• Viduthalai
வருகிற 31ஆம்தேதி வரை அவகாசம்
சென்னை, ஆக.22 மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒன்றிய அரசின் சமூக பாதுகாப்புச்சட்டம், பிரிவு 142இன் படி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீட்டு பலன்களை பெற, ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நிறுவன உரிமையாளர்கள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வருகிற 31ஆம்தேதி வரை அவகாசம் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும் போது, அவர்களே எளிதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவையை எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக