அய்தராபாத், ஆக.16 அனைத்து மக்களுக் கும் ஆரோக்கிய காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் ஒரு பகுதியாக, தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தை (இஎஸ்அய்) வீட்டுப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்துவதற்காக, டில்லி, அய்தரா பாத் ஆகிய நகரங்களில் விரைவில் சோதனை முயற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, அய்தராபாதில் செய் தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத் தில் வீட்டுப் பணியாளர்களையும் கொண்டு வரும் வகையில், புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.
இஎஸ்அய்-யின் வசதிகளை வீட்டுப் பணியாளர்களுக்கும் அளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். வீட்டுப் பணியாளர்களுக்கு மருத்துவ வசதி களை அளிப்பதற்காக, இந்தத் திட்டத் தின் கீழ் மாதந்தோறும் ரூ.200-அய் முத லாளிகள் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தை, டில்லி, அய்தரா பாத் ஆகிய நகரங்களில் முதலில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்தத் திட்டத்தை, டில்லி, அய்தரா பாத் ஆகிய நகரங்களில் முதலில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த நடவடிக்கையில் தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த உள் ளோம். மேலும், மாநில அரசு களுட னும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அனைத்து அமைப்பு சாரா தொழி லாளர்களையும் சமூகப் பாது காப்புத் திட்டங்களின் கீழ் கொண்டு வர மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 5 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியையும் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தையும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன.
மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப் பட்டதன் மூலம், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதில் நார்வே, கனடா ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாவது இடத் துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. புதிய மசோதாவின் மூலம், 18 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
தொழிலாளர் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க, அர்ப்பணிப்பு கொண்ட குழுக்களை அமைக்க முயற் சித்து வருகிறோம் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
-விடுதலை,16.8.16
-விடுதலை,16.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக