புதன், 13 பிப்ரவரி, 2019

"தஞ்சை சமூக நீதி மாநாட்டில் திராவிடர் தொழிலாளர் பெருமளவில் பங்கேற்போம்"

திண்டுக்கல், பிப். 9- 3.2.2019 அன்று காலை 11 மணிக்கு திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டியில் நகர செயலாளர் அலுவலத்தில் ச.அங்கப்பன் (தி.தொ.ச.மண்டல தலைவர்) தலைமையில் திராவிடர் தொழிலாளர் கழகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மண்டலத் தலைவர் மு.நாகராசன், மாவட் டத் தலைவர் இரா.வீரபாண் டியன், பொதுக்குழு உறுப்பினர் இரா. நாராயணன், பேரவை செயலாளர் மதுரை சிவகுரு நாதன் முன்னிலை வகித்து சிறப்பான கருத்துக்களை எடுத் துக்கூறி உரையாற்றினார்கள். பேரவைத் தலைவர் அ.மோகன் தொடக்க உரையாற்றினார். பேரவை மாநில செயலாளர் மு.செல்வம் வரவேற்புரையாற் றினார். பேரவை மாநில செய லாளர் மு.சேகர் சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொருளாளர் பி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

தீர்மானம் 1: திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் மறைவிற்கு இரங் கல் தெரிவிக்கப்பட்டது.

தீர்மானம் 2: வருகின்ற 23.2.2019, 24.2.2019 ஆகிய தேதி களில் தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு தொழிற்சங்கத் தோழர்கள் தொழிற்சங்க பேனர் மற்றும் தொழிற்சங்க கொடியுடன் அதிக அளவில் பங்கு கொள்வது எனமுடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 3: தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி ஏற்கனவே உள் ளது போல் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளை வைக்க வேண்டுமென அனைத்து மண் டல நிர்வாக இயக்குனர்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் கொடுப்பது என முடிவு செய் யப்பட்டது.

தீர்மானம் 4: அரசு போக் குவரத்து கழக மதுரை மண்ட லத்திற்கு புதிய பொறுப்பா ளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மண்டலத் தலைவர்: கு. ராமசாமி, பொதுச் செயலாளர்: மு.மகேஷ், பொருளாளர்: பா. முத்துக்கருப்பன்

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

மதுரை: ராமசாமி, முத்துக் கருப்பன்

திண்டுக்கல்: கணேசன், ஜோசப் ராஜ், பங்கிராஜ், பழ. ராஜேந்திரன், பெ.தங்கவேல்

திருச்சி: சி.மருதை மா.தலைவர் சவரிமுத்து, காட்டூர் மாணிக்கம், காஞ்சி துரை.

- விடுதலை நாளேடு, 9.2.19

சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பிடித்தம் செய்வது சட்டவிரோதம்


உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.5 சிறைக் கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகை செய்யும் “தமிழ்நாடு சிறை விதி- 481’, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனு விவரம்:

தமிழக சிறைகளில் கைதிகளின் திறன் அடிப்படையில் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஒதுக்கப்படும். இப்பிரிவினருக்கு முறையே ரூ. 100, 80, 60 ஊதியமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் 50 சதவீதம் அவர்களின் உணவு மற்றும் உடைக்காகவும், 20 சதவீதம் சம்பந்தப்பட்ட கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு வதற்கான நிவாரணத்தில் செலுத்தப்பட்டு, எஞ்சிய 30 சதவீத தொகை மட்டும் சிறைக் கைதிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

சிறை விதிப்படி சிறைவாசிகளின் ஊதியம் 5 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படவேண்டும். அதன்படி தமிழக சிறைவாசிகளின் ஊதியத்தை முடிவு செய்ய 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குழு அமைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை ஊதிய உயர்வுக் குழு அமைக்கப்படவில்லை. சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியம் குறைந்தபட்ச ஊதிய சட்டத்துக்கு எதிரானது.

புதுச்சேரி சிறைகளில் கைதிகளுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது. அங்கு அதிதிறன்மிக்கவர்களுக்கு ரூ. 180-ம், திறன்மிக்கவர்களுக்கு ரூ. 160-ம், திறன் குறைந்தவர்களுக்கு ரூ. 150-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது.  கேரளத்தில் சிறைவாசிகளின் ஊதியம், பிடித்தம் இல்லாமல் வழங்கப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் சிறைவாசிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் விதியை சட்டவிரோதம் என அறிவித்து, கைதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கி, மொத்த ஊதியத்தில் 75 சதவீத தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறைக் கைதிகளின் ஊதியத்தில் பணம் பிடித்தம் செய்வதில் ஒரு நியாயம் இருக்கவேண்டும்.

50 சதவீத பிடித்தம் என்பது நியாயமானதாக இல்லை.  ஒருவரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்துவிட்டு, அதற்கு உரிய ஊதியம் வழங்காததை ஏற்க முடியாது. தமிழகத்தில் சிறைக் கைதிகளுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி ஊதியம் வழங்கப் படவில்லை. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

எனவே, கைதிகளின் ஊதியத்தில் உணவு, உடைக்கு 50 சதவீதம் பணம் பிடித்தம் செய்ய வழிவகைச் செய்யும் “தமிழ்நாடு சிறை விதி- 481’, அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கப்படுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கைதிகளின் ஊதியத்திலிருந்து உணவு, உடைக்காக நியாயமான முறையில் குறைந்த தொகையை பிடித்தம் செய்ய தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

- விடுதலை நாளேடு, 5.2.19

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு அடிப்படை வருமான நிர்ணயம் ராகுல் வாக்குறுதி

ராய்ப்பூர், ஜன. 29- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண் டார். விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். அம்மாநில முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் உள் ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என மத்தியில் ஆளும் பா.ஜ.க. இரண்டு இந் தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட் டினார்.

காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் நாடாளு மன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.

இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக் கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவிட வேண்டும்:

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 29- அரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்கு முறையைக் கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இடை நீக்கம் செய்வது, கைது செய்வது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். அடக்கு முறையை அரசு கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை

நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போராடி வரும் அவர்களை அழைத்துப் பேசி, பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது

ராமேசுவரம், ஜன. 29- தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர் களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

மோடியின் தோல்வியை வெளிக்காட்டுவதாக கட்கரியின் கருத்து உள்ளது:  தேசியவாத காங்கிரஸ்

மும்பை, ஜன. 29- "பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் உதை வாங்கு வார்கள்' என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வியை வெளிக்காட்டுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மகாராட்டிர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சில அரசி யல் தலைவர்கள் மக்களிடம் கனவுகளை விற்பனை செய்ப வர்களாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களா கவும் உள்ளனர். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறை வேற்றப்படாவிட்டால், மக்களிடம் நிச்சயமாக உதை வாங்கு வார்கள்' என்று பேசினார்.

ஏற்கெனவே, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தபோது, "வெற் றிக்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை தேடிக் கொள்ளும் தலைவர்கள், தோல்விகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்' என்று கட்கரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது இந்த கருத்து தேசிய அளவில் மீண்டும் விவாதத்துக்குரிய விஷயமாக உள்ளது.

மும்பையில் திங்கள்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் செய் தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிகவும் வெளிப் படையாகப் பேசி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையப் போவது உறுதி என்பதும், தேர்தலுக்குப் பிறகு பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்காது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு மாற்றாக கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் உத்தியை கட்கரி கையில் எடுத்துள்ளார். அவரது கருத்துகள், மோடியின் தோல்விகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாகவே உள்ளது.

பாஜகவில் இருந்தே, பிரதமர் மோடிக்கு எதிராக குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, அக்கட்சியில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதையே இது வெளிக்காட்டுகிறது என்றார் நவாப் மாலிக்.

- விடுதலை நாளேடு, 29.1.19

வெள்ளி, 11 ஜனவரி, 2019

துபாயில் 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் ஆட்சியாளர்கள் அறிவிப்பு

துபாய், ஜன.11 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமய மாக்கப் படும் என்று துபாயின் ஆட்சியாளர் கூறி உள்ளார். இதனால் இந்திய தொழிலா ளர்களின் வேலை வாய்ப்பு களுக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
வளைகுடா அரபு நாடு களில் வேலைகள் தேசியமய மாக்கப்படும் விகிதம் அதி கரிப்பு  இந்திய தொழிலாளர் களுக்கு  நேரடி அச்சுறுத்த லாக உள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகியவற்றை தொடர்ந்தது  2019 ஆம் ஆண்டில் மேலும் வேலைவாய்ப்புகள் தேசியமயமாக்கப்படும் என்று துபாயின் எமிரேட் கூறியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளை தேசியமயமாக்குவது துபாயில் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது என அய்க்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர் மற்றும் பிரதமர்  ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும் ட்விட்டரில் கூறியுள்ளார்.
இன்று நான் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். அதில் 2018 ஆம் ஆண்டின் விளைவு மற்றும் 2019க்கான திட்டத்தை நாங்கள் ஆய்வு செய்தோம். 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புகளின் உள்ளூர்மயமாக்கல் 200 சதவிகிதம் அதிகரித்தது. 2019 ஆம் ஆண்டில் அதனை இரட்டிப்பாக்க நாங்கள் முயற்சி செய்வோம் என ட்விட்டரில் கூறி உள்ளார்.
அய்க்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 லட்சம்  இந்தியர்கள்  வாழ்க்கை மற்றும் வேலை செய்து வருகின்றனர். துபாயின் ஆட்சி யாளர்கள் 1999ஆம் ஆண்டில்  வேலைவாய்ப்பை தேசியமயமாக்கல்  ஆரம்பித் திருந்த போதிலும், அது பல ஆண்டுகளாக அது குறைந்தபட்சமாக இருந்தது.
இருப்பினும் 2008 நிதியியல் நெருக்கடி, பொருளாதாரத்தை பரவலாக்குவதற்கும், தனியார் துறைகளில் வேலைகளை தேர்ந் தெடுப்பதற்கும் அதிக விகிதம் வேலைவாய்ப்பு தேசியமயமாக்கப் பட்டது. வளைகுடா அரபு குடிமக்கள் குறைந்த  ஊதியங்கள் மற்றும் கடுமையான வேலை போன்ற காரணங்களால் தனியார் துறைகளில் சேர விரும்பவில்லை.
- விடுதலை நாளேடு, 11.1.19

வியாழன், 10 ஜனவரி, 2019

பொது சேமநலநிதி கணக்கை புதுப்பிப்பது எப்படி?

மும்பை, ஜன. 8- எதிர்­கால பாது­காப்­பிற்கு உத­வக்­கூ­டிய, பி.பி. எப்., எனப்­படும் பொது சேம­நல நிதி, பர­வ­லாக நாடப் ­படும், முத­லீட்டு வாய்ப்­பாக இருக்­கிறது.
பொது சேமநலநிதி முத­லீட்­டின் முக்­கிய அம்­சங்­களில் ஒன்று, ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்­சம், 500 ரூபா­யா­வது இந்த கணக்­கில் செலுத்தி வர வேண்­டும் என்­ப­தா­கும். இவ்­வாறு ஓராண்­டுக்கு மேல் குறைந்த பட்ச தொகை செலுத்த தவ­றி­னால், அந்த, பி.பி.எப்., கணக்கு செய­லி­ழந்­த­தாகி விடும்.
பொது சேமநலநிதி கணக்கு செய­லி­ழக்­ கா­மல் இருக்க, மறக்­கா­ மல் ஆண்­டு­தோ­றும் குறைந்த பட்ச தொகையை செலுத்த வேண்­டும். கணக்கு செய­லி­ழப்­ப­தால், அது­வரை முத­லீடு செய்த தொகையை இழக்­கும் நிலை ஏற்­ப­டாது. ஆனால், அதில் தொடர்ந்து பணம் செலுத்த முடி­யாது.
மேலும், கணக்கு செய­லி­ழந்­தால், பொது சேமநலநிதி தொடர்­பான சலு­கை­க­ளை­யும் பெற முடி­யாது. உதா­ர­ண­மாக, உறுப்­பி­னர்­கள் கணக்கு துவங்­கிய மூன்­றாம் ஆண்டு முதல் ஆறாம் நிதி­யாண்டு வரை, 25 சத­வீத தொகையை கட­னாக பெற்­றுக்­கொள்­ள­லாம். கணக்கு செய­லி­ழந்­தால் இந்த வசதி கிடை­யாது.
அதே­போல், ஏழாம் நிதி­யாண்டு நிறை­வுக்­குப்­பின், பகுதி அளவு தொகையை விலக்கிக் கொள்­ளும் வச­தி­யை யும் பயன்படுத்த முடியாது. முன்­கூட்­டியே கணக்கை முடித்­துக்­கொள்­ள­வும் அனு­மதி இல்லை.
ஆனால், செய­லி­ழந்த, பொது சேமநலநிதி கணக்கை புதுப்­பித்­துக்­கொள்­ள­லாம். சம்­பந்­தப்­பட்ட வங்கி கிளை அல்­லது அஞ்­சல் அலு­வ­லகத்­தில் எழுத்து வடி­வில் இதற்­கான கோரிக்­கையை அளிக்க வேண்­டும். அதோடு, கணக்கு செய­லி­ழந்த காலத்­திற்­கான குறைந்­த­பட்ச தொகையை அபராதத்­து­டன் செலுத்த வேண்­டும். அதன் பிறகு கணக்கு சரி­பார்க்­கப்­பட்டு, மீண்­டும் இயக்க அனு­ம­திக்­கப்­படும்.
- விடுதலை நாளேடு, 8.1.19

ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

சிவகங்கை, ஜன. 8- சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் மாவட் டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமையிலும் செயலாளர் சீமைச்சாமி முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலிபணியி டங்களை நிரப்பாததால் பணிப்பளு உள்ளது. எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிட மாறுதல்வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். வாரிசு பணியை தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாத முதல் தேதியில் ஓய்வூதியம், முன் மானியம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இல்லாத மய்யங் களில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க வேண்டும். கோரிக் கைகளை நிறைவேற்றாவிட் டால் பட்டினிப் போராட்டம் நடத்தப்படும். ஒரு மாத ஊதியத்தை பொங்கல் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர் மானங்களாக நிறைவேற்றப் பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு,8.1.19

சனி, 5 ஜனவரி, 2019

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 8,9 பொது வேலை நிறுத்தம்: தொழிலாளர்கள் தேசிய மாநாடு அறிக்கை

சென்னை, டிச.30 மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து 2019 ஜனவரி8,9 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் செய்ய இந்தியத் தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறை கூவல் விடுத்தது.

அனைத்துத் தொழிலாளர் களுக்கும் மாதம் ரூ.18,000 க்கு குறையாத சம்பளம், 58 வயதான அனைவருக்கும் 6ஆயிரம் ரூபாய்க்கு குறையாத மாத ஓய்வூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறைகளை ஒழித்தல், தொழிலாளர்சட்டங்களை முத லாளிகளுக்கு சாதகமாக திருத்துவதை கைவிடுதல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், பணிக்கொடையை அதிகரித்தல், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்கு விற்பதைநிறுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறு கிறது.வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர் களை ஆயத்தப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டாக கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன.

சென்னையில் டிசம்பர் 14ஆம் தேதியும், மதுரையில் டிசம்பர்18ஆம் தேதியும் பெரும் திரளான மாநில மாநாடுகளும் நடந்தன.

வேலைநிறுத்தத் கோரிக்கைகளை விளக்கி ஆலைவாயில் கூட்டங்கள், சங்கப் பேரவைகள், தெருமுனைக் கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களும் இரண்டு மாதங் களாக நடந்து வருகின்றன. தொழிற் சாலைகளுக்கு வேலைநிறுத்த முன்னறிவிப்புகள் முறையாகத் தரப்பட் டுள்ளன. பலலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், பதாகைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கண்ட பணிகளை நிறைவேற்றிய, பங்கெடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களைப் பாராட்டி வாழ்த்து கிறோம். 2019 ஜனவரி 8,9 தேதிகளில் தமிழகத்திலுள்ள பஞ்சாலைகள், பின்ன லாடை நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோ, வேன், டாக்ஸி, லாரி, பீடி, சிமெண்ட், சர்க்கரை, இஞ்சினியரிங், சிவில் சப்ளை, மின்சாரம், டாஸ்மாக், காகிதத் தொழிற்சாலைகள், வங்கிகள், காப்பீட்டுநிறுவனங்கள், உள் ளாட்சிகள், மத்திய, மாநில அரசுப்பணிகள் தொலைத் தொடர்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்களிலும் முழுமையான வேலை நிறுத்தம் நடைபெறும்.இதே நாட்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்களும், உடலுழைப்புத் தொழி லாளர்களும் வேலைநிறுத்தம் செய்கின் றனர்.

அவர்களின்பங்கெடுப்பை வெளிக் காட்டுவதற்காக ஜனவரி 9ஆம்தேதி மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மய்யங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.  மறியல் நடைபெறும் நேரம் மற்றும் இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவுசெய்யும்.

இந்த மறியலில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.உள்நாட்டு, வெளிநாட்டுகார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு முகவர்களாகி, இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அழித்து, தொழிலாளர்களையும் விவசாயி களையும் சீரழிக்கிற மத்திய, மாநில அரசு களைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டங்கள் வெற்றிபெற அனைத்துப் பொது மக்களும், வெகு மக்கள் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள் கிறோம்.

- விடுதலை நாளேடு, 30.12.18