சனி, 21 மே, 2022

தொழிற்சங்கங்களின் 2 நாள் பொது வேலைநிறுத்தம் போக்குவரத்து, வங்கி சேவை பாதிப்பு: தொழிலாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்

 

சென்னைமார்ச் 29- மத்திய தொழிற்சங்க கூட்ட மைப்பினர் அறிவித்த 2 நாள் பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியதுமுதல்நாளில் தமிழ்நாட்டில் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லைவங்கிச் சேவைகளும் பாதிக்கப் பட்டன.

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும்மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாதுவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பினர் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று (28.3.2022) தொடங்கினர்.

ஒன்றியமாநில அரசு ஊழியர் சங்கங்கள்சிஅய்டியுஅய்என்டியுசிஎம்எம் எஸ்ஏஅய்டியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளனஇதனால்பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்ளிட்ட பல் வேறு கட்சிகள் போராட் டத்துக்கு ஆதரவு தெரி வித்திருந்தனபெரும்பாலான தொழிற்சங்கங்கள்அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழி லாளர்கள் போராட்டத்தில் ஈடுபட் டனர்போக்கு வரத்துமின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை தொழிலாளர் களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பாதிப்பு அதிகமாக இருந்தது.

ஊழியர்கள் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது’ என ஒன்றியமாநில அரசுகள் எச்சரித்தபோதும்கூட நேற்று பொது வேலை நிறுத்தம் தீவிரமாக நடந்ததுதமிழ்நாட்டில் 8 அரசு போக்கு வரத்து கழகங்களில் 1.35 லட்சம் தொழி லாளர்கள் பணியாற்றி வருகி றார்கள்அவர்களில் பெரும்பாலான ஓட்டுநர்நடத்துநர்கள் நேற்று பணிக்கு வரவில்லைஇதனால் தமிழ்நாடு முழு வதும் சுமார் 68 சதவீத பேருந்துகள் இயங்கவில்லைஅண்ணா தொழிற்சங்கத் தினர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வில்லை என்று அறிவித்து இருந்தனர்ஆனால்நேற்று காலை அந்த சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள்நடத்துநர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர்இதனால் தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டதுஅரசுப் பேருந்துகள் இயங்காததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பேருந்துகள் ஓடவில்லை

சென்னையில் 80 சதவீத மாநகர பேருந் துகள் ஓடவில்லைஇதனால்பேருந்து நிறுத்தங்களில் மக்கள் நீண்ட நேரம் காத்து நின்றனர்வேலைக்கு செல்பவர்கள்பள்ளிகல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்ஆட்டோடாக்சிகளில் 3 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித் தனர்பலர் சரக்கு வாகனங்களில் ஏறிச் சென்றனர்சிலர் நடந்தே சென்றனர்.

வேலைநிறுத்த போராட்டத்தில் வங்கி ஊழி யர்களும் பங்கேற்றுள்ளதால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டதுவங்கி  ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் மற்றும் தியாகராய நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

வங்கி இணையதள சேவைகள் பாதிப்பின்றி வழக்கம்போல செயல்பட்டனஏடிஎம் மய்யங் களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கப் பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம் காரணமாகநாள் ஒன்றுக்கு ரூ.1.60 லட்சம் கோடி மதிப்பிலான ஒரு கோடி காசோலைகள் என்ற அளவில் 2 நாளுக்கு ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவர்த்தனைகள் நாடு முழுதும் பாதிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்இந்த போ ராட்டத்தில்பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்க வில்லை.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒன்றிய அரசு அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை மய்ய அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுசங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச் செயலாளர் எஸ்.சுந்தர மூர்த்தி தலைமையில் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்இதேபோலஎல்அய்சி அலுவலகம் முன்பாக அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுசங்கத்தின் சென்னை பகுதி-1 தலைவர் ஜெயராமன்பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார்சங்கத்தின் தென் மண்டல பொதுச் செயலாளர் செந்தில்குமார்முகவர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

சென்னையில் 21 இடங்களில் மறியல்

அண்ணா சாலைஎழும்பூர்சென்ட்ரல் உட்பட சென்னையில் 21 இடங்களில் தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்மறியலில் ஈடுபட்ட வர்களை காவல்துறையினர் உடனே கலைந்து போக செய்ததால் பெரிய அளவில் வாகன நெரிசல் ஏற்படவில்லைஇதேபோல தமிழ்நாடு முழுவதும் சுமார் 165 இடங்களில் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்இரண்டாவது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறதுதமிழ் நாட்டில் ரயில்சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துபின்னர் விடுவித்தனர்மாநிலம் முழுவதும் மொத்தம் 37 ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்குறிப்பாக 323 இடங்களில் சாலை மறியல் போராட்டமும், 155 இடங் களில் ஆர்ப் பாட்டமும் 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் 5 இடங்களில் அலுவலக முற்றுகை போராட்டமும் நடந்ததாக காவல்துறை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுக தொழிற்சங்கமான தொமுச பொருளாளர் நடராஜன் கூறும்போது, ‘‘பேருந்துகள் இயக்கப் படாததால் பொது மக்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர்போராட்டத்தின் வடிவை மாற்ற வேண் டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில்இன்று (29ஆம் தேதி) 60 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

வங்கிகளில் கிளார்க் நியமனம்: பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்!

 

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த விவரங்களை வங்கி பணியாளர் தேர்வு மய்யம் வெளியிட்டுள்ளதுவருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படிதமிழ்நாட்டில்இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - 27 விழுக்காடுதாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு - 18 விழுக்காடுபழங்குடியின பிரிவினருக்கு - 1, EWS  - 10 விழுக்காடு என்ற விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில்குறிப்பாகயூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் நாட்டில் 147 எழுத்தர் பணியிடங்களில்இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு 40 இடங்களுக்கு பதிலாக பூஜ்யம் இடங்களும்EWS  எனப்படும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு’ 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுஅதாவதுஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பூஜ்யம் இடங்களும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு 7 இடங்கள் அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல மாநிலங்களில்,  இதர பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்டபழங்குடியின  பிரிவினர்க்கு அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுப்பு மற்றும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிக இடங்கள்” குறித்த விவரம்:

                                                     ஓபிசி          உயர்ஜாதி ஏழை’ EWS 

மாநிலம்          மொத்த            ஒதுக்கப்பட்ட             வாய்ப்பு           ஒதுக்கப்பட்ட               கூடுதல்          

               இடங்கள்        இடங்கள்        மறுப்பு              இடங்கள்        இடங்கள்

ஆந்திரா           248        0             67           51           +26

கருநாடகா     209        33           23           37           +16

மகாராட்டிரா               321        9             79           52           +20

ஒடிசா               113        2             29           22           +11

தமிழ் நாடு     147        0             40           21           +07

தெலங்கானா              205        0             55           43           +22

உத்தரப்பிரதேசம்     244        45           21           48           +24

மேற்கு வங்கம்          71           13           06           12           +05

இது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்சம்பந்தப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு மய்யம்யூனியன் பாங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பா...  தலைமையிலான கூட்டணி அரசு இடஒதுக்கீட்டின் முதுகெலும்பை முறித்துஆணி வேரை அறவே சுட்டு எரித்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் போலும்.

மேற்கண்ட புள்ளி விவரம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜியம் இடம் என்றால் இந்தப் பார்ப்பன ஆதிக்கக் கொழுப்புக்கு முடிவுதான் என்ன?

கடந்த 2020இல் பாரத ஸ்டேடட் வங்கியின் எழுத்தர் (கிளார்க்தேர்வின் முடிவுகள் சொல்லுவது என்ன?

பழங்குடியினருக்கு கட்ஆஃப் மார்க் - 53.75

தாழ்த்தப்பட்டோருக்கு -  61.25

பிற்படுத்தப்பட்டோருக்கு - 61.25

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதிப் பிரிவினருக்கு - 28.5 என்னே கொடுமை!

இது உயர்ஜாதி ஏழை ( EWS ) என்ற ஒன்றை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் கொல்லைப்புறம் வழியாக நுழைவதற்கான ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?

"ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி" - என்று ஜீவானந்தம் பாடியதை நினைவு கொள்கஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழாவிட்டால் ஓட்டாண்டியாக வீதிகளில் நிற்க வேண்டியதுதான்.

பார்ப்பனர் நாயகத்தை வீழ்த்திடபழிவாங்கப்படும் மக்கள் சக்தி - 'ஆயிரங்கால் பூதமாகக்கிளர்ந்து எழுகஎழுகஎழுகவே!

தேசிய அளவில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு உருவாக்கம்

 

புதுடில்லிமார்ச் 24- அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர் நல சங்க அமைப்புகளை அழைத்துபிற்படுத்தப்பட்டோர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல ‘சமூகநீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்திடும் முயற்சியில் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நல சங்க கூட்டமைப் பின் முயற் சிக்கு பெரும் வெற்றி. 13 அமைப்பு களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு உருவானது.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் கூட்ட மைப்பு எடுத்த முயற்சியின் பேரில்தேசிய / மாநில அளவில் செயல் படும் ஓபிசி சங்கங்களின் கூட்டம்,  புதுடில்லியில் (துணை சபா நாய கர் இணைப்பு அரங்கம்கான்ஸ்டி டியூசன் கிளப்புதுடில்லிநடை பெற்றது   22 மார்ச் 2022. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்கு முடிவடைந்த கூட்டம் கிட்டத்தட்ட அய்ந்து மணி நேரம் நீடித்ததுஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கோரிக்கைகள் குறித்து தேசிய அளவிலான  சிக்கல் களை விவாதிக்கும் ஒரு மாரத்தான் அமர்வாக அமைந்ததுநிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் செயல் தலைவர் யு.சின்னைய்யா தலைமை வகித் தார்பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அனைவரையும் வர வேற்றுகூட்டத்தின் இன்றைய அவசரஅவசிய தேவையை விரி வாக எடுத்துரைத்தார்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்புஒன்றிய அரசில் ஓபிசி பிரிவின ருக்கு தனி அமைச்சகம்கிரிமி லேயர் முறை நீக்கம், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு நீக்கம்ஒன்றிய அரசு கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடுநீதித்துறைதனியார்துறை மற்றும் பதவி உயர் வில் இட ஒதுக்கீடுஉள்ளாட்சி தேர்தலில் ஓபிசி பிரிவின ருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை கள் முதன்மையாக முன்னெ டுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் வி.அனுமந்தராவ்நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவர் ராஜேஷ் வர்மாஎம்.பி., உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோ வன்எம்.பிமற்றும் சமூக வலைத் தளத்தில் பிரபலமாக உள்ள பேராசி ரியர் திலிப் மண்டல்வழக்குரைஞர் சாசங் ரத்னூ ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிஆதரவு நல்கினர்.

தமிழ்நாடுஆந்திராதெலங் கானாபீகார்உத்தரப்பிரதேசம்மகாராட்டிராடில்லிஅரியானாபஞ்சாப்ராஜஸ்தான்மேற்கு வங்கம்குஜராத் உள்ளிட்ட மா நிலங்களில் இருந்து கூட்டமைப் பின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள்ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகம்புது டில்லிஅய்தராபாத் பல்கலைக் கழகம்அசாம் பல்கலைக்கழகம் சார்ந்த மாணவர் அமைப்புகளின் தலைவர்கள்  உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் மாதங்களில் அனைத்து மாநிலங்களிலும் இதர பிற் படுத் தப்பட்டோர் பிரச்சினைகள் குறித்து கருத்தரங்கம்ஆர்ப்பாட் டம் நடத்துவது என்றும்ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் டில் லியில் மிகப் பிரமாண்டமான கூட் டத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்துவது என்றும் சமூக நீதிக் கான கூட்டு நடவடிக்கைக் குழு முடிவெடுத்துள்ளது.

அகில இந்திய அளவில் முதன் முறையாக இதர பிற்படுத்தப்பட் டோர் பணியாளர்கள் கூட்டமைப் பின் சார்பில் அனைத்து இதர பிற் படுத்தப்பட்டோர் நல சங்கங்களும் இணைந்து கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்துள்ளதை அனை வரும் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர்.

நல வாரியத்தில் தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை,ஆக.27, தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கும் நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


நல வாரியங்களில் பதிவு செய்யப்ப டாத பிற தொழிலாளர்களுக்கும் நிவா ரண உதவி வழங்க கோரி கட்டுமான தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டு நர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு கள் தொடரப்பட்டன.


இந்த வழக்குகளை, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் நல வாரியங் கள் மூலம் வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், ‘நல வாரியங் களில் உறுப்பினர்களாக உள்ள வர்களுக்கு மட்டுமே அரசு வழங்கிய நிதி கிடைத்துள்ளது. நல வாரியங்களில் உறுப்பினர் பதிவை புதுப்பிக்காதவர்க ளுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை’ என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தகுதியான தொழிலாளர் களை நல வாரியங்களில் உறுப்பினர்க ளாக சேர்க்கும் நடைமுறையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு சில நல வாரியங்களில்தான் உறுப்பினர்கள் மட்டுமே முறையாக தங்களது பங்களிப்பு தொகையை வழங் கியுள்ளனர். எனவே, நிவாரண உதவியை எதிர்பார்க்கும் உறுப்பினர்கள், நல வாரி யத்துக்கு வழங்க வேண்டிய பங்களிப்பை முறையாக செலுத்த வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.