வியாழன், 26 மே, 2022

வங்கி எழுத்தர் தேர்வில் தமிழ்மொழி புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் வங்கி பணியாளர்கள் பங்கேற்பு

 

சென்னை, மே 26- வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை.யா? தமிழ்நாட்டு இளைஞர்க ளின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் சதித்திட்டத்தை கண் டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் 24.5.2022 அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்க ளின் தலைமையில் அதன் நிர்வாகிகள் பிரபாகரன், ராஜசேகரன், சுரேஷ் மற்றும் யூனியன் வங்கிப் பணியாளர்களின் சங்க நிருவாகிகள் டி.ரவிக் குமார், கே.சந்திரன் ஆகி யோர் பங்கேற்றனர்.

சனி, 21 மே, 2022

பொதுப் பிரிவிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னுரிமை தரவேண்டும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்


 புதுடில்லி,மே 3- கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொதுப் பிரிவிலும், முன்னுரிமை தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் சார்பில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்ஸ் (டிடிடி) என்றகாலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப் பெண்கள் 40 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 33 சதவீதமாகவும் நிர்ண யிக்கப்பட்டது.

ஆனால், தேர்வில், பொதுப் பிரிவினரில் ஒருவர் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறவில்லை.  அதேசமயம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 4 பேர் தங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி யடைந்தனர்.

மதிப்பெண்கள் தளர்வு: இதில் அலோக் குமார் யாதவ் என்பவர் 39.87 சதவீதமும் (ஓபிசி), தினேஷ் குமார் என்பவர் 38.5 சதவீதமும் (ஓபிசி) பெற்றனர். இந்நிலையில், எழுத்துத் தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தகுதிபெறவில்லை என்பதால் பிஎஸ்என்எல் நிர்வாகம் பொதுப் பிரிவினருக்கு 30% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 23% ஆகவும் மதிப்பெண்கள் வரம்பை தளர்த்தியது. இந்த புதிய வழிமுறைகளின் படி, பொதுப்பிரிவு வகுப்பினரில் 5 பேர் பணியில்சேர தகுதி பெற்றனர். பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து சந்தீப் சவுத்ரி என்பவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தனதுமனுவில் கூறும்போது, "விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காகமட்டும் குறைந்தபட்ச மதிப்பெண்களை மாற்றியமைத்தது செல்லாதது ஆகும்.

ஏற்கெனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 2 தேர்வர்கள் (அலோக் குமார் யாதவ் மற்றும்தினேஷ் குமார்) பொது முறைகளின் மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில், தெரிவு செய்யப்படுவதற்கு தகுதி யுடையவராவர். அவர்கள், பொதுப் பிரிவில்தான் தேர்வாகி இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடத்தின் எண்ணிக்கை எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்றார்.

தீர்ப்பாயத்தை எதிர்த்து மனு

 இந்த மனுவை விசாரித்த நடுவர் தீர்ப்பாயம், ஏதேனும் வாய்ப்பிருந் தால், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு உடனடியாக சம வாய்ப்பை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிர்வாகம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 2 தேர்வர்கள் பொதுப் பிரிவில் தேர்வாக தகுதியுடையவர்கள். அலோக்குமார் யாதவ் மற்றும் தினேஷ் குமார் இருவரையும், பொதுப்பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள், எம்.ஆர். ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 1992இல் நடந்த ஒன்றிய அரசு தொடர்ந்து நீதிபதி இந்திரா சாஹ்னி விசாரித்த வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு செல்லும்என்று தீர்ப்பு வழங்கினர். மேலும், பொதுப்பிரிவில் கடைசி மதிப்பெண் பெற்று தேர் வான நபரை விட, அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர், பொதுப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர் என்றும் தெரிவித்தது.

இரவு நேரத்தில் செயல்படும் உணவகங்களை விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரமில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

 

சென்னைபிப்.24  இரவு நேர உணவகங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் விரைவாக மூடும் படி கட்டாயப்படுத்த காவல் துறையினருக்கு அதிகார மில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள இரவுநேர துரித உணவகத்தின் அன்றாடசெயல்பாடுகளில் காவல்துறையினர் குறுக்கிட்டு இடையூறு செய்வதாகவும்இது தங்களது அடிப்படை உரிமை யைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி அந்த உண வக உரிமையாளர் எஸ்.குண ராஜாஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

அதில்கடந்த 11 ஆண்டு களாக இப்பகுதியில் இரவுநேர சைவ துரித உணவகம் நடத்தி வருகிறேன்ஆனால் கடந்த சில மாதங்களாக  காவல்துறையினர் இரவு 10.30 மணிக்குள் எனது உணவகத்தை மூடும்படி கட்டாயப்படுத்துகின்றனர்அதற்கு மேல் உணவகத்தை திறக்கக்கூடாது என கடுமை யான சொற்களால் வாடிக்கை யாளர்களின் முன்னிலையி லேயே எச்சரித்துசெல்கின் றனர்காவல்துறையினரின் தொந்தர வால் எனது வணிகம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனது கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் நள்ளிரவு நேரங்களில்தான் வருகின்றனர்எனவே அதிகாலை 1.30 மணி வரைஎனது கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக் கும்படி காவல்துறை உயரதிகாரி களுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லைஎனவே எனது இரவுநேரதுரித உணவகத்தை அதிகாலை வரை திறந்து வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்கடையை மூடும்படி காவல்துறையினர் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி முன்பாக நடந்ததுஅப்போது மனுதாரர் தரப்பில் வழக் குரைஞர் ராமும்அரசு தரப்பில் வழக்குரைஞர் எம்.ஷாஜகானும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அரசு தரப்பில் இரவு நேரங்களில் சட்டம் - ஒழுங்குபிரச்சினை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இரவு நேரங்களில் உணவகங்கள் உள் ளிட்ட கடைகளை விரைவாக மூடும்படி காவல்துறையினர் எச்சரித்து அறிவுறுத்துகின்றனர்இந்த உத்தரவும் வாய் மொழி யாகவே பிறப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப் பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தடுத்து பொதுமக்களுக்கு உரிய பாது காப்பு அளிக்க வேண்டிய கட மையும்பொறுப்பும் காவல் துறையினருக்கு உள்ளதுஆனால் அதையே காரணம் காட்டி இரவு நேரங்களில் உணவகம் நடத்தி பிழைப்பு நடத்தும் வியாபாரிகளைகடையை மூடும்படி மிரட்டுவது ஏற்புடையதல்ல.

பொதுமக்கள் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை எந்நேரமும் சாப்பிட அவர் களுக்கு அரசமைப்பு சட்டப் பிரகாரம் பிரிவு 21-இன் கீழ் அடிப்படை உரிமை உள்ளதுஎனவேஇரவு நேரங்களை மய்யமாக வைத்து வியாபாரம் செய்யும் உணவகங்களை விரை வாக மூடும்படி காவல்துறையினர் கட்டாயப்படுத்த முடி யாதுஅவ்வாறு கட்டாயப் படுத்த காவல்துறையினருக்கு அதிகாரமில்லை.

ஏனெனில் சட்டப்பிரிவு 19(1)(ஜிபிரகாரம் ஒருவருக்கு தனது கடையைத் திறந்து வைக்கும் சுதந்திரமும்அதை அணுகும் உரிமை பொதுமக்களுக்கும் உள்ளதுதமிழ்நாடு அரசின் சட்டப்படி உணவகங்கள் திறக்க வேண்டிய மற்றும் மூட வேண்டிய நேரத்தை காவல் துறையினர் தீர்மானிக்க முடி யாதுஅரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளதுஅரசு அறிவிப்பின்படி உணவகங்கள் தொடர்ந்து செயல்பட எந்த தடையும் இல்லை.

இரவு நேரங்களில் பணிக்குச் செல்லும் தனியார் நிறுவன ஊழியர்கள்இரவு காவலர்கள்வாகனஓட்டிகளின் உணவுத் தேவையைபூர்த்தி செய்யவே இரவு நேரக்கடைகள் செயல் படுகின்றன.

சட்டம் - ஒழுங்கு பிரச்சி னையைக் காரணம் காட்டி அந்த உணவகங்களுக்கு காவல்துறையினர் தொந்தரவு செய்யக் கூடாதுஅதேநேரம் இரவு நேர உணவகங்களில் சட்ட விரோத செயல்பாடுகள் நடை பெற்றால் காவல்துறையினர் உரிய நட வடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது

சமூக நீதிப் பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவருக்கு யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்க நிர்வாகிகள் வாழ்த்து-நன்கொடை அளிப்பு

 

'நீட்' தேர்வு ரத்து, ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணத்தை வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி முதல் ஏப்ரல் 25-ஆம் தேதி வரை கன்னியாகுமரி முதல் சென்னை வரை மேற்கொள்ளும் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களை நேற்று (1.4.2022) சென்னை பெரியார் திடலில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் நிர்வாகிகள் கோ.கருணாநிதி (தலைவர்), எஸ்.நடராசன் (பொதுச்செயலாளர்), பி.லோகேஷ் பிரபு (அகில இந்திய நல சங்கத்தின் பொருளாளர்), எஸ்.சத்தியமூர்த்தி (இணை செயலாளர்), ஆலோசகர்கள் எஸ்.சேகரன், ஞா.மலர்க்கொடி, டி.ரவிக்குமார், கே.சந்திரன் ஆகியோர் சந்தித்து,  பூங்கொத்து அளித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். நல சங்கத்தின் சார்பில் ரூ.10,000 நன்கொடை அளித்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடனிருந்தார். 

தொழிற்சங்கங்களின் 2 நாள் பொது வேலைநிறுத்தம் போக்குவரத்து, வங்கி சேவை பாதிப்பு: தொழிலாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

 

சென்னைமார்ச் 29- மத்திய தொழிற்சங்க கூட்ட மைப்பினர் அறிவித்த 2 நாள் பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியதுமுதல்நாளில் தமிழ்நாட்டில் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லைவங்கிச் சேவைகளும் பாதிக்கப் பட்டன.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும்மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாதுவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று (28.3.2022) தொடங்கினர்.

ஒன்றியமாநில அரசு ஊழியர் சங்கங்கள்சிஅய்டியுஅய்என்டியுசிஎம்எம் எஸ்ஏஅய்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளனஇதனால்பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் போராட் டத்துக்கு ஆதரவு தெரி வித்திருந்தனபெரும்பாலான தொழிற்சங்கங்கள்அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர்போக்கு வரத்துமின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர் களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பாதிப்பு அதிகமாக இருந்தது.

ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது’ என ஒன்றியமாநில அரசுகள் எச்சரித்தபோதும்கூட நேற்று பொது வேலை நிறுத்தம் தீவிரமாக நடந்ததுதமிழ்நாட்டில் 8 அரசு போக்கு வரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழி லாளர்கள் பணியாற்றி வருகி றார்கள்அவர்களில் பெரும்பாலான ஓட்டுநர்நடத்துநர்கள் நேற்று பணிக்கு வரவில்லைஇதனால் தமிழ்நாடு முழு வதும் சுமார் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லைஅண்ணா தொழிற்சங்கத் தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வில்லை என்று அறிவித்து இருந்தனர்ஆனால்நேற்று காலை அந்த சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள்நடத்துநர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர்இதனால் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டதுஅரசுப் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பேருந்துகள் ஓடவில்லை

சென்னையில் 80 சதவீத மாநகர பேருந் துகள் ஓடவில்லைஇதனால்பேருந்து நிறுத்தங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்து நின்றனர்வேலைக்கு செல்பவர்கள்பள்ளிகல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்ஆட்டோடாக்சிகளில் 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித் தனர்பலர் சரக்கு வாகனங்களில் ஏறிச் சென்றனர்சிலர் நடந்தே சென்றனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழி யர்களும் பங்கேற்றுள்ளதால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டதுவங்கி  ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் தியாகராய நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வங்கி இணையதள சேவைகள் பாதிப்பின்றி வழக்கம்போல செயல்பட்டனஏடிஎம் மய்யங் களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கப் பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம் காரணமாகநாள் ஒன்றுக்கு ரூ.1.60 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு கோடி காசோலைகள் என்ற அளவில் 2 நாளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனைகள் நாடு முழுதும் பாதிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்இந்த போ ராட்டத்தில்பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்க வில்லை.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய அரசு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை மய்ய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுசங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் எஸ்.சுந்தர மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்இதேபோலஎல்அய்சி அலுவலகம் முன்பாக அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுசங்கத்தின் சென்னை பகுதி-1 தலைவர் ஜெயராமன்பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார்சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் செந்தில்குமார்முகவர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சென்னையில் 21 இடங்களில் மறியல்

அண்ணா சாலைஎழும்பூர்சென்ட்ரல் உட்பட சென்னையில் 21 இடங்களில் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்மறியலில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் உடனே கலைந்து போக செய்ததால் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்படவில்லைஇதேபோல தமிழ்நாடு முழுவதும் சுமார் 165 இடங்களில் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறதுதமிழ் நாட்டில் ரயில்சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துபின்னர் விடுவித்தனர்மாநிலம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்குறிப்பாக 323 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 155 இடங் களில் ஆர்ப் பாட்டமும் 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் 5 இடங்களில் அலுவலக முற்றுகை போராட்டமும் நடந்ததாக காவல்துறை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக தொழிற்சங்கமான தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘பேருந்துகள் இயக்கப் படாததால் பொது மக்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர்போராட்டத்தின் வடிவை மாற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில்இன்று (29ஆம் தேதி) 60 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

வங்கிகளில் கிளார்க் நியமனம்: பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்!

 

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த விவரங்களை வங்கி பணியாளர் தேர்வு மய்யம் வெளியிட்டுள்ளதுவருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படிதமிழ்நாட்டில்இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - 27 விழுக்காடுதாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு - 18 விழுக்காடுபழங்குடியின பிரிவினருக்கு - 1, EWS  - 10 விழுக்காடு என்ற விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில்குறிப்பாகயூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் நாட்டில் 147 எழுத்தர் பணியிடங்களில்இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு 40 இடங்களுக்கு பதிலாக பூஜ்யம் இடங்களும்EWS  எனப்படும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு’ 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுஅதாவதுஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பூஜ்யம் இடங்களும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு 7 இடங்கள் அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல மாநிலங்களில்,  இதர பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்டபழங்குடியின  பிரிவினர்க்கு அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுப்பு மற்றும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிக இடங்கள்” குறித்த விவரம்:

                                                     ஓபிசி          உயர்ஜாதி ஏழை’ EWS 

மாநிலம்          மொத்த            ஒதுக்கப்பட்ட             வாய்ப்பு           ஒதுக்கப்பட்ட               கூடுதல்          

               இடங்கள்        இடங்கள்        மறுப்பு              இடங்கள்        இடங்கள்

ஆந்திரா           248        0             67           51           +26

கருநாடகா     209        33           23           37           +16

மகாராட்டிரா               321        9             79           52           +20

ஒடிசா               113        2             29           22           +11

தமிழ் நாடு     147        0             40           21           +07

தெலங்கானா              205        0             55           43           +22

உத்தரப்பிரதேசம்     244        45           21           48           +24

மேற்கு வங்கம்          71           13           06           12           +05

இது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்சம்பந்தப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு மய்யம்யூனியன் பாங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பா...  தலைமையிலான கூட்டணி அரசு இடஒதுக்கீட்டின் முதுகெலும்பை முறித்துஆணி வேரை அறவே சுட்டு எரித்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் போலும்.

மேற்கண்ட புள்ளி விவரம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜியம் இடம் என்றால் இந்தப் பார்ப்பன ஆதிக்கக் கொழுப்புக்கு முடிவுதான் என்ன?

கடந்த 2020இல் பாரத ஸ்டேடட் வங்கியின் எழுத்தர் (கிளார்க்தேர்வின் முடிவுகள் சொல்லுவது என்ன?

பழங்குடியினருக்கு கட்ஆஃப் மார்க் - 53.75

தாழ்த்தப்பட்டோருக்கு -  61.25

பிற்படுத்தப்பட்டோருக்கு - 61.25

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதிப் பிரிவினருக்கு - 28.5 என்னே கொடுமை!

இது உயர்ஜாதி ஏழை ( EWS ) என்ற ஒன்றை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் கொல்லைப்புறம் வழியாக நுழைவதற்கான ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?

"ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி" - என்று ஜீவானந்தம் பாடியதை நினைவு கொள்கஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழாவிட்டால் ஓட்டாண்டியாக வீதிகளில் நிற்க வேண்டியதுதான்.

பார்ப்பனர் நாயகத்தை வீழ்த்திடபழிவாங்கப்படும் மக்கள் சக்தி - 'ஆயிரங்கால் பூதமாகக்கிளர்ந்து எழுகஎழுகஎழுகவே!