திங்கள், 24 ஆகஸ்ட், 2015

பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம்


8 வாரத்திற்குள் அரசாணை வெளியிட வேண்டும்

திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்த வழக்கில் மத்திய தொழிலாளர் ஆணைய தீர்ப்பாயத்திற்கு நீதிபதி கர்ணன் உத்தரவு


திருச்சி, ஆக.24_- திருச்சி பெல் வளாக ஒப்பந்தத் தொழிலாளர் பணிநிரந் தரம் குறித்து 8 வாரத் திற்குள் அரசாணை வெளி யிட வேண்டுமென மத்திய தொழிலாளர் ஆணைய தீர்ப்பாயத்திற்கு  நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள் ளார். 36 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பெல் வளாக ஒப்பந்தத் தொழி லாளர்களைப் பணிநிரந் தரம் செய்ய வலியுறுத்தி திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. தொடக்கத்தில் 3 ஆயிரத் திற்கும் மேற்பட்டவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது 1174 ஊழி யர்கள் மட்டுமே நிரந்தரம் செய்யாமல் பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்வது  தொடர்பாக தொடுத்த வழக்கில் ஒப்பந்த ஊழி யர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்று கடந்தாண்டு உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பின்னரும், பெல் நிரு வாகம் உத் தரவை ஏற்காமல் அலைக் கழிப்பு செய்து வந்தது. இதனால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆலோசனையின் படி தொழிலாளர் ஆணையத் தில் புகார் செய்யப்பட் டது. புகாரின் அடிப் படையில் திருச்சி மத்திய துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத் தில் இதுவரை 4 கட்ட பேச்சு வார்த்தையும், பாண்டிச்சேரி துணைத்  தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நடை பெற்ற ஒரு கட்ட பேச்சு வார்த்தையிலும்  தீர்வு எட்டப்படவில்லை.
பேச்சு வார்த்தை
முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த 30.07.2014 அன்றும்,  இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை  ஆக.13 ஆம் தேதியும் நடந்தது. அப் போது  பெல் வளாக ஒப் பந்த கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கும், பெல் நிருவாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவர்களை  நிரந்தரம் செய்ய வேண் டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினர்.
நிருவாகம் மழுப்பல்
திருச்சி பெல் நிறுவ னம் போன்று ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற் றியவர்களை அரித்துவார், ராணிப்பேட்டையில் உள்ள  பெல் நிருவாக மும், அதனைத் தொடர்ந்து அய்தராபாத் பெல் நிருவாகம் எப்படி பணி நிரந்தரம் செய்தது? என்ற கேள்வியை ஒப்பந்தத் தொழிலாளர் நிர்வாகத் தின் முன் வைத்தனர்.
அதற்கு நிருவாகத்தின் தரப்பில் சரியான பதில் கூறப்படவில்லை. இந்நிலையில் தொழி லாளர்ஆணையரிடம்  பெல் நிருவாகம் தனது நிலைப் பாட்டை விளக்கி ஒரு கடிதம் கொடுத்தது. அந்த கடிதத்திற்கு  பதி லளித்த பிறகு அடுத்த விசாரணைக்கான தேதியை அறிவித்து அந்த விசாரணையின் போதே இறுதிமுடிவையும் அறி விப்பதாக துணை ஆணை யர் தெரிவித்திருந்தார். அதனால் அந்த கூட்டம் அப்போது ஒத்தி வைக்கப் பட்டது. மீண்டும் அதனைத் தொடர்ந்து  11.12.2014 இல் பாண்டிசேரி மத்திய துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத் தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த சமரச பேச்சு வார்த்தை யிலும் உடன்பாடு ஏற் படாமல் தோல்வியடைந் தது. அது தொடர்பாக மத்திய தொழிலாளர் ஆணையச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அக்கடிதமும் நிராகரிக்கப் பட்டது.
வழக்கு
இதனையடுத்து ஏற் கெனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்ட தீர்ப்பின் அடிப் படையிலும், பல கட்ட பேச்சு வார்த்தையில் ஒப் பந்தத் தொழிலாளர்கள் சார்பில் எடுத்து வைக்கப் பட்ட நியாயத்தின் அடிப் படையிலும்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் பெல் வளாக ஒப்பந்த தொழி லாளர் நலச் சங்க பொதுச் செயலாளரும், மாவட்ட திராவிடர் கழகத் தலைவ ருமான மு.சேகர் மூலம் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில்  இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பான பேச்சு வார்த்தையில் பெல் நிருவாகத்திற்கும், தொழி லாளர்களுக்கும் இடையே சமரச பேச்சு தோல்வி அறிவிப்பின் அடிப்படை யில் மத்திய தொழில் மற்றும் தொழிலாளர் நீதிமன்றம் முடிவு செய் யவும், 8 வாரத்திற்குள் மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம் அரசாணை வெளியிட வேண்டுமென  மத்திய தொழிலாளர் ஆணையச் செயலாளருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் மாண்பமை நீதிபதி சி.எஸ். கர்ணன் உத்தரவிட்டுள்ளார். ஒப்பந்தத் தொழி லாளர்கள் சார்பில் வழக் குரைஞர் வீரசேகரன் நேர் நின்று வாதிட்டார்.
-விடுதலை,24.8.15

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படவாய்ப்பு:

Image result for உறக்கம்Image result for உறக்கம்
அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படவாய்ப்பு:
ஆய்வில் தகவல்
அதிக நேரம் வேலை செய்வதால் குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் நேரம் செலவிட முடியாது என்பதைவிட, வாரத்துக்கு 50 மணி நேரத்துக்கும் அதிக மாக வேலை பார்ப்பவர்களுக்கு பக்கவாதம், இருதயக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
-விடுதலை,21.8.15,பக்-5

புதன், 19 ஆகஸ்ட், 2015

‘தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’


நாகர்கோவில், ஆக.16 
தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப் பிக்கலாம் என நாகர் கோவில் தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) க. ஞானசம்பந்தன் தெரி வித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழி லாளர் நலவாரியத்துக்கு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர் களின் குழந்தைகள் பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை படிப் பவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்ட தாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற் பயிற்சி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு  கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவ, மாணவியருக்கு  கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்கள் தொழி லாளர் நல நிதி செலுத்து பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை 31.10.2015-க்குள் அனுப்ப வேண்டும்.
நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண் ணப்பங்களுக்கு செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தபால் பெட்டி எண். 718, தேனாம்பேட்டை, சென்னை - 6 என்ற முகவ ரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
-விடுதலை,16.8.15

சனி, 15 ஆகஸ்ட், 2015

கோத்ரேஜ் தி.தொ.ச.அங்கீகாரம் கோரி விண்ணப்பம்

12.8.2015 பி.ப.2.00மணி அளவில்  'கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம்' பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டதையொட்டி 'கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவன தொழிற்சாலை' மனிதவள அலுவலரிடம் சங்கத்தை அங்கீகரிக்கக் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.


பேறுகால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை

பணிபுரியும் மகளிருக்கான
பேறுகால விடுமுறையை 6 மாதங்களாக
உயர்த்த மத்திய அரசு பரிசீலனை
புதுடில்லி,  ஆக.11_  பணிபுரியும் மகளிருக்கான பேறுகால விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த் தும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது என்று நாடாளு மன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான கேள் விக்கு, மத்திய தொழி லாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவை யில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப் பதாவது:
பேறுகால சலுகைச் சட்டத்தின்படி, பணிபுரியும் மகளிருக்கு தற்போது 12 வாரங்கள் (சுமார் 3 மாதங் கள்) பேறுகால விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இனி, அதை 24 வாரங் களாக (சுமார் 6 மாதங்கள்) உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது.
எனினும், ஊழியர்களுக் கான போனஸ் இரட்டிப் பாக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை. அதேபோல், ஊழியர்கள் வேலை மாறும்போது பணிக்கொடைத் தொகை யை மாற்றிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சர் பண் டாரு தத்தாத்ரேயா தெரி வித்தார்.
தற்போது, பணிபுரியும் மகளிருக்கு பிரசவம் எதிர் பார்க்கப்படும் தேதியி லிருந்து 6 வாரங்களுக்கு முன்பும், பிரசவத்துக்குப் பின்பு 6 வாரங்கள் வரையும் என மொத்தம் 12 வாரங்கள் விடுமுறை வழங்கப்படு கிறது.
போனசைப் பொறுத் தவரை, ஆண்டொன்றுக்கு குறைந்தபட்சம் 8.33 சதவீதமும், அதிகபட்சம் 20 சதவீதமும் வழங்கப்பட்டு வருகிறது.
-விடுதலை,11.8.15

.

நெய்வேலி - தொழிலாளர்கள் போராட்டம் : மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தீர்வு காணட்டும்!



நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழிற்சாலையில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெறும் வேலை நிறுத்தத்தை மக்கள் நலன், தொழிலாளர் நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர்,  பத்து அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி  21-4-2012 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடங்கப்பட்ட காலந்தொட்டு பணிபுரிந்து ஒப்பந்தப் பிரச்சினை 1994ஆம் ஆண்டில்  தொழில்கூட்டுறவு சேவை சங்கம் தொடங்கப் பட்டு  (Neyveli Lignite Corporation Industrial Co-operative Service Society) அதில் 5000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பதிவு செய்து,  அதன் மூலம் இடைத் தரகர்களை (Contractors)  நீக்கி, அவர்களுக்கு கூட்டுறவு சங்கமே ஊதியம் வழங்கி வந்தது.
பின்னர் நிர்வாகத்தில் பணிகாலியாகும் பொழுதெல்லாம், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்தி சுமார்  4000 தொழிலாளர்கள் தற்போது நிரந்தரத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகிறார்கள். 1994க்குப்பின், தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்தவர்களை கூட்டுறவு சங்கத்திலே உறுப்பினர்களாக்க நிர்வாகம் தவறிவிட்டதால்,  மீண்டும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் தொடர ஆரம்பித்தது.
இதனால் 2008ஆம் ஆண்டில் போராட்டம் நடைபெற்றது. அப்போதும் 13 ஆயிரம் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அரசு தலையிட்டு  16-6-2008 அன்று  தொழிற் சங்கமும், நிர்வாகமும், டெல்லி தலைமை தொழிலாளர் ஆணையர் முன்பாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் நிறைவேற் றப்பட்டது. அதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 5000 பேர்களை கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்வது; ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெற்றுவந்த ஊதியத்தைவிட, மாதம் ரூ. 750/- உயர்வு தரவும் இசைவு தந்து ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன் பின்னர் கூட்டுறவு சங்கத்தில் ஒப்பந்தத் தொழி லாளர்களை பதிவு செய்வதில்  நிர்வாகம்  கால தாமதம்  செய்ததால், 2010ஆம் ஆண்டு  மீண்டும் ஒப்பந்தத் தொழி லாளர்கள்  வேலை நிறுத்தம் செய்தார்கள்.  26-10-2010 அன்று தலைமைச்செயலகத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள், தமிழக அரசு  பேச்சு வார்த்தை நடத்தியதன் விளைவாக என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊதிய உயர்வு  ரூ.1,040 என்பதை ரூ. 1,560 என்ற அளவிற்கு உயர்த்திட முடிவானது.
2012ஆம் ஆண்டில் என்எல்சி தொழிலாளர் பிரச்சினை குறித்த கவனஈர்ப்புத் தீர்மானத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு. கொண்டுவந்தார். கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.
2012ஆம் ஆண்டில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத் தலைமை ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தபோதிலும்,  உடன்பாடு ஏற்படவில்லை.
தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய் வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க என்.எல்.சி. நிர்வாகம்  முயற் சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று  அப்போது கூறப் பட்டுள்ளது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி.) 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த வேண்டிய புதிய மாற்று ஊதிய ஒப்பந்தத்தை, என்.எல்.சி. நிர்வாகம் இதுவரை அமல்படுத்தவில்லை.
இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் கடந்த மாதம் 20-ஆம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். என்.எல்.சி.யின் நிகழும் நிதியாண்டில் காலாண்டு இலாபம் ரூ.512 கோடியாகும். தொழிலாளர்கள் 24 சதவீத ஊதிய மாற்றம், இரு ஊதிய உயர்வுகளை முக்கியமாகக் கோருகிறார்கள்.
இது குறித்து சென்னை, டில்லி ஆகிய இடங்களில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டம் இன்றும்  தொடர்கிறது.
முற்றுகை
மேலும், என்.எல்.சி. நிர்வாகத்திற்கு நெருக்கடி கொடுக்கிற வகையில், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத் தினரின் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பினரும், ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டமைப் பினரும் ஆதரவு தெரிவித்தனர். இதுதவிர நிரந்தர தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அனல்மின்நிலையம், சுரங்கம், என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகை யிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கைதாகி விடுதலை யானார்கள்.
சுதந்திர விழா புறக்கணிக்க முடிவு
இந்த நிலையில், நேற்று முன்தினம் என்.எல்.சி. அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இதன் முடிவில், தொழிலாளர் களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களின் எதிர்ப்புகளை நிர்வாகத்திற்கு தெரிவிப்பது, வருகிற 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகள் யாரும் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்யப்பட்டது.
மின் உற்பத்தி குறைந்தது
என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, மின் உற்பத்தியானது தொடர்ந்து அதன் முழு அளவை எட்டாமல் இருந்து வருகிறது. 2,990 மெகாவாட் என்கிற மொத்த மின் உற்பத்தியில் 2,132 மெகாவாட் அளவில் உற்பத்தியானது. இதன் மூலமாக 858 மெகாவாட் குறைந்து காணப்பட்டது.
ஏற்கெனவே மின் தட்டுப்பாடு தலை விரித்தாடும் நிலை யில், இந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் மத்திய - மாநில அரசுகள் யாருக்கோ வந்த  விருந்து என்று அலட்சியம் காட்டி வருவது ஏன்?
இதனால் ஏற்படும் நட்டம் குறித்து கணக்கிட்டுப் பார்க்க வேண்டாமா? தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தந்தால் என்ன குறைந்து விடும் - லாபத்தில் நடைபெறும் இந்த நிறுவனத்திற்கு?
மத்திய அரசு பிரச்சினை என்று மாநில அரசு ஒதுங்கிக் கொள்வது முறையல்ல; மின் உற்பத்தி குறைந்தால் நேரிடையாக பாதிப்பு தமிழ்நாட்டுக்கும்தான்.
முதல் அமைச்சர் நேரடியாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ள முன் வந்தால்  மத்திய அரசும் இறங்கி வரும். 12 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள் - தொடர்ந்து மூன்று வாரமாக என்கிறபோது, இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத் திருக்க வேண்டும்!
மத்திய - மாநில அரசுகள் உடனே தலையிட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வலியுறத்துகிறோம்.
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன் காணத் தகுந்தது வறுமையோ? பூணத் தகுந்தது பொறுமையோ?     - புரட்சிக் கவிஞர்



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.8.2015 

நூறு நாள் வேலைத் திட்டம் சம்பளம் வங்கி கணக்கில்


புதுடில்லி, ஆக.6- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், நூறு நாள் வேலைத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான சம்ப ளத்தை அவர்களது வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போதுள்ள முறை யில், சம்பளம் கிடைப்பதில் தாமதம் நிலவுவதாகவும், கீழ்மட்ட அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடு வதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.        எனவே, இந்த திட்டத் தில் ஒளிவுமறைவின் மையை கொண்டு வரவும், ஊழலைக் கட்டுப்படுத் தவும் இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி, சம்பள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 2-ஆவது நாளிலேயே, தொழிலாளர் களின் கணக்கில் சம்பளம் நிச்சயமாக சேர்க்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திட்டம், நூறு நாள் வேலைத்திட்டத்தை சிறப்பாக அமல்படுத்த உதவும் என்றும் அவ்வட் டாரங்கள் கூறின.
நீதிபதிகளின் ஓய்வூதிய முரண்பாடு களைதல்
ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கு அவர்கள் நீதிபதியாக பணியாற்றிய ஆண்டுகளை கணக்கிட்டு ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. வழக்குரைஞராக இருந்து நீதிபதியானவர் களுக்கு அவர்கள் வழக் குரைஞராக பணியாற்றிய காலம், கணக்கில் எடுத்துக் கொள் ளப்படாததால், அவர் களுக்கு குறைவான ஓய்வூ தியமே நிர்ணயிக் கப்படுகிறது. ஆனால், கீழ்நிலையில் இருந்தே நீதிபதியாக பணியாற்றியவர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக் கிறது. இந்த ஓய்வூதிய முரண்பாட்டைகளையு மாறு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் வலியு றுத்தியது.       இதை ஏற்று, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதிய முரண்பாட்டைக் களைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பளம் மற்றும் ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதா கொண்டுவருவது என முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுவ துடன், அவர்களுக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் கிடைக்கும்.        பொதுத்துறை தொலை பேசி நிறுவனமான பி.எஸ். என்.எல்-ன் செல்போன் கோபுரங்களை அதன் நிர்வாகத்திடம் இருந்து பிரித்து, தனி அமைப்பிடம் ஒப்படைப்பது என்றும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
-விடுதலை,6.8.15