சனி, 30 ஏப்ரல், 2016

மே தின வாழ்த்து


உலகத் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து உரிமைக் குரல் எழுப்பி வெற்றி பெற்ற நாளான மே நாள் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த தொழிலாளர் வெற்றி நாளாகும்!
"காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்

அவன் காணத்தகுந்தது வறுமையோ?

அவன் பூணத் தகுந்தது பொறுமையோ?"

என்று புரட்சிக் கவிஞர் கேட்டதுபோல், இன்றும் வளம் கொழித்து, வறுமை போக்கிட ஒரு புது வாழ்வு வருகின்ற புது ஆட்சியான தி.மு.க.வால் கொண்டு வரப்படும் என்று நம்பி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
30.4.2016

தொழிலாளர் வைப்பு நிதி வட்டி மீண்டும் 8.8%

புதன், 27 ஏப்ரல், 2016

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு


புதுடில்லி, ஏப்.27_ பி.எப். எனப்படும் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், கடந்த 2 நிதியாண்டுகளில் 8.75 சதவீதமாக நீடித்து வந்தது.
2015-_2016-ஆம் நிதி யாண்டில், வட்டி விகி தத்தை 8.8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் முடிவு எடுக் கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் சிபாரிசு செய்தது. இந்த கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத் தாத்ரேயா தலைமையில் நடைபெற்றது.
ஆனால், மத்திய அறங் காவலர்கள் வாரியத்தின் சிபாரிசை நிராகரித்து விட்டு, வட்டி விகிதத்தை 8.7 சதவீதமாக மத்திய நிதி அமைச்சகம் குறைத்துள் ளது.
இத்தகவலை பண் டாரு தத்தாத்ரேயா, நாடா ளுமன்றத்தில் நேற்று முன்தினம் எழுத்துமூலம் அளித்த பதில் ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வட்டி குறைப் புக்கு முக்கிய தொழிற்சங் கங்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பாரதீய மஸ்தூர் சங்க் அமைப்பின் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாயா, வட்டி குறைப் பைக் கண்டித்து ஏப்ரல் 27-ஆம் தேதி, தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறி வித்துள்ளார்.
காங்கிரஸ் தொழிற்சங்க மான அய்.என்.டி.யூ.சி.யின் தலைவர் அசோக் சிங், தொழிலாளர்களின் பணத் தை நிர்வகிக்கும் அமைப் பில் குறுக்கிட மத்திய நிதி அமைச்சருக்கு என்ன அதி காரம் உள்ளது? என்று கேள்வி விடுத்தார்.-
-விடுதலை,27.4.16

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

மத்திய அரசு அறிவிப்பு ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ10,000

மத்திய அரசு அறிவிப்பு
ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ10,000
புதுடில்லி, ஏப்.26_ ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் நேற்று (25.4.2016) தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பாக அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், தேசிய அளவிலான ஆலோசனையின் அடிப்படையிலும், ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000 ஆக சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்..
viduthalai (26.04.2016)

சனி, 23 ஏப்ரல், 2016

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு உத்தரவு


சென்னை,  ஏப்.21_ அரசு ஊழி யர்கள் -ஆசிரியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் போது, மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், அகவிலைப்படியின் அளவு 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்தது.
இந்த உத்தரவு விவரம்: தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக் கப்படுகிறது.  இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.  இந்த உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர் என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,21.4.16

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ10,000 குறைந்தபட்ச ஊதியம் மத்திய அரசு நடவடிக்கை


அய்தராபாத், ஏப்.18_  ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் அளிக்கும் வகையில் மத்திய அரசு விரைவில் நிர்வாக உத்த ரவைப் பிறப்பிக்கும் என்று மத்திய தொழிளாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார். அய்தராபாதில் ஞாயிற் றுக்கிழமை செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் மேலும் கூறிய தாவது: தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முக்கியமாக குறைந்தபட்ச ஊதியத்தை அனைவருக்கும் சமமாக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இதன்படி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஊதியம் அளிக்க விரைவில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு பிறப் பிக்க இருக்கிறது.

இந்தக் குறைந்தபட்ச ஊதியத்தை நாடாளு மன்றத்தில் சட்டமாக நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்து ழைப்பு அளிக்காது. எனவே, தொழி லாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதனை நிர்வாக உத்தரவாக நடைமுறைப்படுத்த அரசு முடி வெடுத்துள்ளது.

இது தொடர்பான விதிகளை வகுத்து, ஒப்புதலுக்காக சட்ட அமைச் சகத்துக்கு அனுப்பியுள்ளோம். விரை வில் இது தொடர்பான அறிவிக்கை வெளியாகும். அதைத் தொடர்ந்து மாநில அரசுகள் புதிய முடிவை அமல் படுத்தும்.

மொத்தவிலைக் குறியீட்டு எண், அகவிலைப் படி ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
-விடுதலை,18.4.16

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி புதிய விதிகளுக்கு எதிர்ப்பு போராட்டத்திற்கு பணிந்தது மத்திய அரசு

புதுடில்லி, ஏப்.20_ தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (பிஎஃப்) திரும்பப் பெறுவதற்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.

முன்னதாக, பிஎஃப் புதிய விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25 வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள்: தொழிலாளி ஒருவர் தொடர்ந்து 2 மாதகாலம் தொடர்ந்து பணியில் இல்லையெனில் தனது பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது. மேலும் பணியில் இருப்பவர்கள் 54 வயதை எட்டினால் பிஎஃப் பணத்தைப் பெற முடியும் என்ற விதியும் இருந்தது. இதனை மாற்றும் வகையில் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி மத்திய அரசு ஓர் அறிவிக்கை வெளியிட்டது. அதில், ஒரு தொழிலாளி பணியில் இருந்து விடுபட்டு விட்டாலும், பிஎஃப் பணத்தை 58 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. தொடர்ந்து பணியில் இருப்பவர்கள் கூட 57 வயதுக்குப் பிறகுதான் பிஎஃப் பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும் என்று விதிகள் மாற்றப்பட்டன. இந்தப் புதிய விதிகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு: மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. தொழிலாளர்கள் தங்கள் சொந்த உழைப்பில் ஈட்டும் பணத்தைத் திரும்பப் பெற அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்க முடியாது என்று தொழிற்சங்கத்தினர் கூறினர்.

இந்த எதிர்ப்பை அடுத்து, புதிய விதிகள் அமலாக்கத்தை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும், புதிய விதிகளை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டுமென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் போராட் டத்தில் இறங்கினர்.

பெங்களூரில் வன்முறை: இந்நிலை யில், பிஎஃப் புதிய விதிகளைக் கண்டித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாக நடைபெற்ற போராட் டத்தில் வன்முறை வெடித்தது. இதில் அரசுப் பேருந்துகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்குத் தீவைக்கப் பட்டது.

பெங்களூரு பொம்மனஹள்ளியில் திங்கள்கிழமை 5 தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தும்கூரு சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் சென்ற அரசுப் பேருந்துகளை நிறுத்தி, அதில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்துகளுக்குத் தீ வைத்தனர். இதில் 6 அரசுப் பேருந்துகளும் ஒரு மாநகரப் பேருந்தும் தீக்கிரையாயின. அதேபோல், ஒசூர் சாலையில் உள்ள ஹெப்பகோடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாயின.

துப்பாக்கிச்சூட்டில் மாணவி காயம்: ஹெப்பகோடியில் வன்முறையைக் கட்டுப்படுத்த காவலர்கள் துப்பாக்கி யால் சுட்டனர். அப்போது கல்லூரி மாணவி பிரீத்தி (18) என்பவரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.

பணிந்தது மத்திய அரசு: பெங்களூர் வன்முறைச் சம்பவத்தை அடுத்து டில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது:
பிஎஃப் விதிமுறைகள் திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பிஎஃப் பணத்தை திரும்ப எடுப்பதில் ஏற்கெனவே இருந்த நடை முறைகளே தொடரும். தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
.-விடுதலை,20.4.16