மத்திய அரசு அறிவிப்பு
ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ10,000
ஒப்பந்த ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ10,000
புதுடில்லி, ஏப்.26_ ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மக்களவையில் நேற்று (25.4.2016) தெரிவித்தார்.
கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பாக அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், தேசிய அளவிலான ஆலோசனையின் அடிப்படையிலும், ஒப்பந்த தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10,000 ஆக சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்..
viduthalai (26.04.2016)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக