September 12, 2021 • Viduthalai
புதுடில்லி, செப்.12 போலி கணக்குகளை உருவாக்கி ரூ.2.7 கோடி வரையில் மோசடி செய்ததாக வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் மூவர் மீது ஒன்றிய புல னாய்வு அமைப்பு (சிபி அய்) ஊழல் மற்றும் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது.
சென்ற ஆண்டு ஊர டங்கு காரணமாக மக்கள் வேலையிழப்பைச் சந் தித்த நிலையில், வருங் கால வைப்பு நிதியை எடுப்பதற்கான விதி முறைகளை வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தளர்த்தியது. இந்தத் தளர்வைப் பயன்படுத்தி, மும்பை கண்டிவலி மண் டல அலுவலகத்தின் மூத்த சமூக பாதுகாப்பு உதவி யாளர் சந்தன் குமார் சின்ஹா, கோவையில் உள்ளவருங்கால வைப்பு நிதி மண்டல உதவி ஆணையர் உத்தம் தாக் கரே, சென்னையில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல உதவி ஆணை யர் விஜய் ஜார்பே ஆகிய மூன்று அதிகாரிகள் இணைந்து சுமார் ரூ.2.71 கோடி வரையில் மோசடி செய்ததாக புகார் எழுந் தது. 2 தினங்களுக்கு முன்பு இம்மூவர் மீதும் சிபிஅய் வழக்கு பதிவு செய்துள்ளது
ஊரடங்கில் வேலையிழந்த புலம்பெயர் தொழி லாளர்களின் வங்கி மற் றும் ஆதார் விவரங்க ளைப் பெற்று, ஊரடங் கில் மூடப்பட்ட நிறுவ னங்களின் ஊழியர்களாக அவர்களைச் சித்தரித்து, அதன் மூலம் வருங்கால வைப்புத்தொகை கோரிக் கையை அனுப்பி இம் மூவர் மோசடியில் ஈடு பட்டுள்ளது தெரியவந் துள்ளது. கடந்த மார்ச் முதல் இவ்வாண்டு ஜூன் வரையிலான காலகட்டத் தில் ரூ.2.71 கோடி மோசடி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர் பான தகவல், வருங்கால வைப்பு நிதி அலுவலகத் தின் லஞ்ச ஒழிப்புத் துறைக்குமே 18ஆம் தேதி தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்ட ஆய்வில் கோடிக்கணக்கில் மோசடி நிகழ்ந்திருப்பது உறுதியானது என்பது குறிப்பிடத் தக் கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக