ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

ஓய்வூதியதாரர் மருத்துவ செலவுக்கு காப்பீட்டுப் பணம் தர வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை, பிப். 12- காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம் பெறாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதி யரின் மருத்துவ செலவுக்கு காப்பீட்டுப் பணத்தை ஒரு மாதத் திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மதுரையை சேர்ந்த ஏ.முனியாண்டி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாள ராக  பணியாற்றினேன். 31.5.1996ல் ஓய்வு பெற்றேன். எனது பென்ஷன் பணத்திலிருந்து மாதம் ரூ.150 புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தேன். நினைவிழந்து சிவகங்கை சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ரூ.92,535க்கு மருத்துவ செலவு ஏற்பட்டது. இதை வழங்கக்கோரி விண்ணப்பித்தேன்.
நான், சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை, அங்கீகார பட்டியலில் இல்லையெனக்கூறி என் விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டது. இதை எதிர்த்து மாநில அளவிலான குழுவிடம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை கடந்த 26.10.2016 இல் நிராகரித்து நிதித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து,  பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
காப்பீட்டு திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சி ஊழியர்க ளுக்கு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவ தில்லை. காப்பீட்டு திட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் மருத்துவ செலவை வழங்க மறுத்த நிதித்துறை (பென்ஷன்) செயலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் மருத்துவ செலவுக்கான பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.
-விடுதலை,12.2.17

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

ஆசிரியர் விடையளிக்கிறார்



கேள்வி: ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யச் சொல்லி நீதிமன்றம் சொன்னாலும், அதற்குமேல் நிர்வாகங்கள் உச்சநீதிமன்றம் செல்லுகிறார்களே - அந்தச் செலவு எல்லாம் யார் வீட்டுப் பணம்?
- க.பாக்கியம், காட்டூர்.
பதில்: இதை ஆட்சியாளர் கண்டிக்கவேண்டும். வருமான வரித்துறையில் மேல் முறையீட்டுக்குச் செல்ல தகுதிபற்றி ஆய்வினை சட்டப் பிரிவிற்கு அனுப்பி, பிறகு செய்கிறார்கள். இப்படி நடந்தால் அதிகார துஷ்பிரயோகம் நடக்காது! அதிகாரிகளின் சம்பளத்தில் பிடிமானம் செய்ய சட்ட விதி திருத்தப்படுவதே ஒரே வழி!

-விடுதலை ஞா.ம.4.2.17

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம்: சட்டம் நிறைவேற்றம்

புதுடில்லி, பிப்.9 கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக தொழில் நிறுவனங்கள், சம்பளத்தை காசோலை மற்றும் மின்னணு பரிமாற்ற முறையில் வழங்க அவசர சட்டம் கொண்டுவருவதற்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தது. சம்பள பட்டுவாடா சட்டத்தில் இதற்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேறியது.

இதை தொடர்ந்து மாநிலங்களவையில் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இது, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு காசோலை அல்லது வங்கி கணக்கு மூலம் டிஜிட்டல் முறையில் சம்பளம் வழங்க வகை செய்கிறது.

,விடுதலை,9.2.17

பணிநிரந்தரம் செய்யக்கோரி  தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்



சென்னை, பிப். 9- -சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக, தினக் கூலி தொழிலாளர்களை உடனே பணிநிரந் தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண் டும் என வலியுறுத்தி சென்னை செங்கொடி சங்கம் சார்பில் ரிப்பன் வளாகத்தில் நேற்று பெருந்திரள் காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு 2009ஆம் ஆண்டு அரசாணை 256 மூலம் 7 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 12 ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்த தினக்கூலிதொழிலாளர்கள் பணித்தொடர்ச்சியுடன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக் கப்பட்டனர்.

இதில்தினக்கூலி தொழிலாளர்கள் பணிநிரந்தரம் குறித்து கடந்த 5.9.2014 அன்று செங்கொடி சங்கம் (சிஅய்டியு) சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரிய செங்கொடி சங்கத்துடன் பிப்.4 அன்று பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களை விரைவில் பணிவரன் முறை செய்வதாக உறுதிக்கடிதம் அளித்தது.ஆனால் நிர்வாகம் உறுதி மொழியை இதுவரை காப்பாற்றவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இத்தொழிலாளர்கள் ஒருவருடம் காத்திருப்பிற்கு பிறகு இனி பொறுப்பதற்கில்லை என்ற முடிவோடு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-விடுதலை,9.2.17

கருவுற்ற செவிலியர் உயிரிழப்பு: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள், பணியாளர்கள் போராட்டம்




டில்லி, பிப்.9 டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் மருத்துவர் களின் கவனக்குறைவின் காரண மாக  உயிரிழந்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை யில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் செவிலியராவார். கர்ப் பிணி செவிலியர் உயிரிழந் ததையடுத்து 300க்கும் மேற் பட்ட செவிலியர்கள் ஒன்றி ணைந்து மருத்துவர்களின் அலட் சியப்போக்கைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஊர்வ லத்தில் பங்கேற்றனர்.

அதன்பின்னர், எயிம்ஸ் மருத்துவமனையில் 5 மருத்து வர்களை எயிம்ஸ் மருத்துவ மனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

5 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பணியிடை நீக்க அறிவிப்பை திரும்பப் பெறுமாறும் வலி யுறுத்தியுள்ளது.

மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் எயிம்ஸ் மருத்துவ மனை இயக்குநருக்கு எழுதி யுள்ள கடிதத்தில், ராஜ்பிர் கவுர் எனும் கர்ப்பிணிப் பெண்ணான செவிலியருக்கு, குழந்தைப்பேறுக்காக அறுவை சிகிச்சை செய்திட மருத்துவர் கள் முடிவெடுத்தனர். அதிலும் சிக்கல் ஏற்பட்டது.

அறுவையின்போது, அப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற் பட்டதால் நிலைமை மேலும் சிக்கலானது.

இதையெல்லாம் கவனத் தில் கொள்ளாமல், மருத்துவ மனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள் ளது என்று மருத்துவர் சங்கத் தின் மூத்த அலுவலர் குறிப் பிட்டுள்ளார்.

மேலும் கடிதத்தில் குறிப் பிடும்போது, “மருத்துவர் சங்கம் இச்செயலை மிகவும் கடுமையாகக் கண்டிப்பதுடன், பணியிடைநீக்க உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், மருத்துவர்கள் தங்கள் கட மையை ஆற்றுவதை நிறுத்திக் கொண்டால், அனைத்து நோயாளிகளும் பாதிக்கும் நிலை ஏற்படும். உடனடியாக  உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும்’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

செவிலியர்களுக்கான சங் கத்தைச் சேர்ந்த சுக்லால் ஜாட் கூறும்போது, ராஜ்பிர் கவுர் இயல்பாக மகப்பேறுக்காக 16.1.2017 அன்று மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். சிகிச் சையின்போது, குழந்தை உயிரிழந்தது. தொடர்ச்சியாக கவுர் உயிருக்குப் போராடினார். 4.2.2017 அன்று உயிரிழந்தார்.

குழந்தை உயிரிழந்தபோதே செவிலியர்கள் சங்கத்தினர் அலட்சியமான மருத்துவர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக போராடத் தொடங்கிவிட்டார் கள் என்று செவிலியர் சங்கத் தின் பிரதிநிதி தெரிவித்தார்.

செவிலியரான ராஜ்பிர் கவுர் மகப்பேறு சிகிச்சையின் போது உயிரிழந்ததை அடுத்து, உடல்பரிசோதனை நடைபெற உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள்.
-விடுதலை,9.2.17

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 50 நாள் வேலைவாய்ப்பு

புதுடில்லி, பிப்.9 கிராமப்புற பகுதிகளில் ஏழை தொழிலாளர் களுக்கு நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு (மொத்தம் 150 நாட்கள்) அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுபோல், ஆந்திர மாநில த்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக 50 நாள் வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இதுபற்றி மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், வறட்சி பாதித்த தருணங்களில் மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. தமிழகமும், ஆந்திராவும் எங்களை அணுகின. எனவே, அங்கு கூடுதலாக 50 நாள் வேலைவாய்ப்பு அளிக்க அனுமதி அளித்துள்ளோம் என்றார்.

-விடுதலை,9.2.17

புதன், 1 பிப்ரவரி, 2017

கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியில்

கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியில்
மகன், மகள் என்று பாகுபாடு காட்டக்கூடாது
உயர்நீதிமன்றம் உத்தரவு



மதுரை, பிப்.1 கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணியில் ஆண், பெண் பாகுபாடு காட்டக்கூடாது என கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிராகரிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 மாதத்தில் வேலை வழங்க வேண் டுமென உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், ஆலங் குளம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த முத்துச்செல்வி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் தந்தை வேல்முருகன் நுகர் பொருள் வாணிபக்கழகத்தில் பாதுகாவலராக பணியாற்றினார். பணிக்காலத்தில் கடந்த 2012இல் உயிரிழந்தார். இதனால் எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி, என் தாயின் ஒப்புதல் சான்றுடன் விண்ணப் பித்தேன். எனக்கு பணி வழங்க முடியாது எனக்கூறி வாணிபக் கழக தலைவர் 20.5.2016இல் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டப்படி பெற் றோரை பராமரிப்பதில் ஆணும், பெண்ணும் சமம். எனவே அந்த உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண் டும்,’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதி எஸ்.வைத் தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிடுகை யில், திருமணம் ஆனாலும் வாரிசு வேலை பெறுவதற்கு ஆண் பிள்ளைகளுக்கு எந்த தடை யும் இல்லை. ஆனால் பெண் ணுக்கு இந்த உரிமை மறுக்கப் படுகிறது. பெற்றோர் பராமரிப்பு சட்டப்படி ஆண், பெண் பிள் ளைகள் சமம். அதே போல அரசமைப்பு சட்டப்படி ஆணும், பெண்ணும் சமம். இதை யெல்லாம் வைத்துப் பார்க்கும் போது திருமணம் ஆன பெண் ணும் வாரிசு வேலை பெறலாம் என்றார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு: கருணை அடிப்படையில் வழங் கப்படும் வேலையில் மகன், மகள் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. இந்த ஆண், பெண் இரு வரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். எனவே மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் (நிர்வாகம்) மனு தாரரின் மனுவை பரிசீலித்து, காலிப்பணியிடங்கள் இருக்கும் பட்சத்தில் தகுதிக்கு ஏற்ப வேலையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டார்.

-விடுதலை,1.2.17