வெள்ளி, 29 அக்டோபர், 2021

“மகப்பேறு விடுப்பு: பாகுபாடு காட்டக் கூடாது” தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

 

சென்னைஆக.21 மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீமின்றம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 180 நாள்களிலிருந்து 270 நாள்களாக அதிகரித்து, 2016ஆம் ஆண்டு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசாணை பிறப்பித்ததுஇந்த சலுகைபணி வரன் முறைப்படுத்தப்படாததற்காலிக பணியாளர்களுக்கும் நீட்டித்து 2020ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டதுஆனால் இந்த அரசாணைகள் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறிசென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ராஜகுருஉயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய் திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (20.8.2021) விசாரணைக்கு வந்ததுஅப்போது நீதிபதிகள் மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும்வரன்முறைப் படுத்தப் படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்ட கூடாதுமகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகு பாடும் காட்ட கூடாது எனவும்அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு & ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்

 

அரசாணை வெளியீடு

சென்னைஆக.25  நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடிஅரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்குஇரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறதுஅந்த வகையில் கடந்த 2016ஆம்ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டதுஇந்த விடுப்பு பிரசவத்துக்கு முன்பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும்விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டதுஇதற்காக அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

நிதிநிலை அறிக்கையில்  அறிவிப்பு

இந்நிலையில்கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதுமகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்இதையடுத்துமகப்பேறு விடுப்பானது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதுஜூலை 1ஆம் தேதிக்கு முன்னரே பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால், 365 நாட்களுக்கு மிகாமல் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னைஆக.25 ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்மீண்டும் இதில் மறுமதிப்பீட்டு முறைகள் நடத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஒன்றிய அரசுமாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.

முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்ததுஅந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்ததுஇந்த அறிவிப்பு 2011இல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்போதைய ஒன்றியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளதுஇதற்கான அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.

மகப்பேறு விடுப்பு : நிரந்தர ஊழியர்கள், தற்காலிக ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுப்படுவதில்லை

 

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னைசெப்.17 நிரந்தர ஊழியர்களுக்கு வழங்குவது போலபணியில் சேர்ந்து ஓராண்டு முடித்த தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் திருமண மான பெண் அரசு ஊழியர் களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் கூடிய மகப் பேறு விடுப்பு, 180 நாட்களில் இருந்து 270 நாட்களாக அதிகரித்து கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்ததுஇந்த சலுகைபணி வரன் முறைப்படுத்தப்படாததற் காலிக பணியாளர்களுக்கும் நீட் டித்து 2020-ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

தற்காலிக ஊழியர்கள்

ஆனால்இந்த அரசா ணைகள் முறையாக அமல் படுத்தப்பட வில்லைபல மாவட்டங்களில் அரசு மருத் துவமனைகளில் பணிபுரியும்பணி வரன் முறைப்படுத் தப்படாததற்காலிக பெண் பணியாளர்கள்மகப்பேறு விடுப்பு வழங்குவது இல்லைஅவர்களது விண்ணப் பங்கள் நிலுவையில் உள்ளனதற் காலிக அரசு பணியாளர்களுக் கும் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜ குரு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

பாரபட்சம் இல்லை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிநீதிபதி ஆதி கேசவலு ஆகி யோர் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போதுமகப்பேறு விடுப்பில் பார பட்சம் காட்டக்கூடாது என்று நீதிபதிகள் கருத்து கூறினர்இந்த நிலையில்இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசார ணைக்கு வந்தது.

முடித்து வைப்பு

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்மகப்பேறு விடுப்பு வழங் குவதில் வரன்முறை செய்யப் பட்ட ஊழியர்களுக்கும்வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே அரசு பாரபட்சம் ஏதும் காட் டுவதில்லைவரன்முறைப் படுத்தப்படாத ஊழியர்களும் பணியில் சேர்ந்து ஓராண்டு முடிந்திருந்தால்ஊதியத் துடன் கூடிய மகப்பேறு விடுப்பை பெற்றுக்கொள்ள லாம்மகப்பேறு விடுப்பை 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக (ஓர் ஆண்டுஅதிகரித்து கடந்த ஆகஸ்டு 23-ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்று கூறினார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள்வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர்.

மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவு

 

மதுரை, ஜூலை 4- அரசு பெண் ஊழியர் களின் மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


வேதநாயகி என்பவர் தஞ்சாவூரில் கூட் டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முதுநிலை தணிக்கை ஆய் வாளராக பணிபுரிகிறார். இவரது பெயர் 2019 ஆண்டுக்கான கூட்டுறவு தணிக்கை அதிகாரி பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பணிக்காலத்தில் மகப்பேறு விடுப்பில் சென்றதால் முதுநிலை கூட்டுறவு தணிக்கை ஆய்வாளராக 3 ஆண்டு பணிபுரியவில்லை என்று கூறி பதவி உயர்வு பட்டியலில் பெயர் சேர்க்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.


இந்த உத்தரவை ரத்து செய்து தனக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி வேதநாயகி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் மனு தாக்கல் செய்தார். இவரைப்போல் பெண் அரசு ஊழியர்கள் பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனை) சட்டம் பிரிவு 12இல் விடுமுறை பதவி உயர்வுக்கு தடையாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதை பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன் பிறகும் மனு தாரர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப் படுகிறது என்றார். இதையடுத்து நீதிபதி கள், பணிக்காலத்தில் தான் மகப்பேறு விடுப்பில் சென்றுள்ளனர். இதனால் மகப் பேறு விடுப்பு காலத் தையும் பணிக்காலமாக கருதி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன், ஆதார் எண் இணைப்பு கட்டாயம்

 

வருகிற 31ஆம்தேதி வரை அவகாசம்

சென்னைஆக.22  மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஒன்றிய அரசின் சமூக பாதுகாப்புச்சட்டம்பிரிவு 142இன் படிதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல்ஓய்வூதியம் பெறுதல்காப்பீட்டு பலன்களை பெறஆதார் எண்ணைதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதுஅதன்படிநிறுவன உரிமையாளர்கள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணைதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும்இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வருகிற 31ஆம்தேதி வரை அவகாசம் வழங்கியிருக்கிறதுஇதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும் போதுஅவர்களே எளிதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவையை எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் சந்தாதாரர்கள்; வருங்கால வைப்பு நிதி அமைப்பு தகவல்

 

புதுடில்லிஆக. 23- தொழிலா ளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப் ஓவில் ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் சந்தாதா ரர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர்கரோனா தொற் றுக்கு பிறகு அதிகமான தொழிலாளர்கள் இணைந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்க ளின்தற்காலிக தரவு விவ ரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புகடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட் டதுஇதில் கடந்த ஜூன் மாதம், 12.83 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதுகடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் ஒப்பிடுகை யில் கரோனா தொற்றின் 2ஆவது தாக்கம் கடந்த ஜூன் மாதம் குறைந்தது.

இது தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகள வில் அதிகரிக்க வழிவகுத் துள்ளதுகடந்த மே மாதத் துடன் ஒப்பிடுகையில்நிகர சந்தாதாரர்கள் எண்ணிக் கையில் 5.09 லட்சம் பேர் அதிகரித்துள் ளனர்.

கடந்த ஜூன் மாதம் இணைந்த சந்தாதாரர் கள் 12.83 லட்சம் பேரில், 8.11 லட்சம் பேர்இபி எப்-ன் சமூக பாதுகாப்பு திட் டத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள்அதே மாதத்தில் 4.73 லட்சம் சந்தாதாரர்கள் பணிமாற் றம் காரணமாக வெளி யேறி இபிஎப்ஓ அமைப் பில் மீண்டும் இணைந்து உள்ளனர்.

பெரும்பாலான சந்தாதாரர்கள்இபிஎப்ஓ அமைப்பில் தொடர்ந்து இருக்க விரும்புவதை இது காட்டுகிறதுஇவர் களின் பழைய தொழிலா ளர் வைப்பு நிதி கணக்கு நிதிகள்புதிய நிறுவனத் தின் பி.எப் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளன.

மாநில வாரியாக ஒப் பிடுகையில் மகாராட் டிராஅரியானாகுஜ ராத்தமிழ்நாடு மற்றும் கருநாடகா ஆகிய மாநி லங்கள் தொழிலாளர்கள் சேர்ப்பில் இன்னும் முன் னணியில் உள்ளனஇந்த மாநிலங்களில் மட்டும் சுமார் 7.78 லட்சம் சந்தா தாரர்கள் கடந்த ஜூன் மாதத்தில் சேர்ந்துள்ள னர்இது கூடுதலாக சேர்ந்தஅனைத்து வயது பிரிவு மொத்த நிகர சந்தா தாரர்களில் 60.61 சதவீதம் என தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை

 

சென்னைஜூலை 23     அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.

தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ‘இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி’ (அய்.விஆர்.எஸ்.) முறையை அறிமுகம் செய்துள்ளதுஇந்த சேவையை 044-24325050 என்ற எண்ணை தொடர்புக்கொள்வதன் மூலம் பயன்படுத்தலாம்.

இந்த சேவையின் மூலமாக தமிழ்நாடு அரசு பணிநிலை சார்ந்த அனைத்து அய்..எஸ்அதி காரிகள்தமிழ்நாடு அரசு ஊழி யர்கள்ஆசிரியர்கள்சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர் களின் பொது சேம நல நிதிஆசிரியர் சேம நல நிதி சந்தா தாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி நடப்பு இருப்புநடப்பு ஆண்டில் பெற்ற கடன்விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித்தொகை பெறுவதற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை பற்றிய விவரங் களை அறிந்துகொள்ள முடியும்.

ஓய்வூதியம்

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறு வனங்களின் பணியா ளர்கள் ஆகியோரின் ஓய்வூதிய விண்ணப் பங்களின் நிலையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறும் பிற அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் சிறப்பு பிரிவு ஓய்வூதிய தாரர்களான அரசு கலைஞர்களை தவிர வேறு நபர்கள்கலைஞர் ஓய்வூதியம்தமிழ் அறிஞர் ஓய்வூ தியம்பத்திரிகையாளர் ஓய்வூதியம்நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம்சமஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங் களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும்.

மேலும் சுயவரைதல் அதிகாரிகள் தங்களது ஊதிய சீட்டினை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள லாம்.

மேற்கண்ட தகவல் முதுநிலை துணை மாநில கணக்காயர் .தினகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.