புதன், 27 ஏப்ரல், 2016

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு: தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு


புதுடில்லி, ஏப்.27_ பி.எப். எனப்படும் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், கடந்த 2 நிதியாண்டுகளில் 8.75 சதவீதமாக நீடித்து வந்தது.
2015-_2016-ஆம் நிதி யாண்டில், வட்டி விகி தத்தை 8.8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பின் முடிவு எடுக் கும் உயரிய அமைப்பான மத்திய அறங்காவலர்கள் வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் சிபாரிசு செய்தது. இந்த கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத் தாத்ரேயா தலைமையில் நடைபெற்றது.
ஆனால், மத்திய அறங் காவலர்கள் வாரியத்தின் சிபாரிசை நிராகரித்து விட்டு, வட்டி விகிதத்தை 8.7 சதவீதமாக மத்திய நிதி அமைச்சகம் குறைத்துள் ளது.
இத்தகவலை பண் டாரு தத்தாத்ரேயா, நாடா ளுமன்றத்தில் நேற்று முன்தினம் எழுத்துமூலம் அளித்த பதில் ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வட்டி குறைப் புக்கு முக்கிய தொழிற்சங் கங்கள் எதிர்ப்பு தெரிவித் துள்ளன. ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பாரதீய மஸ்தூர் சங்க் அமைப்பின் பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்யாயா, வட்டி குறைப் பைக் கண்டித்து ஏப்ரல் 27-ஆம் தேதி, தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறி வித்துள்ளார்.
காங்கிரஸ் தொழிற்சங்க மான அய்.என்.டி.யூ.சி.யின் தலைவர் அசோக் சிங், தொழிலாளர்களின் பணத் தை நிர்வகிக்கும் அமைப் பில் குறுக்கிட மத்திய நிதி அமைச்சருக்கு என்ன அதி காரம் உள்ளது? என்று கேள்வி விடுத்தார்.-
-விடுதலை,27.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக