புதன், 21 நவம்பர், 2018

அரசு ஊழியர் விடுப்பு : புதிய சலுகைகள் அறிவிப்பு

சென்னை, நவ.21  அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, சில சலுகைகள் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் விபரம்: சின்னம்மை, தட்டம்மை, பன்றிக்காய்ச்சல், பிளேக், ரேபிஸ் போன்றவை, தொற்று நோய்களாக கருதப்படுவதால், அவற்றால் பாதிக்கப்படும் அரசு ஊழியர்கள், கூடுதல் நாட்கள், தற்செயல் விடுப்பு எடுக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

சின்னம்மை மற்றும் தட்டம்மை பாதிப்புக்கு, ஏழு நாட்கள்; பன்றிக்காய்ச்சலுக்கு, ஏழு முதல், 10 நாட்கள்; பிளேக், ரேபிஸ் போன்றவற்றுக்கு, 10 நாட்கள் வரை, தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த விடுப்பை பெற, நகராட்சி, மாநகராட்சி அல்லது மாவட்ட சுகாதார அலுவலர் சான்றிதழ் அளிக்க வேண்டும். குழந்தை பேறுக்கு அளிக்கப்படும் விடுப்பு, 180 நாட்களிலிருந்து, 270 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, முதல் பிரசவத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தால், அவர்கள் இரண்டாவது பிரசவத்திற்கு, பேறுகால விடுப்பு எடுத்து கொள்ளவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இவற்றுக்கான அரசாணையை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், சுவர்ணா பிறப்பித் துள்ளார்.

- விடுதலை நாளேடு, 21.11.18

செவ்வாய், 13 நவம்பர், 2018

இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவிதமாக சரிவு

புதுடில்லி, நவ. 13- சுரங்கம் மற்றும் பொறியியல் பொருள் கள் துறையில் காணப்பட்ட சுணக்க நிலையால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளி யியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்தாண்டு செப்டம்பரில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.1 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. இது, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத் தில் திருத்திய மதிப்பீட்டில் 4.3 சதவீதத்திலிருந்து 4.6 சதவீத மாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், செப்டம் பரில் அதன் வளர்ச்சி 4.5 சதவீ தமாக குறைந்துள்ளது. இது, நான்கு மாதங்களில் காணப் படாத சரிவு நிலையாகும்.

தொழிலக உற்பத்தி வளர்ச்சி கடந்த மே மாதத்தில் தான் 3.8 சதவீதம் என்ற அளவில் மிக குறைந்து காணப்பட்டது. ஜூன் மாதத்தில் இது முதல் முறையாக 6.9 சதவீதத்தையும், ஜூலையில் 6.5 சதவீதத்தையும் எட்டியிருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் 7.6 சத வீதமாக இருந்த சுரங்க துறை யின் உற்பத்தி வளர்ச்சி செப் டம்பரில் 0.2 சதவீதமாக பின் னடைந்துள்ளது. அதேபோன்று, பொறியியல் பொருள்கள் துறை உற்பத்தி வளர்ச்சியும் 8.7 சதவீதத்திலிருந்து 5.8 சதவீத மாக குறைந்துள்ளது.

இருப்பினும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.8 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.6 சதவீதமாகியுள் ளது. அதேபோன்று, மின்துறை உற்பத்தியும் 3.4 சதவீதத்திலி ருந்து ஏற்றம் கண்டு 8.2 சதவீத மாகியுள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்தாண்டில் இது 2.6 சத வீதமாக மட்டுமே காணப்பட் டது என சிஎஸ்ஓ அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளது

- விடுதலை நாளேடு, 13.11.18

10ஆவது மாநில மாநாடு: தமிழ்நாடு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

சென்னை, நவ. 13- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10ஆவது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜாக்டோ ஜியோ கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலை வர்களை அழைக்க இருப்பதாக மாநில செயலாளர் மீனாட்சி சுந்தரம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் தியோடர் ராபின்சன் தலைமையில், பொதுச் செய லாளர் மீனாட்சி சுந்தரம், பொரு ளாளர் கணேசன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு:

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரிந்து சென்று செயல் பட்டு வந்த ஜாக்டோ-ஜியோ கடந்த 9ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தி இணைந்து உள்ளதற்கு ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் உயர்மட்டக் குழுவினரையும் ஆசிரியர் மன் றம் பாராட்டுகிறது.

மேலும் பங்கேற்பு ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்தல், பழைய ஒய்வூதியத் திட்டத் தையே அமுல்படுத்துதல், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்காமல் இழைக்கப்பட்ட அநீதியை நீக்குதல், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் 50க்கும்  மேற்ப்பட்ட அமைச்சுப் பணி யாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரி யர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம்  வழங்குதல், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்குதல், பள்ளிகளிலும், 5000 அரசு பள்ளிகளை மூடு வதை கைவிடுதல் ஆகிய கோரிக் கைகளை அரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் டிசம் பர் 12ம் தேதி முதல் ஈடுபடுவது என ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ எடுத்துள்ள முடிவை ஆசிரியர் மன்றம் வரவேற்கிறது.

இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மட்டும் 3 வகையான ஊதியம் வழங்குவதால் மத்திய அரசு ஊதியத்தைவிட மாதம் ரூ.15 ஆயிரம் இழப்பு ஏற்படும் வகையில் அநீதியை இழைத் துள்ளது. அக்கோரிக்கையை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் விரைவில் நடத் தப்படும். ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர நியமிக்கப்பட்ட ஒரு நபர்க்குழு வின் பதவிகாலம் 9வது முறை யாக நீட்டிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை ஏற்கும் அரசி யல் கட்சி தலைவர்கள் அனை வரையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-  விடுதலை நாளேடு, 13.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

அரசு ஓய்வூதியதாரர்கள் 70,000 பேர் கருவூலத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் திட்டத்துக்கு மாற்றம்

சென்னை, நவ.12  பொதுத்துறை வங்கித் திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் இந்த வருடம் முதல் அவர்கள் கருவூலத்துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருவூலக்கணக்கு ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்களின் சிலர் பொதுத்துறை வங்கி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வரை வங்கிகளில் நேரடியாக ஓய்வூதியம் பெற்று வந்தனர். அந்த ஓய்வூதியர்கள் இதனால் பல சிரமங்களை சந்தித்து வந்தனர். அவர்களுடைய சிரமங்களை குறைக்கும் பொருட்டு அவர்களது நலன் காக்கும் பொருட்டும் பொதுத்துறை வங்கி திட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் சுமார் 70,000 தமிழக அரசின் ஓய்வூதியர்கள் தமிழக அரசின் ஆணைப்படி இந்த வருடம் முதல் அவர்கள் கருவூலத் துறை மூலமாக ஓய்வூதியம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்ட கருவூ லங்கள், சார் கருவூலங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை அலுவலகங்களில் மூலமாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். மேலும் பொதுத்துறை வங்கித் திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஓய்வூதியர்கள் கடந்த ஆண்டு வரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்களது வாழ்நாள் சான்றினை தாங்கள் ஓய்வூதியம் பெற்று வந்த வங்கிகளில் அளித்து வந்தனர். தற்போது அந்த ஓய்வூதியர்கள் அனைத்து பதிவேடு களும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் கருவூலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான  தங்களது வாழ்நாள் சான்றினை, தங்கள் ஓய்வூதியம் பராமரிக்கும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை மற்றும் மாவட்ட கருவூலங்கள் அல்லது சார் கருவூலங்களில் வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 12.11.18

வியாழன், 8 நவம்பர், 2018

BHELஇல் பணிபுரியும் வடநாட்டாரின் விரோத போக்கு!

BHEL  நிறுவனத்தில் மேற் பார்வையாளராக பணி புரியும் வட இந்தியாவைச் சேர்ந்த வருண் குமார் சர்மா என்பவர், மேற்பார்வையா ளர்  வாட்ஸ்ஆப் குழுவில்  "தமிழன்கள்  ஏதும் அறியாத வர்கள்   என்றும், அத்தோடு நாய்க்கு எலும்பு கிடைத்தால் சந்தோஷம் அடைவதும் போன்று  தமிழன் இருப்பான்" எனத் தமிழினத் தொழிலாளர்களைக் கீழ்த்தரமாக பேசியதோடு அதனையே வாட்ஸ்ஆப் (கீலீணீ கிஜீஜீ) பொதுத்தளத்தில்  பதிவிட்டிருப்பது மானமுள்ள தமிழினத் தோழர்களை மனவேதனை அடைந்திடச் செய்துள்ளது. பல தமிழக மேற்பார்வைத் தோழர்கள் வருத்தம் தெரிவித்து பதிவிடக் கேட்டுக்கொண்டும் வருண்குமார் சர்மா முதலில் மறுத்து பின்பு  மூன்று நாட்கள் கழித்துப் பதிவிட்டார்.

தமிழர்களின் சுயமரியாதைக் காவல் அரணான திராவிடர் கழகத்தின் தொழிலாளர் இயக்கமான பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து நடவடிக்கை வேண்டும் எனக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் அவர்கள் வருண்குமார் சர்மாவை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தமிழர்களின் சுயமரியாதையைக்  கொச்சைப்படுத்திய வடநாட்டு வருண் குமார் சர்மா மீது   கண்டிப்பாக காவல் துறை வழக்கு பதிந்திட வேண்டும் என பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக  கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

தகவல்: ஞா. ஆரோக்கியராஜ்

தலைவர், மாவட்ட திராவிடர் கழகம்

- விடுதலை நாளேடு, 5.11.18

புதன், 7 நவம்பர், 2018

கூட்டுறவு கடன் சங்கங்கள் - வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

சென்னை, நவ.4 கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கி களில் பணியாற்றும் பணியாளர் களுக்கு ஊதிய உயர்வு அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன்பெறுவதுடன், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி செலவு ஏற்படும்.
தமிழகத்தில் 113 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க கூட்டுறவு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல் பட்டு வருகின்றன. அகில இந்திய அளவில் பல விருது களையும் பெற்று சாதனை புரிந் துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டுறவு கடன் நிறுவ னங்களில் பணியாற்றும் பணி யாளர்களின்  ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர் களது கோரிக்கையை ஏற்று புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் குழுக்கள் இப்போது  பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும், மாநில தலைமை கூட் டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிர்வாக இயக்குநர்களும், தங்களது வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு ஆய்வுக் குழுவும், வங்கி அதிகாரிகளும் அளித்த பரிந்துரைகளை ஏற்று புதிய ஊதிய உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதிய உயர்வு ரூ.988-ம், அதிகபட்ச ஊதிய உயர்வு ரூ.4,613 வரையும் அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் நடை முறைப் படுத்தப்படும்.
மத்திய கூட்டுறவு வங்கி களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,114 முதல் அதிகபட்சமாக ரூ.16,963 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும். நகர கூட்டுறவு வங்கிப் பணியா ளர்களுக்கு ரூ.455 முதல் அதிக பட்சமாக ரூ.16,485 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப் படும்.
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங் களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.3,200 முதல் ரூ.12,500 வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் கணக்கிடப் பட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும்.
இதே போன்று, நகரக் கூட்டுறவு, தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த பணியா ளர்களுக்கு ரூ.1,180 முதல் ரூ.28,000 வரையில் நிலைகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்கப் படும். இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 4.11.18

அரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ.6  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண் டிற்குள் வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க அர சாணை பிறப்பிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இது தொடர்பான, ஒரு வழக் கில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறிய தாவது:
கருணைப் பணி நியமனம் தொடர்பாக, கீழ்க்கண்ட வழி முறைகளை பின்பற்ற, 2019 ஜன.,1 முதல் அமல்படுத்தும் வகையில், உடனடியாக தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள், சட்டப் பூர்வ வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும்.
நான்காம் நிலை ஊழியர் களைப் பொறுத்தவரை, கரு ணைப் பணியில் சில விதி களைக்கூறி, புறக்கணிக்கக்கூடாது. விதிவிலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக, துப்புரவுப் பணி யாளர் நியமனத்திற்கு போதிய தகுதிகள் அவசியம் இல்லை. எழுதப், படிக்க மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தால் போதும்.ஒரு ஊழியர் திடீரென இறக்கும்போது, அப்போது மனைவியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு, 18 வயது பூர்த்தி யாகும் வரை, கருணைப் பணிக்கு ஒரு இடத்தை காலியாக வைத் திருக்க வேண்டியதில்லை.பணிக்கு விண்ணப்பித்தபின், மூன்று மாதங்களில் சம்பந்தப் பட்ட அதிகாரி முடிவெடுக்க வேண்டும்.
தவறினால், அவரை முக்கியத்துவம் இல்லாத பணிக்கு மாற்ற வேண்டும்.இறந்தவரின் மனைவியைத் தவிர, மகன் அல்லது மகளுக்கு பணி வழங்கினால், அவர்களின் சம்பளத்தில், 25 சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வேலை கிடைத்ததும், தாயை கைவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, தாயை பாது காக்க, வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
-விடுதலை நாளேடு,6.11.18

செவ்வாய், 6 நவம்பர், 2018

விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தொழிலாளர்களின் ஊதியத்தை ஏன் உயர்த்தக் கூடாது?

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, நவ.5 விலைவாசி உயர் வுக்கு ஏற்ப, தொழிலாளர்களின் ஊதி யத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த் தக்கூடாது? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப் பியதுடன் இதுகுறித்து பதில் தருமாறும் உத்தரவிட்டுள்ளது.  குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள பசிபிகா சென்னை திட்ட உட் கட்டமைப்பு நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றிய விக்னேஷ் என்ற தொழிலாளி கடந்த 2015 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரும்பு கம்பிகளை இழுத்தபோது 7ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
இதையடுத்து, இழப்பீடு கோரி விக்னேஷின் தந்தை ராஜரத்தினம், தாய் சரசுவதி ஆகியோர் சென்னையிலுள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் முறையிட்டனர். கோரிக்கையை பரிசீலித்த துணை ஆணையர் 8 லட்சத்து 95 ஆயிரத்து 840 இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென்றும், தவறினால் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். இந்நிலையில், இழப்பீடு தொகையை அதிகரிக்க கோரி விக்னேஷின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், வெல்டர் பணிகளுக்கு மாதம் 16,704 குறைந்தபட்ச ஊதியம் நிர் ணயித்து 2014இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கான இழப்பீட்டை 18 லட்சத்து 60 ஆயிரத்து 73 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இத்தொகைக்கு விபத்து நடந்த நாளிலி ருந்து 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.  மேலும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய மாக 8 ஆயிரம் என்று கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்தது. 8 ஆண்டுகள் கடந்த நிலையில், விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு இந்த தொகையை உயர்த்த அடுத்தடுத்து வந்த அரசுகள் தவறிவிட்டன.
தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் என சொல்லிக்கொள்ளும் தொழிற்சங் கங்கள் சிறு விஷயங்களில் மட்டுமே கவ னம் செலுத்துகின்றன. நாட்டின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் வகையிலும் இந்த செயல் உள்ளது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த்தக்கூடாது, தொழிலா ளர்களின் இழப்பீட்டு தொகையை ஏன் அதிகரிக்க கூடாது என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு வரும் டிசம் பர் 2ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- விடுதலை நாளேடு, 6.11.18

பாலியல் புகார் தெரிவிக்க குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மகளிர் ஆணையத்துக்கு தகவல் ஆணையம் வலியுறுத்தல்
புதுடில்லி, நவ.6  பாலியல் புகார் தெரிவிக்க குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணை யத்துக்கு மத்திய தகவல் ஆணை யம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாலியல் புகாருக் கும், அது தொடர்பான விசார ணைக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்து வருவது, பாலியல் புகார் அளிக்க முனை யும் பெண்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தாமோதர் பள்ளத் தாக்கு கழகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், உயரதி காரிகளால் தான் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தாக, தேசிய மகளிர் ஆணை யத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் குறித்து, ஆணையம் சரியாக விசாரணை நடத்தாததால், தனது புகாரின் நிலை குறித்து அறிய மத்திய தகவல் ஆணையத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார். அந்த மனு வின் மீது விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையர் சிறீதர் ஆச்சார்யலு கூறியதாவது:
குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராகப் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களை விசாரித்து, அந்தப் பெண்கள் நீதி பெற வழிவகை செய்வது தேசிய மகளிர் ஆணையம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய வற்றின் கடமையாகும். அவை தங்களின் அரசியலமைப்புக் கட மைகளை ஆற்றாமல் தட்டிக் கழிக்கக் கூடாது.
மனுதாரரின் புகாரை முறை யாக விசாரிக்காமல், தேசிய மகளிர் ஆணையம் அதனை தாமோதர் பள்ளத்தாக்கு கழகத் துக்கு அனுப்பியுள்ளது. அந்தக் கழகமும், இந்தப் புகார் குறித்த விளக்கத்தை மனுதாரருக்கு அளிக்கவில்லை. எனவே, அந்தக் கழகத்தின் பொதுத் தகவல் ஆணையர் அன் சூமன் மண்டலுக்கு, அதிகபட்ச அபராதமான ரூ.25,000 விதிக்கப் படுகிறது. மேலும், அந்தப் பெண் ணுக்குச் சரியான தகவல் அளிக் காதது, அவரை மன ரீதியாகத் துன்புறுத்தியது, அவரை அடிக்கடி பணியிடமாற்றம் செய்தது, அவரது வேலை செய்யும் உரிமையைப் பாதித்தது ஆகிய குற்றங்களுக்காக தாமோதர் பள்ளத்தாக்கு கழகம், அந்தப் பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக அளிக்க வேண்டும்.
ஊடகத்துறை, திரைப்படத் துறை, பத்திரிகையாளர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில், பாலியல் புகார் அளிப்பதற்கான குழுக்கள் இன்ன மும் அமைக்கப் படவில்லை. அத்தகைய நிறுவனங்கள் மீது தேசிய மகளிர் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாலியல் புகார் அளிப்பதற் கும் அதனை விசாரிப்பதற்கும் இடையே மிகப் பெரிய இடை வெளி உருவாகி வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்காவிட்டால், மகளிர் ஆணையம் மற்றும் பெண்கள் அமைச்சகத்தின் மீதுள்ள பெண் களின் நம்பிக்கை முற்றிலும் குலைந்து போகும். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினாலும், புகார் அளிக்க முன்வர மாட்டார்கள்.
எழுத்துப்பூர்வமாக அளிக்கப் படும் பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், பெண்கள் அனை வரும் சமூக ஊடகங்கள் வழியாகப் புகார் அளிக்கும் நிலையே ஏற்படும். தேசிய மகளிர் ஆணையம் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிவிக்கப்படும் பாலியல் புகார்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
- விடுதலை நாளேடு, 6.11.18

உழைப்பாளர் தினமான மே 1 விடுமுறை ரத்து: திரிபுரா மாநில பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்

அகர்தலா,  நவ.6  உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதி விடுமுறையை ரத்து செய்து திரிபுரா மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ள அறி விப்புக்கு, கண்டனங்கள் அதி கரித்து வருகின்றன.  2019-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை திரிபுரா மாநில பாஜக அரசு சனிக்கிழமையன்று வெளியிட்டது. அதில் உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதி பொது விடுமுறை என்பது ரத்து செய்யப்பட்டு அது 'கட்டுப்படுத்தப்பட்ட  விடுமுறை' என்ற வகையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது   இதுதொடர்பாக திரிபுரா மாநில சிஅய்டியு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் ஆணை யத்திடம் சிஅய்டியு சார்பில் புகார் செய்ய உள்ளதாக தெரி விக்கிறது.
அதுபோல் திரிபுரா கம் யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளரும், நாடாளுமன்ற உறுப் பினருமான சங்கர் பிரசாத் தத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரிபுராவின் முதல் இடது முன்னணி அரசானது 1978-ஆம் ஆண்டில் மே ஒன்றாம் தேதியை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தது. ஆனால், தற் போதுள்ள பாஜக அரசானது எந்த காரணமும் இல்லாமல் அதை ரத்து செய்துள்ளது. மே தினம் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் அன்று நடைபெறுவதை தடுக்கும் விதமாக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிக்கு எதிராக, சிஅய்டியு சார்பில் சர்வதேச தொழிலாளர் ஆணையத்திடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-  விடுதலை நாளேடு,6.11.18

வெள்ளி, 2 நவம்பர், 2018

2019ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, அக்.31 அடுத்த ஆண்டின் (2019) பொது விடுமுறை நாள்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 22 நாள்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

- viduthalai, 31.10.18

புதன், 31 அக்டோபர், 2018

முன்மாதிரி திட்டம் பெண் தொழிலாளர்கள் மதிப்பை உறுதிப்படுத்த உட்காரும் உரிமை-அவசர சட்டம் அமல்!

திருவனந்தபுரம், அக்.27- பெண் தொழிலாளிகளின் மதிப்பையும், பாதுகாப்பையும் உறுதிப் படுத்த உதவும் வகையில் கடைகள், வணிக நிறுவனங்களில் பணியிடங்களில் உட்காரும் உரிமை குறித்து கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் நாட்டுக்கே மற்றுமொரு முன்மாதிரியாகி உள்ளது. இது தொடர்பான அவசரசட்டம் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலாகத் தொடங்கியுள்ளது.
1960ஆம் வருடத்திய கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும் சட்டத்தில் தொழி லாளிகளுக்கு சாதகமானதிருத்தங்கள் செய் வது தொடர்பான மசோதாவின் அவசர முக்கியத்துவம் கருதி ஆளுநர் இதுதொடர்பான அவசரசட்டத்தை பிறப்பித்துள்ளார்.
எல்டிஎப்அரசின்தொழிலாளர்நல நடவடிக்கைகளில் முக்கியமான மைல்கல் லாக இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந் துள்ளது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.வி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சட்டத் திருத்தத்தை உடனடியாக அமலாக்க தொழிலதிபர்களையும், இதுதொடர்பான உரிமைகளை உறுதிப்படுத்த தொழிலா ளிகளையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
துணிக்கடைகள், நகைக்கடைகள், உண வகங்கள் போன்ற வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்டோரின் நீண்டகால கோரிக்கை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. பெண்களின் மரியா தையை உயர்த்தும் வகையில் அவர்கள் பணி யாற்றும் இடங்களில் பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்படும் என எல்டிஎப் அரசின் தொழில் கொள்கையில் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் மாலையில் பணிமுடியும்வரை பெண் தொழிலாளர்களுக்கு உட்கார உரிமை இல்லாத நிலையே நீடித்து வந்தது. மிக கடினமான தொழில் சூழ்நிலையை அவர்கள் நேரிட்டு வந்தனர். பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்கவேண்டும் என பல்வேறு மய்யங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டக் களம் கண்டனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாக இருப்பிடத்தை உரிமையாகமாற்றியிருக்கிறது.எல்டிஎப் அரசு. பத்தாயிரக்கணக்கான பெண் தொழி லாளர்களின் மரியாதையும், மனித உரிமை களும் பாதுகாக்கப்படும் முடிவை அரசு எடுத்துள்ளது.
சட்டத் திருத்தத்தில் வழிவகை
பணியிடங்களில் இருக்கை வழங்கப்படா தது குறித்து நீண்டகாலமாக புகார் இருந்து வந்தது. சட்டத்திருத்தத்தின்மூலம் இருக்கை அவர்களது உரிமையாக மாறிவிட்டது. மாலை ஏழு மணிமுதல் காலை ஆறு மணிவரை பெண்களை வேலை வாங்கக் கூடாது என்பதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு ஒன்பது மணிவரை வேலைசெய்யும் வகையில் பெண் தொழிலாளிகளை நியமனம் செய்ய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடுபோதுமானபாதுகாப்பு,குடி யிருக்கும் பகுதிக்கான பயண வசதி போன்ற வற்றை உறுதி செய்து ஒன்பது மணிவரை பெண்களை அவர்களது அனுமதியோடு பணிக்கு நியமனம்செய்யலாம். இரவு ஒன்பது மணிக்குமேல் 2 முதல் 5 பெண்கள் கொண்ட குழுவாக மட்டுமே பணிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். வாரத்தில் ஒருநாள் கடைகள் மூடப்பட வேண்டும் என்கிற நிபந்தனை கைவிடப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கவேண்டும் என்கிற நிபந் தனை சேர்க்கப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் உள்ளிட்டோர் எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் தொழிலாளி என்கிற வரையறைக்கு அவர்களை உட்படுத்த அரசுக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டமீறல்களுக்கான தண்டனை சட்டத்திருத்தத்தில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
சட்ட விதிகளை மீறும் தொழிலதிபர்களுக் கானஅபராதம்ஒவ்வொருபிரிவுக்கும்அய்ந் தாயிரம் ரூபாய் என்பதுஒரு லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்ட மீறலில் ஈடு படுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பதினாயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேரள கடைகளும், வணிக நிறுவனங்களும் சட்டத்தின்படி நிறுவன உரிமையாளர்கள் பதிவேடுகளை மின்னணு வடிவத்தில் பரா மரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1960 இன்படி மூன்றரை லட்சம் நிறுவனங்கள் உள்ளதாகவரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 35 லட்சம் தொழிலாளர்கள் இந்த சட்டத்தின் வரம்புக்குள் வருவார்கள்.
- விடுதலை நாளேடு, 27.10.18

வியாழன், 18 அக்டோபர், 2018

கோத்ரேஜ் தி.தொ.ச.[ GODREJ DWU ]: கோத்ரேஜ் தொழிலக ஆண்டு விழா - 2018

கோத்ரேஜ் தி.தொ.ச.[ GODREJ DWU ]: கோத்ரேஜ் தொழிலக ஆண்டு விழா - 2018:           மறைமலை நகரிலுள்ள கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவன ஆண்டுவிழா 17.10.18 முற்பகல் தொழிற்சாலை வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது.    ...

செவ்வாய், 24 ஜூலை, 2018

கலைச்செல்வன் பணி ஓய்வு - ரூ.10,000/ நன்கொடை


 

பெரியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வன் அவர்கள் பணி நிறைவு அடைந்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். அவரது பணியைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை உள்ளனர். (திருச்சி -& 14.7.2018)
- விடுதலை நாளேடு, 17.7.18

திங்கள், 15 ஜனவரி, 2018

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை


திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றும் எல்.சி.எஸ். தொழிலாளர்களைப் பணி நிரந்தரப்படுத்துவது தொடர்பாக மதுரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோரை சந்தித்து திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், சண்முகம் (திராவிடர் கழகம்), நடராசன் (பெல் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர், தி.மு.க.), தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) மற்றும் ராஜப்பா, மாரியப்பன் (திராவிடர் கழகம்), அங்குராஜ், காமராசு, தி.க.சாமி, மாரியப்பன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர் (12.11.2017).
- விடுதலை, 18.11.17

வேலையின்மை, குறைவான ஊதியம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


புதுடில்லி, டிச. 5 நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏன் தொடர்கிறது? தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது? ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வரு கிறார். அந்த வரிசையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது: நாட்டில் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித் திருந்தது. அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றாதது ஏன்? குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்று ஏழாவது ஊதி யக் குழு பரிந்துரை செய்துள்ளது. இருந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 5,500 ரூபாயும் பெறுவது ஏன்? என்று ராகுல் காந்தி அந்த சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்கி புயல் காரணமாக, கடலில் தத்தளித்த மீனவர்களை, துணிச்சலுடன் காப்பாற்றிய லட்சத் தீவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தலை வணங்குவதாகவும் மற்றொரு பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட் டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.
-விடுதலை நாளேடு, 5.12.17