ராய்ப்பூர், ஜன. 29- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சத்தீஸ்கர் மாநிலம், அட்டல் நகரில் நடைபெற்ற விவசாயிகள் சம்மேளனத்தில் கலந்து கொண் டார். விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப் பட்டதற்கான சான்றிதழ்களை பயனாளிகளுக்கு ராகுல் காந்தி வழங்கினார். அம்மாநில முதல் அமைச்சர் பூபேஷ் பாகேல் உள் ளிட்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் ஊழலில் தொடர்புடைய அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு இந்தியா, ஏழை விவசாயிகளுக்கு ஒரு இந்தியா என மத்தியில் ஆளும் பா.ஜ.க. இரண்டு இந் தியாக்களை உருவாக்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட் டினார்.
காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, வரும் நாடாளு மன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் உலகிலேயே முதன்முறையாக ஏழை மக்களுக்கு அடிப்படை வருமானம் நிர்ணயிக்கப்படும்.
இதன்மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை குடிமகனுக் கும் குறைந்தபட்ச வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தால் நாட்டில் பசியும், ஏழ்மையும் இருக்காது. இந்த திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக எங்கள் அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவிட வேண்டும்:
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, ஜன. 29- அரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்கு முறையைக் கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:-
நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை இடை நீக்கம் செய்வது, கைது செய்வது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். அடக்கு முறையை அரசு கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போராடி வரும் அவர்களை அழைத்துப் பேசி, பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது
ராமேசுவரம், ஜன. 29- தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்நிலையில், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நேற்று இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர் களை சுற்றி வளைத்து அவர்களின் படகை சேதப்படுத்தினர். பின்னர் படகில் இருந்த 4 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
மோடியின் தோல்வியை வெளிக்காட்டுவதாக கட்கரியின் கருத்து உள்ளது: தேசியவாத காங்கிரஸ்
மும்பை, ஜன. 29- "பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் உதை வாங்கு வார்கள்' என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து, பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வியை வெளிக்காட்டுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
மகாராட்டிர மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சில அரசி யல் தலைவர்கள் மக்களிடம் கனவுகளை விற்பனை செய்ப வர்களாகவும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களா கவும் உள்ளனர். அவர்கள் அளித்த வாக்குறுதிகள் நிறை வேற்றப்படாவிட்டால், மக்களிடம் நிச்சயமாக உதை வாங்கு வார்கள்' என்று பேசினார்.
ஏற்கெனவே, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநில தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்தபோது, "வெற் றிக்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமை தேடிக் கொள்ளும் தலைவர்கள், தோல்விகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்' என்று கட்கரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது இந்த கருத்து தேசிய அளவில் மீண்டும் விவாதத்துக்குரிய விஷயமாக உள்ளது.
மும்பையில் திங்கள்கிழமை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் செய் தியாளர்களிடம் இது தொடர்பாக கூறியதாவது:
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிகவும் வெளிப் படையாகப் பேசி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடையப் போவது உறுதி என்பதும், தேர்தலுக்குப் பிறகு பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்காது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு மாற்றாக கட்சியில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் உத்தியை கட்கரி கையில் எடுத்துள்ளார். அவரது கருத்துகள், மோடியின் தோல்விகளை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாகவே உள்ளது.
பாஜகவில் இருந்தே, பிரதமர் மோடிக்கு எதிராக குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பிறகு, அக்கட்சியில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதையே இது வெளிக்காட்டுகிறது என்றார் நவாப் மாலிக்.
- விடுதலை நாளேடு, 29.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக