உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர்களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக இல்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைபோல் ஒத்திருக்கின்றது.
முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால் தான், சுகப் பேற்றை அடைய முடிகிறது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார், லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்ட மில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்ப தில்லை.
இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து, தங்கள் தத்துவத்தைக் காட்டவேண்டும். சுதந்திரம் வேண்டு மானாலும், சகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம சமத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.
உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம், துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கும் படியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்.
இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்கு மல்ல, கொடுங்கோன்மைக்கு மல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும் இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்தச் சந்ததியார் உலக சுக பேற்றைப்பெறவும் செய்யும் தியாகமாகும்.
தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ள மும் உலகை ஒருபுறம் வருத்திவரக் கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமை சுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக் கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போதும்! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத் தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண் மடங்கு அதி கரிக்கின்றன.
இத்தியாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர். இனி வரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல.
வல்லரசு களின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!! இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால் தான், ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம், அடக்கப் பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல் போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில இந்தியத் தொழிலாளர்களாவர்.
இவர்கள் தாம் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தாம் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டிய தொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப் பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டியதொன்றே. இந்த ஒற்று மைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டு தோறும்பட்ட கஷ்ட நிஷ்டூரங்களையெல்லாம் ஞாபகப் படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.
-விடுதலை,30.4.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக