பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு
கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பை
ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்
கலைஞர் வலியுறுத்தல்
கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பை
ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்
கலைஞர் வலியுறுத்தல்
சென்னை, ஆக.31 மத்திய அரசின் கல்வி மற்றும வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதிக அளவில் பயன் அடையும் வகையில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வரு மான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (30.8.2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் பலனைப் பெற, நடைமுறையில் இருந்து வரும் வருமான வரம்பினை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது. மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் தான் இருக்க வேண்டும் என்று இதுவரை விதி முறையில் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்ற வரையறைக்குள் பெரும்பாலோர் வருவதில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் அனைத்தையும் நிரப்ப முடிவதில்லை.
எனவே தான், 6.5.2015இல் நான் விடுத்த அறிக்கை யில், ஓ.பி.சி என்று அழைக்கப்படும் இதர பிற் படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், கிரீமிலேயர் உச்ச வரம்பை, தற்போதுள்ள ரூ.6 லட்சம் என்பதிலிருந்து, ரூ.10.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான தேசியக் கமிஷன், வரவேற்கத்தக்க பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டால், இதர பிற்படுத்தப்பட்ட சமு தாயங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் மேலும் கூடுதலாக இடஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்கும் என்பதால், மத்திய பாஜக அரசு உடனடியாக முன் வந்து இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று,
இட ஒதுக் கீட்டிற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம் திமுக என்ற முறையில் அதன் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறேன் என்று கேட்டுக் கொண்டி ருந்தேன். இந்தப் பின்னணி யில் தற்போது ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்பதை ரூ.8 லட்சம் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி, வருமான வரம்பினை ரூ.15 லட்சம் அளவுக்கு உயர்த்த வேண்டுமென்று சிபாரிசு செய்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.
எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான பா.ஜ.க. அரசு, இந்தியாவில் உள்ள பிற் படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்னும் நோக்கில், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்பதை பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் பரிந்துரை செய்துள்ள ரூ.15 லட்சம் என்ற அளவுக்கோ அல்லது குறைந்தபட்சம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்த ரூ.10.50 லட்சம் அளவுக்கோ உயர்த்தி அறிவிக்க வேண்டு மென்று திமுக சார்பில் வலியுறுத்தி வேண்டுகிறேன்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
-விடுதலை,31.8.16