செவ்வாய், 6 நவம்பர், 2018

விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தொழிலாளர்களின் ஊதியத்தை ஏன் உயர்த்தக் கூடாது?

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, நவ.5 விலைவாசி உயர் வுக்கு ஏற்ப, தொழிலாளர்களின் ஊதி யத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த் தக்கூடாது? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப் பியதுடன் இதுகுறித்து பதில் தருமாறும் உத்தரவிட்டுள்ளது.  குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள பசிபிகா சென்னை திட்ட உட் கட்டமைப்பு நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றிய விக்னேஷ் என்ற தொழிலாளி கடந்த 2015 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரும்பு கம்பிகளை இழுத்தபோது 7ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
இதையடுத்து, இழப்பீடு கோரி விக்னேஷின் தந்தை ராஜரத்தினம், தாய் சரசுவதி ஆகியோர் சென்னையிலுள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் முறையிட்டனர். கோரிக்கையை பரிசீலித்த துணை ஆணையர் 8 லட்சத்து 95 ஆயிரத்து 840 இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென்றும், தவறினால் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். இந்நிலையில், இழப்பீடு தொகையை அதிகரிக்க கோரி விக்னேஷின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், வெல்டர் பணிகளுக்கு மாதம் 16,704 குறைந்தபட்ச ஊதியம் நிர் ணயித்து 2014இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கான இழப்பீட்டை 18 லட்சத்து 60 ஆயிரத்து 73 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இத்தொகைக்கு விபத்து நடந்த நாளிலி ருந்து 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.  மேலும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய மாக 8 ஆயிரம் என்று கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்தது. 8 ஆண்டுகள் கடந்த நிலையில், விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு இந்த தொகையை உயர்த்த அடுத்தடுத்து வந்த அரசுகள் தவறிவிட்டன.
தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் என சொல்லிக்கொள்ளும் தொழிற்சங் கங்கள் சிறு விஷயங்களில் மட்டுமே கவ னம் செலுத்துகின்றன. நாட்டின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் வகையிலும் இந்த செயல் உள்ளது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த்தக்கூடாது, தொழிலா ளர்களின் இழப்பீட்டு தொகையை ஏன் அதிகரிக்க கூடாது என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு வரும் டிசம் பர் 2ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- விடுதலை நாளேடு, 6.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக