செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வ.வசந்தி பணி ஓய்வு பெறுகிறார்!

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 11.4.19ல் பணி ஓய்வு பெறுகிறார். அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி 10.4.19 பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெறுகிறது.

வியாழன், 4 ஏப்ரல், 2019

தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை

டில்லி,ஏப்.3, தனியார் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வுபெற்ற பிறகு உரிய ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000யை உச்சவரம்பாக கொண்டு அதன் அடிப்படையில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.  இது தொடர்பான வழக்கில் வெறும் ரூ. 15,000யை அடிப்படை ஊதியமாக கருதாமல் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கடைசியாக பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து  EPFO தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனவே, இனி வரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஓய்வூதியம் பெற உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

அதன்படி இந்த உத்தரவிற்கு முன்பு ஒரு தனியார் நிறுவன ஊழியர் 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி சம்பளமாக ரூ.50,000 பெற்று ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் அவர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.5,180 பென்சன் கிடைக்கும். ஆனால் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்க வழி பிறந்துள்ளது. அதே போல ஒரு நபர் தன்னுடைய கடைசி சம்பளமாக ரூ.1,00,000 பெற்று இருந்து ரூ.33 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

- விடுதலை நாளேடு, 3.4.19

ஏப்.18-இல் செயல்படும் நிறுவனங்கள் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

சென்னை, ஏப்.2 மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி இயங்கும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்குமான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை நாளாக அரசு அறிவித் துள்ளது.

இதை மீறி ஏப்ரல் 18-ஆம் தேதி செயல்படும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 2.4.19

புதன், 27 மார்ச், 2019

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம் - 2019

மறைமலைநகர், மார்ச் 24  17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி  கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை நகர் வள்ளுவர் மன்றத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் பூ.சுந்தரம் அவர்கள் கோ.கணேஷ் அவர் களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். மறைமலைநகர் திராவிடர் கழக  நகர செயலாளர் துரை. முத்து அவர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தார். சங்க பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.
உடன் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நல சங்கத்தின் 2019 ஆம் ஆண்டு புதிய பொறுப்பாளர் தேர்வும் நடைபெற்றது.
புதிய பொறுப்பாளர் பட்டியல்
தலைவர் - த.ரமேஷ். செய லாளர் - செ.ர.பார்த்தசாரதி, பொரு ளாளர் - கா.நாகராஜ், துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்-  கோ.கணேஷ்,  ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள் பா.இயேசுராஜா, வ.வசந்தி,  து.டில்லி
துணைத்தலைவர் கோ.குமாரி நன்றி கூறினார்.
மறைமலைநகர் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சங்கம் சார்பாக கோ.கணேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


- விடுதலை நாளேடு, 24.3.19

வெள்ளி, 8 மார்ச், 2019

தொழிலாளர் பணிக்கொடை பெறும் விதிமுறைகள்

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை, அதைப் பெறுவதற்கான தகுதிகள், அதிகபட்சமாக வழங்கப்படும் பணிக்கொடை, பணிக்கொடை வழங்காத நிறுவனத்தினர் மீது தொழிலாளர் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆர். மாதேஸ்வரன் விளக்குகிறார்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்ன விதமான பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

பணிக்கொடை, தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மூலம் மருத்துவ வசதி போன்ற பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பணிக்கொடையை பொறுத்தவரை பயிற்சி தொழிலாளர் நீங்கலாக பிற தொழிலாளர்கள் தகுதியுடையவர்களாவர். சம்மந்தப்பட்ட தொழிலாளர் பெறும் மாத ஊதியத்தை அடிப்படையாக கொண்டு, ஆண்டுக்கு 15 நாள் ஊதியத்தை பணிபுரியும் நிறுவனம் வழங்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் ஐந்தாண்டு தொடர்ச்சியாக பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கொடை பெற தகுதியுடையவர்களாவர்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை எவ்வளவு ?

பணிக்கொடையை பொறுத்தவரை ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் வீதம் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை மட்டுமே நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான பணிக்கொடையை காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும். பணிக்கொடை தொழிலாளர்களுக்கு வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அபராதத் தொகையை நிறுவனத்தினர் செலுத்தாதபட்சத்தில் தொழிலாளிக்கு பணிக்கொடையை பெற்றுத்தர என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?

தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் ஆய்வின்போது ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தொகையை செலுத்த குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அந்த கால கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதபட்சத்தில், நாளொன்று ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) பயன் என்ன?

அனைத்து விதமான தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக விதிமுறை பொருந்தும். அதன்படி தொழிலாளர் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவன உரிமையாளர் குறிப்பிட்ட தொகை செலுத்துவர். அந்த தொகையை தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் பெற தகுதியுடையவர்களாவர். தொழிலாளர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுதல், பெண் தொழிலாளர் மகப்பேறு காலம் போன்றவற்றுக்கு அந்தந்த நிறுவனத்தின் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை வழங்கப்படும்.

Published :  07 Sep 2014  10:51 IST

Updated :  07 Sep 2014  10:51 IST

- இந்து தமிழ் திசை

தொழிலாளர் பணிக்கொடை 30 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு!

தொழிலாளர்களுக்கான பணிக்கொடை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஸ் கோயல் தமது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மேலும், பணியின்போது இறக்கும் பிஎஃப் சந்தாதாரர்களின் குடும்பத்துக்கான நிதியுதவி 6  லட்சம் ரூபாயாக உயர்த்தி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் முறைசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம் 3,000 ரூபாயாத அதிகரிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

மாதத்துக்கு ரூ.15 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் உள்ளோருக்கு புதிய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் மாதம் குறைந்தபட்சம் ரூ.55-லிருந்து ரூ.100 செலுத்தும் சந்தாதாரர்களுக்கு 60 வயதுக்கு மேல்  ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 12:33 pm

கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்குக - கண்டன ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று (7.3.2019) சென்னை பெரம்பூர் அய்.சி.எப். பொது மேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட மத்திய அரசை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்குக, உயர் ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய், தமிழகத்தில், ரயில்வே உள்ளிட்ட அரசு - பொதுத்துறை பணி நியமனங்களில், தமிழ்நாட்டவர்க்கு முன்னுரிமை கொடு, பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் அமைத்திடு போன்ற கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி, துணைத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் அதன் நிர்வாகிகள் உள்ளிட்ட பெருந் திரளானோர் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 7.3.19