சனி, 15 ஆகஸ்ட், 2015

சிமென்ட் ஆலை தொழிலாளர் ஊதியம் ரூ.6,000 அதிகரிப்பு


சென்னை, ஆக.8_ சிமென்ட் ஆலை தொழிலா ளர்கள் மற்றும் சிமென்ட் உற்பத்தியாளர் அமைப்புக்கு இடையே, தேசிய அளவிலான ஊதிய உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சிமென்ட் ஆலை உற்பத்தியாளர் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
டில்லியில் கடந்த வாரம், சிமென்ட் ஆலைகள் தொழிற்சங்கத்தினர் மற்றும் சிமென்ட் உற்பத்தி யாளர் அமைப்புக்கு இடையே, 2014 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நான்கு ஆண்டுகளுக்கான ஊதிய உடன்படிக்கை, கையெழுத்து ஆகியுள்ளது. இது, இந்திய தலைமை தொழிலாளர் ஆணையர், பி.பி. மித்ரா, முன்னிலையில் கையெழுத்தானது.
அப்போது, சிமென்ட் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஓ.பி. புரான்மல்கா, இந்தியா சிமென்ட்ஸ் மேலாண் இயக்குநர் என்.சீனிவாசன் உள்ளிட் டோர் உடன் இருந்தனர். இந்த ஒப்பந்தம் மூலம், நாடு முழுவதும் உள்ள 80 சிமென்ட் ஆலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, மாதம், 6 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் அதிகரிக்கும். நிலுவைத் தொகை, இரு தவணைகளில், வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,8.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக