய்வேலி, ஆக.28_ ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேறாத நிலையில், என்.எல்.சி., தொழிலா ளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம், நேற்று (27.8.2015) விலக்கிக் கொள்ளப்பட்டது.
என்.எல்.சி., நிரந்தர தொழிலாளர்களுக்கு, 2012 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து வழங்க வேண் டிய ஊதிய உயர்வு குறித்து, அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கங்கள், நிர்வாகத்துடன் நடத்திய பல கட்ட பேச்சில், சுமுக முடிவு எட்டப்பட வில்லை; மண்டல தொழி லாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சும் தோல்வி அடைந் தது; இதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க, தொழிலாளர் நல ஆணை யகம் தயாரானது.
அப்படி அறிவித்தால், ஊதிய மாற்று ஒப்பந்த விவகாரம், நடுவர் மன்றத் துக்கு செல்லும் நிலை ஏற் படும். இதனால், தொழிற் சங்க நிர்வாகிகளுடன் என்.எல்.சி., நிர்வாகம், நேற்று முன்தினம், சென் னையில், மண்டல தொழி லாளர் நல ஆணையர் முன்னிலை யில், மீண்டும் பேச்சு நடத்தியது. அப் போது எடுக்கப்பட்ட முடிவுகள், பெரும்பாலான தொழிலாளர்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற் படுத்தியது.
இதைத் தொடர்ந்து, நேற்று மதியம், 12 மணி யளவில், நெய்வேலி, அய்.என்.டி.யு.சி., தொழிற் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தொ.மு.ச., பொதுச்செய லாளர் ராசவன்னியன் பேசுகையில்,
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை களை என்.எல்.சி., நிர் வாகம் நிறைவேற்றித் தர, ஒரு வாரம் அவகாசம் தருகிறோம்; அதற்குள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என அறிவித்து, போராட்டத்தைத் திரும் பப் பெறுகிறோம்.
இன்று (நேற்று) இரவு, 10 மணிமுதல் அனைத்து நிரந்தர தொழிலாளர் களும் பணிக்குச் செல்ல வேண்டும், என்றார். இதையடுத்து, 39 நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் பணிக் குத் திரும்பினர்.
-விடுதலை,28.8,15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக