நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து
திராவிடர் கழகத்தின் சார்பில்
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
விருத்தாசலம், ஆக. 13 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரினை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து ஆகஸ்டு 22 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
திராவிடர் கழகத்தின் சார்பில்
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு
விருத்தாசலம், ஆக. 13 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரினை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து ஆகஸ்டு 22 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று (13.8.2016) செய்தியாளர்களிடம் கூறிய விவரம் வருமாறு:
மறைமுகமாக தனியார் மயமாக்கவேண்டும் என்கிற முயற்சி...
நெய்வேலி நிலக்கரி பழுப்பு நிறுவனம் என்பது பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை புதுக்கூரப்பேட்டை என்ற பெயரில் அவர்கள் அகற்றியிருக்கிறார்கள். ஏற்கெனவே நிலங்களைக் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்கிற குறைபாடும் இருக்கிறது. அதோடு, இது மேலும் வளர்ந்து லாபம் தரக்கூடிய ஒரு நிலையில், அதனுடைய பங்குகளை அவ்வப்போது விற்று,
மறைமுகமாக தனியார் மயமாக்கவேண்டும் என்கிற முயற்சி தொடர்ந்து பல ஆண்டுகாலமாக நடந்துவருவதைக் கண்டித்து, திராவிடர் கழகமும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, அதற்குப் பிறகு, தமிழக அரசும் முன்வந்து, ஒரு பங்கை நாங்கள் வாங்குகிறோம் என்று சொல்லி, அது ஓரளவிற்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.
என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இந்த நிலையில், இப்பொழுது மறைமுகமாக வடபுலத்திலேயும், வேறு மாநிலங்களில் இருப்பவர் களைக் கொண்டு வந்து நிரப்பவும், குறைந்த சம்பளத் திற்கு - ஒப்பந்தக்காரர்களை, அவர்களுடைய பிரச்சி னைகளைத் தீர்க்காமல் இருப்பதற்காகவும், அதே நேரத்தில், நாங்கள் தனியார் மயமாக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு, அவுட் சோர்சிங் என்ற பெயரால், பிறருக்குக் கொடுத்து, அதன்மூலமாக அவர்கள் ஆள் வைக்கிறார்கள்,
அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று மறைமுகமாக தனியார் மயமாக்கக் கூடிய ஒரு சூழ்ச்சியான திட்டத்தை முறியடிப்பதற் காகவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் என்ற பெயர் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இருக்கக்கூடிய ஒரு நிலையில், அந்தப் பெயரை மாற்றி, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில்
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
அதற்காக ஒரு பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகமும், ஒத்தக் கருத்துள்ளவர்களும் வருகின்ற 22 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தின்முன் நடத்துவார்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்தோடு, வடக்கே இருக்கின்றவர் களின் ஆதிக்கம் - இதுபோன்று பல துறைகளில் இருக்கிறது - மொழித் திணிப்பும் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக - காலங்காலமாக நடந்துவருகிற - தமிழ் மொழியில் ஒலிபரப்புகின்ற மாநில செய்திகளையெல்லாம் ரத்து செய்யப் போகிறோம் என்று வந்திருக்கின்ற அறிவிப்பு- அதிர்ச்சிக்குரிய ஒரு அறிவிப்பாகும். அதனை அவர்கள் வாபஸ் வாங்கிவிட்டால், அதற்கான போராட்டம் நடைபெறாது. அதனை அவர்கள் திரும்பப் பெறாவிட்டால், இந்தப் போராட்டத்தோடு, அந்தக் கோரிக்கையும் சேர்த்துக் கொள்ளப்படும்.
வானொலியில்
தமிழ் மொழியில் செய்திகள் ரத்தா?
தமிழ் மொழியில் செய்திகள் ரத்தா?
இங்கே மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறாது - தொடர்ந்து மத்திய அரசு அதில் பிடிவாதம் காட்டினால், எங்கெங்கெல்லாம் தமிழ்நாட்டில் வானொலி நிலை யங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அமைதியான முறையில் அறப்போராட்டங்களாக - திராவிடர் கழகத்தாலும், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங் கிணைத்து நடத்துவோம். - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆர்ப்பாட்ட விவரம்
நாள்: 22.8.2016 திங்கள் காலை 10.30 மணி
இடம்: நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தின் முன்
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர்),
இடம்: நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தின் முன்
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர்),
அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), க.மு.தாஸ் (விழுப்புரம் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), சொ.தண்டபாணி (கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), தென்.சிவக்குமார் (கடலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), சி.காமராசு (அரியலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.இராசு (புதுச்சேரி மண்டல தலைவர், திராவிடர் கழகம்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக