BHEL நிறுவனத்தில் மேற் பார்வையாளராக பணி புரியும் வட இந்தியாவைச் சேர்ந்த வருண் குமார் சர்மா என்பவர், மேற்பார்வையா ளர் வாட்ஸ்ஆப் குழுவில் "தமிழன்கள் ஏதும் அறியாத வர்கள் என்றும், அத்தோடு நாய்க்கு எலும்பு கிடைத்தால் சந்தோஷம் அடைவதும் போன்று தமிழன் இருப்பான்" எனத் தமிழினத் தொழிலாளர்களைக் கீழ்த்தரமாக பேசியதோடு அதனையே வாட்ஸ்ஆப் (கீலீணீ கிஜீஜீ) பொதுத்தளத்தில் பதிவிட்டிருப்பது மானமுள்ள தமிழினத் தோழர்களை மனவேதனை அடைந்திடச் செய்துள்ளது. பல தமிழக மேற்பார்வைத் தோழர்கள் வருத்தம் தெரிவித்து பதிவிடக் கேட்டுக்கொண்டும் வருண்குமார் சர்மா முதலில் மறுத்து பின்பு மூன்று நாட்கள் கழித்துப் பதிவிட்டார்.
தமிழர்களின் சுயமரியாதைக் காவல் அரணான திராவிடர் கழகத்தின் தொழிலாளர் இயக்கமான பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து நடவடிக்கை வேண்டும் எனக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் அவர்கள் வருண்குமார் சர்மாவை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தமிழர்களின் சுயமரியாதையைக் கொச்சைப்படுத்திய வடநாட்டு வருண் குமார் சர்மா மீது கண்டிப்பாக காவல் துறை வழக்கு பதிந்திட வேண்டும் என பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
தகவல்: ஞா. ஆரோக்கியராஜ்
தலைவர், மாவட்ட திராவிடர் கழகம்
- விடுதலை நாளேடு, 5.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக