வியாழன், 10 ஜனவரி, 2019

ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை

சிவகங்கை, ஜன. 8- சிவகங்கை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் சிவகங்கையில் மாவட் டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமையிலும் செயலாளர் சீமைச்சாமி முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காலிபணியி டங்களை நிரப்பாததால் பணிப்பளு உள்ளது. எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியிட மாறுதல்வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். வாரிசு பணியை தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாத முதல் தேதியில் ஓய்வூதியம், முன் மானியம் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும்.
அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இல்லாத மய்யங் களில் தற்காலிக ஊழியர்களை நியமிக்க வேண்டும். கோரிக் கைகளை நிறைவேற்றாவிட் டால் பட்டினிப் போராட்டம் நடத்தப்படும். ஒரு மாத ஊதியத்தை பொங்கல் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர் மானங்களாக நிறைவேற்றப் பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் பானுமதி நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு,8.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக