திண்டுக்கல், பிப். 9- 3.2.2019 அன்று காலை 11 மணிக்கு திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டியில் நகர செயலாளர் அலுவலத்தில் ச.அங்கப்பன் (தி.தொ.ச.மண்டல தலைவர்) தலைமையில் திராவிடர் தொழிலாளர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மண்டலத் தலைவர் மு.நாகராசன், மாவட் டத் தலைவர் இரா.வீரபாண் டியன், பொதுக்குழு உறுப்பினர் இரா. நாராயணன், பேரவை செயலாளர் மதுரை சிவகுரு நாதன் முன்னிலை வகித்து சிறப்பான கருத்துக்களை எடுத் துக்கூறி உரையாற்றினார்கள். பேரவைத் தலைவர் அ.மோகன் தொடக்க உரையாற்றினார். பேரவை மாநில செயலாளர் மு.செல்வம் வரவேற்புரையாற் றினார். பேரவை மாநில செய லாளர் மு.சேகர் சிறப்புரை யாற்றினார். கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பொருளாளர் பி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.
தீர்மானம் 1: திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் மறைவிற்கு இரங் கல் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானம் 2: வருகின்ற 23.2.2019, 24.2.2019 ஆகிய தேதி களில் தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு தொழிற்சங்கத் தோழர்கள் தொழிற்சங்க பேனர் மற்றும் தொழிற்சங்க கொடியுடன் அதிக அளவில் பங்கு கொள்வது எனமுடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 3: தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி ஏற்கனவே உள் ளது போல் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறளை வைக்க வேண்டுமென அனைத்து மண் டல நிர்வாக இயக்குனர்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் கொடுப்பது என முடிவு செய் யப்பட்டது.
தீர்மானம் 4: அரசு போக் குவரத்து கழக மதுரை மண்ட லத்திற்கு புதிய பொறுப்பா ளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
மண்டலத் தலைவர்: கு. ராமசாமி, பொதுச் செயலாளர்: மு.மகேஷ், பொருளாளர்: பா. முத்துக்கருப்பன்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
மதுரை: ராமசாமி, முத்துக் கருப்பன்
திண்டுக்கல்: கணேசன், ஜோசப் ராஜ், பங்கிராஜ், பழ. ராஜேந்திரன், பெ.தங்கவேல்
திருச்சி: சி.மருதை மா.தலைவர் சவரிமுத்து, காட்டூர் மாணிக்கம், காஞ்சி துரை.
- விடுதலை நாளேடு, 9.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக