ஞாயிறு, 15 செப்டம்பர், 2019
பிஎப் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்
வாகன தொழிற்சாலை பணியாளர் ஊதிய உயர்வு ஒப்பந்த உடன்பாடு

நிர்வாகம் மற்றும் உள் ளக தொழிற்சங்கம் இரண் டினாலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை உரு வாக்குவதற்கும், ஒரு நல்லு றவைப் பேணுவதற்கும், ஒரு கூட்டு அணுகுமுறையைப் பின் பற்றுவதற்கும் தொடர்ச்சி யான முயற்சிகளின் விளை வாக இந்த ஒப்பந்தம் ஏற் படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிறு, 21 ஜூலை, 2019
கரும்புத் தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்
மாதவிடாய் விடுப்பை பறிக்கும் வலி மாத்திரைகள்
செவ்வாய், 2 ஜூலை, 2019
பெண்கள் இரவுப் பணிக்கு செல்ல கோவா அரசு ஒப்புதல்
கோவா, ஜூன் 30 தொழிற் சாலைகளில் இரவு நேரங் களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத் துக்கு கோவா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப் படும்.
இந்தச் சட்டத் திருத்தத்துக்கு இந்த வாரம் மாநில அமைச்சரவை ஒப் புதல் வழங்கியது. இதனை, பெண்கள் உரிமை ஆர்வலர்கள் வர வேற்றுள்ளனர். இதன்மூலம், கோவாவில் பெண்கள் அதிக எண்ணிக் கையிலான வேலைவாய்ப் புகளை பெற முடியும் என்று அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- விடுதலை நாளேடு, 30. 6 .19
சம ஊதியம் கேட்டு பெண்கள் போராட்டம்
ஜெனிவா, ஜூன் 6- சுவிட்சர் லாந்தில் ஆண்களுக்கு நிக ராக பெண்களுக்கு சம ஊதி யம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14ஆம் நாள் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பெண் கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற் சங்கங்களும் பெண்கள் உரி மைகள் அமைப்பும் தெரிவிக் கின்றன.
‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலி யுறுத்தி மீண்டும் போராட் டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் பெண் களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறை வாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந் தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர் லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.அய்.ஏ. வெளியிட்ட அறிக் கையில், கல்வித்தகுதியும், துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் அவ ரது வேலைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை, பெண் களின் வேலைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைக ளையும் போராட்டக்குழுவி னர் வலியுறுத்த உள்ளனர்.
- விடுதலை நாளேடு, 6 .6.2019
கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம்
கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும்
திறந்து வைக்கலாம்: தமிழக அரசு அனுமதி
சென்னை, ஜூன் 7 தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வரும் ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின்படி 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.
பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.
ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் முக்கிய நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.
பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள் யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.
இந்த புதிய அரசாணை அடுத்த 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 7.6.19