
புதுடில்லி, ஆக. 10- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விபி ஜிராம் ஜி திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே, ஊரகப் பகுதிகளுக்கான வேலைநாட்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் 15.33 கோடி வேலைநாட்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், நடப்பு 2026 ஜூலை மாதத்தில் விபி ஜிராம் ஜி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வேலைநாட்களின் எண்ணிக்கை 7.67 கோடியாகச் சரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் ஜூலை மாத ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே மாதத்தில் வேலைநாட்களின் எண்ணிக்கை 49.94 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திட்டம் தொடங்கப்பட்ட முதல் மாதத்திலேயே பணிநாட்கள் இந்த அளவுக்குக் குறைந்துள்ளது ஊரகப் பகுதி தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- விடுதலை நாளேடு, 10.08.2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக