வெள்ளி, 29 அக்டோபர், 2021

ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் சந்தாதாரர்கள்; வருங்கால வைப்பு நிதி அமைப்பு தகவல்

 

புதுடில்லிஆக. 23- தொழிலா ளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப் ஓவில் ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் சந்தாதா ரர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர்கரோனா தொற் றுக்கு பிறகு அதிகமான தொழிலாளர்கள் இணைந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்க ளின்தற்காலிக தரவு விவ ரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்புகடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட் டதுஇதில் கடந்த ஜூன் மாதம், 12.83 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதுகடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் ஒப்பிடுகை யில் கரோனா தொற்றின் 2ஆவது தாக்கம் கடந்த ஜூன் மாதம் குறைந்தது.

இது தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகள வில் அதிகரிக்க வழிவகுத் துள்ளதுகடந்த மே மாதத் துடன் ஒப்பிடுகையில்நிகர சந்தாதாரர்கள் எண்ணிக் கையில் 5.09 லட்சம் பேர் அதிகரித்துள் ளனர்.

கடந்த ஜூன் மாதம் இணைந்த சந்தாதாரர் கள் 12.83 லட்சம் பேரில், 8.11 லட்சம் பேர்இபி எப்-ன் சமூக பாதுகாப்பு திட் டத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள்அதே மாதத்தில் 4.73 லட்சம் சந்தாதாரர்கள் பணிமாற் றம் காரணமாக வெளி யேறி இபிஎப்ஓ அமைப் பில் மீண்டும் இணைந்து உள்ளனர்.

பெரும்பாலான சந்தாதாரர்கள்இபிஎப்ஓ அமைப்பில் தொடர்ந்து இருக்க விரும்புவதை இது காட்டுகிறதுஇவர் களின் பழைய தொழிலா ளர் வைப்பு நிதி கணக்கு நிதிகள்புதிய நிறுவனத் தின் பி.எப் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளன.

மாநில வாரியாக ஒப் பிடுகையில் மகாராட் டிராஅரியானாகுஜ ராத்தமிழ்நாடு மற்றும் கருநாடகா ஆகிய மாநி லங்கள் தொழிலாளர்கள் சேர்ப்பில் இன்னும் முன் னணியில் உள்ளனஇந்த மாநிலங்களில் மட்டும் சுமார் 7.78 லட்சம் சந்தா தாரர்கள் கடந்த ஜூன் மாதத்தில் சேர்ந்துள்ள னர்இது கூடுதலாக சேர்ந்தஅனைத்து வயது பிரிவு மொத்த நிகர சந்தா தாரர்களில் 60.61 சதவீதம் என தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக