வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தமிழ்நாட்டில் நட்டக் கணக்கு கூறிய ஃபாக்ஸ்கான் நிறுவனம்

தமிழ்நாட்டில் நட்டக் கணக்கு கூறிய ஃபாக்ஸ்கான் நிறுவனம்
மகாராட்டிரத்தில் ரூ.32 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தமாம்!
இளித்தவாய் தமிழகம்தானா?
புதுடில்லி, ஆக.12_ தைவா னிலிருந்து பன்னாட்டுத் தொழில் நிறுவனமாக இந்தியாவில் காலடி வைத்த நிறுவனம்தான் ஃபாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் சென் னையை அடுத்துள்ள காஞ் சிபுரம் மாவட்டத்திலுள்ள சிறீபெரும்புதூரில் தமிழக அரசின் அனைத்துவித சலுகைகளையும் பெற்று தொழிற்சாலையைத் தொடங்கியது. மாநில அரசு வழங்கிய அனைத்து உதவிகள், மின் சார வசதிகள், இட வசதி என அனைத்து மட்டத்தி லிருந்தும் சலுகைகளைப் பெற்று நிலைபெற்ற அந் நிறுவனத்தில் சுமார் 1500 தொழி லாளர்கள் பணி யாற்றியுள்ளனர்.
நோக்கியா கைபேசி களின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து தரும் பணியை மேற்கொண்ட அந்நிறுவனம் லாபங்களை சுருட்டிக் கொண்டு, நோக் கியா ஆலை மூடிய கார ணத்தைக் காட்டி, நட்டக் கணக்கைக் காட்டிவிட்டு கம்பிநீட்ட திட்டமிட்டது.
தொழிலாளர்கள் தங் களின் வாழ்வாதாரத்துக் காக பெரிதும் களமிறங்கிப் போராடிவந்தனர். அரசு சார்பில் பேச்சுவார்த்தை என்றும், அவ்வப்போது தொழிலாளர் போராட் டங்கள் என்றும் காலத்தை கடத்திவந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் திடீரென ஆலையை மூடிவிட்டதாக அறிவித்தது.
தமிழகத்தில் நட்டக் கணக்கு காட்டி, ஃபாக்ஸ் கான் நிறுவனம் சிறீ பெரும்புதூரில் இயங்கிவந்த ஆலையை இழுத்து மூடி விட்டு சென்றுவிட்டது. இது தமிழகத்திலிருந்து மட்டும்தான். அந்நிறுவனம் இந்தியாவைவிட்டு வெளி யேறியதாகவே பலரும் எண்ணிவரும் நிலையில், முற்றிலும் அதற்கு மாறாக அதே நிறுவனம் இந்தி யாவிலேயே, மகாராட்டிர மாநிலத்தின் முதல்வர் பட்னாவிசுடன் ஒப்பந்தம் போட்டு 500 கோடி அமெ ரிக்க டாலர் (ரூபாய் 32 ஆயிரம் கோடி) மதிப்பில் 5 ஆண்டுகளுக்கு தொழிற்சாலை அமைத்து நடத்திட ஒப்பந்தம் போட் டுள்ளது.
இதே ஃபாக்ஸ்கான் நிறுவனம்தான் தமிழகத் தில்  சிறீபெரும்புதூரில் 1500 தொழிலாளர் குடும் பங்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு தொழிற் சாலையை கடந்த டிசம் பரில் இழுத்து மூடிவிட் டது. அந்தத் தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வா தாரத்தை இழந்து நடுத் தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழக அரசின் சார்பில் முத் தரப்புப் பேச்சுவார்த்தை ஆறு கட்டங்களாக நடை பெற்றும், தொழிலாளர் களுக்கு கடந்த ஜனவரி மாதத்துக்குரிய ஊதியத் தைக்கூட அளிக்க மறுத்து விட்டது. இதனிடையே தொழி லாளர்களின் வாழ்வாதார உரிமைகோரும் போராட் டங்கள் எவ்வளவோ நடைபெற்றன. ஆனால், நோக்கியா நிறுவனம் மூடப்பட்டுவிட்டதால் ஃபாக்ஸ்கான் நிறுவனத் துக்கு நட்டம் ஏற்பட்டு விட்டதாகக் கூறிவந்தது.
அந்த ஆலையை மூடு வதற்கு எதிர்ப்பு தெரிவித் தும், தமிழக அரசின் அனுமதியின்றியும், எவ்வித நடைமுறையையும் பின் பற்றாமல், ஆலையை மூட முயற்சி செய்கிறது  அதைத் தடுத்திட வேண்டும் என்று 6 தொழிலாளர்கள் சென்னை உயர்நீதிமன் றத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கடந்த 10.2.2015 அன்று அதிகாரபூர்வமாக ஆலை மூடப்படுவதாக ஆலை யின் நிர்வாகம் அறிவித் திருந்தாலும், கடந்த ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசார ணைக்கு எடுத்துக்கொள் ளப்பட்ட வழக்கில், ஆலையை மூடுவதற்கு இடைக்காலத்தடை விதிக் கப்பட்டதுடன், ஜூன் 15ஆம் தேதிக்குள் ஃபாக்ஸ் கான் நிறுவனத்தின் நிர் வாகம் நீதிமன்றத்தில் நேர்நின்று பதில் அளிக்க வேண்டும் என்றும் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடையையும் விதித்து உத்தரவிட்டது.
எப்படியும் நீதிமன்றத் தின் உதவியுடன், மத்திய மாநில அரசுகள் மூலமாக தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி களையப்படும் என்று காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு பேரி டியாக, தங்களை வஞ்சித்த அதே தொழில் நிறுவனம் மகாராட்டிரத்தில் பெரு முயற்சி எடுத்து அங்கு தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது என்கிற செய்தி வெளியாகி உள் ளது. அந்த செய்தியின் விவ ரம் வருமாறு:
மகாராட்டிர மாநிலத்துடன் அய்-போன்  உற்பத்தி நிறுவனம் ஒப்பந்தம்
தைவானின் நிறுவன மான ஃபாக்ஸ்கான் நிறு வனம் மின்னணுப் பொருள் கள் உற்பத்தியில் பன் னாட்டளவில் மாபெரும் நிறுவனமாக இருந்துவரு கிறது. ஆப்பிள் நிறுவனத் திற்கு முக்கிய மின்னணு உதிரி பாகங்களை வழங்கக கூடிய நிறுவனமாக இந் நிறுவனம் உள்ளது.
8.8.2015 அன்று மகா ராட்டிர மாநிலத்தில் இந்நிறுவனம் 5 பில்லியன் மதிப்பில் உற்பத்தியைத் தொடங்கி செயல்படுவ தற்கு 5 ஆண்டுகள் ஒப்பந் தத்தை அம்மாநில முதல் வர் தேவேந்திர பட்னா விசுடன் போட்டுள்ளது.
மகாராட்டிர மாநிலத் தில் அதிக அளவில் முத லீடு செய்துள்ள நிறுவன மாக இந்நிறுவனம் உள் ளது. இந்த வாரத்தில் மட் டும் அமெரிக்காவை மய்ய மாகக் கொண்டுள்ள பன் னாட்டு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் ஒரு மில்லியன் டாலர் மதிப்பில் (ஆட்டோ மொபைல்) வாகன உற் பத்தித்துறையில் ஒப்பந் தத்தை ஏற்படுத்திக்கொண் டுள்ளது. உற்பத்தித் துறை யில் ஆசியாவின் மூன்றா வது பெரிய பொருளாதார மய்யமாக மாற்றுவதற்கான நோக்கத்தை வெளிப்படுத்தி உள்ளது.
மகாராட்டிர முதல்வருடன் ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தில் மகாராட்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட் னாவிஸ் மற்றும் ஃபாக்ஸ் கான் நிறுவனத்தின் தலை வர் டெர்ரிகவ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
132 பில்லியன் டாலர் மதிப்பில் (ரூபாய் 8 இலட் சத்து 42ஆயிரத்து 825 கோடி) ஹான் ஹயல் பிரி சிஷன் இன்டஸ்ட்ரி நிறு வனம் மற்றும் பிளாக் பெர்ரி, க்சியோமி, அமே சான் ஆகிய நிறுவனங் களை அதன் வாடிக்கை யாளர்களாகக் கொண்டு இந்தியாவில் முதலீடு செய்ய ஃபாக்ஸ்கான் திட்ட மிட்டுள்ளது.
மகாராட்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படும் வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உற் பத்தியின் உச்சத்தில் இருக் கும்போது, 13 கோடி பேர் வேலைவாய்ப்பைப் பெறு வார்கள், பன்னாட்டளவில் தனியார் நிறுவனம் பெரிய அளவில் தொழிலாளர் களைக் கொண்டுள்ள நிறுவனமாக ஃபாக்ஸ்கான் இருக்கும் என்றும் குறிப் பிட்டுள்ளார்.
பூனாவுக்கு அருகில் டேலெகான் பகுதியில் 1500 ஏக்கர் எம்.அய்.டி.சி. தொழிற்பேட்டை அமைக் கப்பட உள்ளது. அத் தொழிற்பேட்டைப் பகுதி யில் உள்நாட்டு வணிகம் மற்றும் நவி மும்பை பகுதி யில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்துக்கு அருகில் இருப்பதால் ஏற்றுமதி வாய்ப்புகளுடன் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
முதல்வருடன் ஏழுமுறை சந்திப்பு
தைவான் நாட்டு கைபேசிகள் தயாரிக்கப் படுமா என்கிற கேள்விக்கு மறுத்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் டெர்ரி கவ்,  ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கான உள் நாட்டு பங்குதாரர்களை தொழிற்பேட்டைப்பகுதி யில் உரிய வசதிகளுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறது. ஃபாக்ஸ்கான் நிறு வனத்தின் தலைவர் டெர்ரி கவ் மகாராட்டிர மாநிலத் தில் ஃபாக்ஸ்கான் நிறு வனம் அமைப்பதற்காக  இரண்டு மாதங்களில் மட்டும் ஏழுமுறை மகா ராட்டிர  மாநில முதல் வரைச் சந்தித்துள்ளார். அதேபோன்று பிற மாநி லங்களிலும் உள்ள தலை வர்களைவிட முன்னேற்றத் துக்கான பதில்களை மகா ராட்டிர மாநிலத்தில் பெற் றுள்ளதாகக் குறிப்பிடு கிறார்.
சீனாவில் ஊதிய விகி தம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு இந்தியா கைகொடுக்கும் என்றும், பெரும்பான்மையான அய்_போன்கள் மற்றும் பிற வளர்ச்சியடைய விரும்பும் நிறுவனங்களுடன் கூட் டாக இணைந்து உற்பத் திக்கான அடித்தளத்தை கட்டமைக்க இந்நிறுவனம் ஆயத்தமாக உள்ளது.
2000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு
இந்தியாவில் மட்டும் 2000 கோடி அமெரிக்க டாலர்  (ரூபாய்  ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 700 கோடி) மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட உள்ளன. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் பிற மாநிலங்களிலும் உற்பத் தியைத் தொடங்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பன்னாட் டளவில் வேகமாக வளர்ந் துவரும் ஸ்மார்ட் போன் வணிகத்தில் தேவையான பங்குதாரர்களை ஏற் படுத்திக்கொள்ளவும் இந் நிறுவனம் தயாராக உள் ளது.
பொருள்கள் உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் விவசாயம் சார்ந்த வணிகம் மற்றும் மின்ஆற்றல் துறை களில் ஃபாக்ஸ்கான் நிறு வனம் இந்திய தொழில் நிறுவனமான அதானி குழுமத்துடன் இணைந்து கூட்டாக   சில பகுதிகளில் செயல்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்முன் உள்ள கேள்வி
இப்போது நம்முன் உள்ள கேள்வியெல்லாம் இந்தியாவின் அங்கங்களா கத்தானே தமிழ்நாடும், மகாராட்டிரமும் உள்ளன.
ஒரே நாட்டில் ஒரு மாநிலத்தில் ஒரு நிறுவனத் தின்மீது வழக்கு உயர்நீதி மன்றத்தில் இருக்கின்ற போது, அதே நிறுவனத் துடன் மற்றொரு மாநிலம் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்கின்ற விந்தை நாடாக இந்நாடு இருக் கிறதே என்கிற வேதனை எவருக்கும் ஏற்படுவது இயல்பே.
தமிழ்நாட்டில் வஞ் சித்த ஒரு தொழில் நிறு வனத்துக்கு மகாராட்டிர மாநிலத்தில் வரவேற்பு என்றால், தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தில் பணி யாற்றிய தொழிலாளர் களுக்கான நீதிக்கு யார் தான் பொறுப்பேற்பது?
-விடுதலை,12.8.15

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக