ஞாயிறு, 31 அக்டோபர், 2021

அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 

     July 31, 2021 • Viduthalai

சென்னைஜூலை 31   தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகள்ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.ஸ்டாலின்  அவர்கள் நேற்று (30.7.2021)  சென்னையில் தொடங்கி வைத்தார்.

தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் நோக்கில் உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்தை கடந்த 1999ஆம் ஆண்டு அப்போ தைய முதலமைச்சர் கலைஞர் உருவாக்கினார்தொடர்ந்து, 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் 15 தனி நல வாரியங்கள் உருவாக்கப்பட்டன.

அமைப்புசாரா தொழிலாளர் களின் நலனை கருத்தில் கொண்டுபதிவு மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் கடந்த 2006 செப் டம்பர் முதல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

பிறகுபதிவுபுதுப்பித்தல்லத் திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக 2008ஆம் ஆண்டு முதல் மாவட்டம் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் லுவலகங்கள் திறக்கப் பட்டதுடன், 2009 முதல் அனைத்தும் கணினி மயமாக்கப் பட்டன.

இவ்வாறுஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மூக பாது காப்பு வழங்கியதன் மூலம்நாட்டி லேயே  முன்னணி  மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

1.68 லட்சம் பேர் மனு

இந்நிலையில், 18 அமைப்புசாரா நலவாரியங்களின் உறுப்பினர் களிடம் இருந்து பல்வேறு நலத் திட்ட உதவிகள் கோரி 75 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதுதவிர, 93,221 ஓய்வூதியர்கள்ஓய்வூதிய நிலு வைத் தொகை கேட்டு விண்ணப் பித்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கைஎடுக்குமாறு தொழிலாளர் நலத் துறைஅமைச்சர் சி.வி.கணேசன் சமீபத்தில் உத்தர விட்டார்.

இந்நிலையில்திருமணம்மகப் பேறுகல்விகண் கண்ணாடிஓய்வூதியம்குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரியவர்களில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.10.70 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் நேற்று (30.7.2021) தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை ஒய் எம்சிஏ மைதானத்தில் நடந்த விழாவில்அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை முதலமைச்சர் மு.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்அத்துடன்ஓய்வூதிய நிலுவைத் தொகை ரூ.24 கோடி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்உயர்கல்வித் துறை அமைச்சர் .பொன்முடிசுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன்அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுதொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்யாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏதமிழ்நாடு கட்டுமான நலவாரியத் தலைவர் பொன்.குமார்தொழிலாளர் துறை செயலர் கிர்லோஷ்குமார்தொழி லாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் ங்கேற்றனர்.

பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்

 

    October 30, 2020 • Viduthalai

திருவள்ளூர், அக். 30- தமிழக அரசின் தொழிலாளர் துறை யில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் களுக்கு 17 தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.


நலவாரியங்களில் உறுப் பினர்களாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய் வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் மூல மாக ஏற்படும் உயிரிழப்புக்கு உதவித் தொகை போன்றவை தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. 


திருவள்ளுர் மாவட்டத் தில் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட கட்டுமானம், உடலுழைப்பு, அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை, முடிதிருத்துவோர், தையல், கைவினை, கைத்தறி, விசைத்தறி, மண்பாண்டம், தெரு வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள் தொடர்பு டைய நலவாரியங்களில் புதி தாக பதிவு செய்து கொள் ளவும். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை புதுப்பிக்க <https:labour.tn.gov.in>  என்ற இணைய தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு பெறாத அமைப்புசாரா தொழிலாளர் கள்; இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி வயது சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான் றிதழ், கிராம நிர்வாக அலு வலர் சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நலவாரியத்தில் உறுப் பினர்களாக தங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத் தல் வேண்டும். நலவாரிய பதி வுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் சமர்ப்பித்த பிறகு தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் பதிவு எண் விவரம் கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.  அந்த பதிவு எண் மூலம் பதிவு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். இந்த வாய்ப்பினை அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் பயன் படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ் வரி தெரிவித்துள்ளார்.

ஏழைகள் கண்ணீர் (தொழிலாளர்)

 



             July 31, 2021 • Viduthalai

07.08.1932 - குடிஅரசிலிருந்து...

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள்அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்றுஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும்அநேகமாகஎல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோரொக்கப் பணமோ இல்லைஅநேகர் குடியிருக் கவும் சொந்த குடிசைஇல்லாமல்குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள்இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால்அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம்எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான் தார்களோமுதலாளிகளோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும்வியாபாரம் வளர்வதற்கும்காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்னஇருக்க டமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும்உண்ண உணவில் லாமலும்பெண்டு பிள்ளைகளுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள்து போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் னிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள்ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம்இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களைக் குறைக்கக் காணோம்ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும்தொழில் நேரத்தைக் குறைத்துவிடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர் கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும்ந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் ளும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம்இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும்இந்த முறையையாவதுதொழிலாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும்முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம்ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்திஎன்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம்அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம்இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தா முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும்மாகாண அரசாங்கங்களும்இந்திய அரசாங்கமும்தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தொழிலாளர் பணிக்கொடை பெறும் விதிமுறைகள்

 கி.பார்த்திபன்

Published : 07 Sep 2014 10:51 am

Updated : 07 Sep 2014 10:51 am


தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்ன விதமான பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

பணிக்கொடை, தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மூலம் மருத்துவ வசதி போன்ற பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பணிக்கொடையை பொறுத்தவரை பயிற்சி தொழிலாளர் நீங்கலாக பிற தொழிலாளர்கள் தகுதியுடையவர்களாவர். சம்மந்தப்பட்ட தொழிலாளர் பெறும் மாத ஊதியத்தை அடிப்படையாக கொண்டு, ஆண்டுக்கு 15 நாள் ஊதியத்தை பணிபுரியும் நிறுவனம் வழங்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் ஐந்தாண்டு தொடர்ச்சியாக பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கொடை பெற தகுதியுடையவர்களாவர்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை எவ்வளவு ?

பணிக்கொடையை பொறுத்தவரை ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் வீதம் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை மட்டுமே நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான பணிக்கொடையை காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும். பணிக்கொடை தொழிலாளர்களுக்கு வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அபராதத் தொகையை நிறுவனத்தினர் செலுத்தாதபட்சத்தில் தொழிலாளிக்கு பணிக்கொடையை பெற்றுத்தர என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?

தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் ஆய்வின்போது ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தொகையை செலுத்த குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அந்த கால கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதபட்சத்தில், நாளொன்று ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) பயன் என்ன?

அனைத்து விதமான தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக விதிமுறை பொருந்தும். அதன்படி தொழிலாளர் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவன உரிமையாளர் குறிப்பிட்ட தொகை செலுத்துவர். அந்த தொகையை தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் பெற தகுதியுடையவர்களாவர். தொழிலாளர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுதல், பெண் தொழிலாளர் மகப்பேறு காலம் போன்றவற்றுக்கு அந்தந்த நிறுவனத்தின் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை வழங்கப்படும்.

- இந்து நாளேடு இணையம்







தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு

மத்திய அரசு பட்ஜெட் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை. 
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு*
நிலையான கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு*
டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வருவாய்க்கு இனி வரி இல்லை*
இனிமேல் வீட்டுக்கடனுக்கான வட்டிசலுகை 2வீடுகளாக உயர்த்தப்படும்*
இதுவரை ஒரு வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டது*
வீட்டு வாடகைக்கான வரி விலக்கு 1,80000 ரூபாயிலிருந்து 2,40000 ரூபாயாக அதிகரிப்பு. ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு வருமான வரி விலக்கினை உயர்த்தி வழங்கிய மத்திய அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வரவேற்று நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

...........
அன்பான கணக்காளர்களுக்கு...

இன்ய வணக்கம்🙏🏽

மத்திய அரசின் இன்றைய  இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய சாராம்சம் என்னவென்றால் ...

உச்சவரம்பு 5 லட்சம் வரை வரி கிடையாது என்பது மறைந்திருக்கும் சூட்சமம்.

உதாரணமாக..

ஒரு தனிநபர் வருமானம் 

எல்லா கழிவுகளையும் கழித்து 4.80 லட்சம் வரை வருமானம் இருந்தால்...

2.50 லட்சம் வரை வரி கிடையாது.

மீதி 2.30 லட்சத்திற்கும் 5% வரி 11,500 + EC வரும்
ஆனால்...

Rebate u/s 87 A 12,500 வரை கழித்து கொள்லலாம்.
அப்படி கழிக்கும் போது வரி வராது.

அதே சமயத்தில்
வருமானம் 5.25 லட்சமாக இருந்தால்...
2.50 லட்சம் போக மீதி முள்ள 2. 50 லட்சத்திற்கு  5 % வரி அடுத்து 25 ஆயிரத்திற்கு 20% வரி + EC

Rebate u/s 87 A ஐ கழிக்க முடியாது.

இது தான் மறைந்திருக்கும் மயக்க மாத்திரை

இது மாதிரி தான்
 GST - ம்

கவனம்

கவனம் 

12.2.2019

*9.75 லட்சம் பெறும் நபர்* *வருமான வரி இப்போது கட்டுவது*

TOTAL PAY      = 9,75,000
(-) HRA.            =    50,000
                          =  9,25,000
(-)                      =     40,000
                          =  8,85,000
(-)UNDER VI     = 1,50,000
                          =  7,35,000
TAX 
FIRST 2,50,000 = NIL 
NEXT 2,50,000@5% = 12,500
NEXT 2,35,000@20%= 47,000
TAX.                           =  57500
CESS.      @ 4 %        =    2300
TOTAL TAX.              = 59,800

*UNION BUTGET 2019*

TOTAL PAY      = 9,75,000
(-) HRA.            =    50,000
                          =  9,25,000
(-)                      =     50,000
                          =  8,75,000
(-)UNDER VI     = 1,50,000
                          =  7,25,000
TAX 
FIRST.         5,00,000 = NIL 
NEXT 2,25,000@20%= 45,000
TAX.                           =  45,000
CESS.      @ 4 %        =    1,800
TOTAL TAX.              = 46,800
*(இந்த டேக்ஸ் -ஐ வைத்து மதிப்பிட்டால் நமக்கு ரூ 13,000 டேக்ஸ் பெனிபிட் ஆகத் தோன்றலாம்)*

ஆனால் 
2019-2020 Pay increase @ (3%increment+5%DA)
9,75,000@8%       
9,75,000 + 78,000.  = 10,53,000

TAX 
FIRST.         5,00,000 = NIL 
NEXT 5,00,000@20%= 50,000
NEXT 53,000 @ 30% = 15,900
TAX.                           =  65,900
CESS.      @ 4 %        =    2,627
TOTAL TAX.              = 68,527

2019-2020 ஆம் ஆண்டு நாம் கடந்த ஆண்டைவிட அதிகம் செலுத்தும் தொகை ரூ
68,527- 59,800 = ரூ 8,727

*ஆகவே நண்பர்களே கடந்த ஆண்டைவிட வரும் ஆண்டில் ரூ 8,727 அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்*

*ஆக மோடியின் வருமான வரி சலுகை என்பது வெறும் ஏமாற்று வேலையே....

அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா?

 / நன்றி தி இந்து நாளிதழ்/

அனைத்து ஊடகமும் இப்படி நடுநிலையாக மாறுங்கள்.

*அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? - The Hindu தலையங்கம்*

அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.

அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும், திட்டமிடுதலும், நிதி ஒதுக்குதலும் மட்டுமே அரசின் உயர்மட்டத்தில் நடைபெறுகின்றன. அமல்படுத்தும் முழுச் சுமையும் ஊழியர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது. உதாரணமாக, சுகாதாரத் துறையில் பல்வேறு அடுக்குகள் இருந்தபோதும், இறுதியாக ஒரு பகுதியைச் சுகாதாரமாக வைத்திருப்பது அங்குள்ள குப்பைகளையும், சாக்கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களே. அந்தப் பணியைச் செய்யவில்லை என்றால் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கண்காணித்தல் என்கிற எந்த அடுக்கினாலும் பலன் இல்லை.

ஊழியர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் தேவையின்றி இருப்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு நாட்டின் மக்கள்தொகைக்கும் ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே அந்த நாடு மேம்பட்ட சேவையை வழங்குகிறதா என்பதற்கான அளவுகோல். 2011-ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 1,622.8 அரசு ஊழியர்கள் பணிசெய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கக் கூடும். 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 7,681 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். மத்திய அரசுப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 2011-ம் ஆண்டு 24.63 லட்சம் பேர். மாநில அரசு ஊழியர்கள் 72.18 லட்சம் பேர். இந்த எண்ணிக்கையில் ரயில்வேயில் பணிபுரியும் 14 லட்சம் பேரும் அடங்குவர். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். 
சமூக மாற்றத்தில் அரசின் சேவையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் திறன் மிக முக்கியமானது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்ட நாடுகள் அல்லது மாநிலங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால், அவற்றின் ஊழியர் விகிதம் அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ 8 கோடி. தமிழகத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். அதாவது, ஒரு லட்சம் பேருக்கு வெறும் 1,500 ஊழியர்கள் மட்டும்தான்.

நேரடியாக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமானால் மாநிலங்களின் வளர்ச்சி, மனிதவளக் குறியீடு இவை உயர்ந்துவிடும் என்பதல்ல இதன் பொருள். அதேசமயம், இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது. அரசின் அறிக்கைகள் பல நேரங்களில் மக்களைத் தூண்டும் வகையிலும், படித்தவர்களைக்கூடத் திசைதிருப்பும் வகையிலும் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, போராட்டங்கள் நடைபெறும்போது கொடுக்கப்படும் புள்ளிவிவரங்கள், போராடுபவர்களுக்கு எதிரான பகையையும், வன்மத்தையும் உருவாக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்படுகின்றன.

பொய்ப் பிரச்சாரம்

தமிழ்நாடு அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் 71% ஊழியர்களின் சம்பளத்துக்கே கொடுக்கப்படுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. உண்மையில், இந்தத் தொகை 50%-க்கும் குறைவாகும். 7-வது ஊதியக் குழு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-மாவது இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதியன்று அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வர் பழனிசாமி புதிய சம்பள விகிதத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,000-த்திலிருந்து ரூ. 15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.77,000-லிருந்து ரூ.2,25,000ஆகவும் உயரும் என்றும் அறிவித்தார்.

அதாவது, உயரதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத ஊதிய உயர்வு, கீழ்நிலையில் உள்ள 15.4 பேரின் உயர்வுக்குச் சமமாகும். அதேபோல கீழ்நிலையில் உள்ள ஒருவரின் மாதச் சம்பளத்தைப் போல, மேல்நிலையில் உள்ள ஒருவருக்குக் கிடைத்த மாத உயர்வு மட்டும் 9.42 மடங்காகும். இந்த ஒரு உதாரணம் மட்டும் ஒட்டுமொத்த நிலைமையை உணர்த்துவதாக இருக்கும். ஆரம்ப நிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும், உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும் 1:14.33 என்ற விகிதத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுதான் ஒட்டுமொத்தமான சம்பள விகிதம் மிக அதிகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதைப் பயன்படுத்தியே அதிகாரப் பணி நிலையில் உச்சத்தில் இருப்பவர்கள், கீழ்மட்டத்தில் இருப்பவரது நியாயமான கோரிக்கைகளை மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அந்தச் சம்பள உயர்வில் குறிப்பிட்ட பகுதியை மறுப்பது ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும்போது ஜெயலலிதா தொடங்கியது. இதைத்தான் வழக்கம் என்று சொல்லி அமைச்சர் ஜெயக்குமார் நியாயப்படுத்துகிறார். ஊதிய உயர்வு அளிப்பது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு, ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுவாக அறிவித்துவிட்டு, பல மாதங்கள் அந்த உயர்வுக்கான பணத்தைச் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குக் கொடுக்காமல் இருப்பது ஏமாற்றமாகும். ஆரம்பத்தில் தனியார் முதலாளிகள் செய்த இத்தகைய நடவடிக்கையை வேடிக்கை பார்த்த அரசுகள் இப்போது தாங்களும் அதே காரியத்தைச் செய்வது கொடுமையானது.

மறுக்கப்படும் நிலுவைகள்

கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்போது 12 மாதங்கள் அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையைத் தர மறுத்த அரசாங்கம், அதே நடைமுறையை இந்த முறை 21 மாதங்களுக்கு நீட்டித்து நியாயப்படுத்தவும் செய்கிறது. ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் இந்த 33 மாத நிலுவைத் தொகையையும் பெற்றுவிட்டார்கள். தனியார் நிறுவனங்கள் போதுமான சம்பளம் தரவில்லை என்பதைத் தட்டிக்கேட்டுச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கம், அவர்கள் குறைவாகக் கொடுக்கிறார்கள், நாங்கள் அதிகமாகத் தருகிறோம் என்ற வாதத்தை முன்வைக்கிறது. போராடும் ஊழியர்களுக்கு எதிராகப் பொதுமக்களையும், இதர வேலை தேடும் பிரிவினரையும் தூண்டிவிடுகிறார்கள்.

இப்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், இதற்கு முழுக் காரணம் அரசு மட்டும்தான். உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களோடு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். மாநில அரசின் இன்றைய நிதிநிலைக்குக் காரணம் மத்திய அரசு வரிவருவாயைப் பெரும் பகுதி அள்ளிக்கொண்டு போனதுதான். அதைக் கேட்பதற்கும், பெறுவதற்கும் செய்யாமல், அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.
.....


வெள்ளி, 29 அக்டோபர், 2021

நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

 

சென்னைசெப்.25- தமிழ் நாட்டில் நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தமாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒன்றிய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் கிரா மங்களில் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில்நகரங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில்தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது `நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட் டம்அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில்பூங்காக்கள்விளை யாட்டுத் திடல்கள்வடி கால்கள்சாலைகள்கட்டடங் களை அமைத்தல்பராமரித் தல்நீர்நிலைகளைப் புதுப் பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்இந்த திட் டத்தை பரிசோதனை அடிப் படையில் செயல்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியின் 2 மண்ட லங்கள்இதர மாநகராட்சி களில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 பேரூராட் சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றுஅமைச்சர் கே.என்.நேரு சட்டப் பேரவையில் ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

இந்த திட்டத்தை செயல் படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

முழுமையாக தமிழ்நாடு அரசின் நிதியில் செயல்படுத் தப்படும் இந்த திட்டத்துக்காகஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வேலைதேடுவோர் பதிவு செய்யப்பட்டுஅவர்களுக்கு பணியாளர் அட்டை வழங்கப் பட உள்ளது.

பெண்களுக்கு 50 சதவீதத் துக்கு குறையாமல் பணி வழங்கப்படும்அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம்அவர்களது பணிகளின் அடிப் படையில் வழங்கப்படும்பணி யாளர்களுக்கான குறைதீர் அமைப்பும் உருவாக்கப்படும்.

இந்த திட்டத்தில் பதிவு செய்ய, 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்ஆதார் அட்டைகுடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடை யாள அட்டையைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுஉரிய அலுவலகங்களில் சமர்ப் பிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டு திட்டம் தயாரித்துஇயற்கை வள மேலாண்மைவெள்ளத் தடுப்பு மற்றும் இதர பணிகள் என்ற அடிப் படையில் பணிகளை மேற் கொள்ளும்இதைக் கண் காணிக்க மாநிலஅளவிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

திட்டத்துக்கான நிதியில் 85 சதவீதம் நிதிநிலை அறிக்கை மூலம் ஒதுக்கப்பட்டுள்ளதுமீதமுள்ள 15 சதவீதம் உள் ளாட்சி அமைப்புகளுக்கான நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.