சனி, 15 ஆகஸ்ட், 2015

நூறு நாள் வேலைத் திட்டம் சம்பளம் வங்கி கணக்கில்


புதுடில்லி, ஆக.6- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், நூறு நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான சம்ப ளத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதுள்ள முறை யில், சம்பளம் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாகவும், கீழ்மட்ட அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடு வதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.        எனவே, இந்த திட்டத் தில் ஒளிவுமறைவின் மையை கொண்டு வரவும், ஊழலைக் கட்டுப்படுத் தவும் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, சம்பள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2-ஆவது நாளிலேயே, தொழிலாளர் களின் கணக்கில் சம்பளம் நிச்சயமாக சேர்க்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திட்டம், நூறு நாள் வேலைத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த உதவும் என்றும் அவ்வட் டாரங்கள் கூறின.
நீதிபதிகளின் ஓய்வூதிய முரண்பாடு களைதல்
ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு அவர்கள் நீதிபதியாக பணியாற்றிய ஆண்டுகளை கணக்கிட்டு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. வழக்குரைஞராக இருந்து நீதிபதியானவர் களுக்கு அவர்கள் வழக் குரைஞராக பணியாற்றிய காலம், கணக்கில் எடுத்துக் கொள் ளப்படாததால், அவர் களுக்கு குறைவான ஓய்வூ தியமே நிர்ணயிக் கப்படுகிறது. ஆனால், கீழ்நிலையில் இருந்தே நீதிபதியாக பணியாற்றியவர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக் கிறது. இந்த ஓய்வூதிய முரண்பாட்டைகளையு மாறு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வலியு றுத்தியது.       இதை ஏற்று, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய முரண்பாட்டைக் களைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதா கொண்டுவருவது என முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுவ துடன், அவர்களுக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கிடைக்கும்.        பொதுத்துறை தொலை பேசி நிறுவனமான பி.எஸ். என்.எல்-ன் செல்போன் கோபுரங்களை அதன் நிர்வாகத்திடம் இருந்து பிரித்து, தனி அமைப்பிடம் ஒப்படைப்பது என்றும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
-விடுதலை,6.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக