மதுரை,மே 29, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூ தியதாரர்களுக்கான மருத் துவ செலவுகளை நொண்டிச் சாக்கு கூறி மறுக்காமல் கண்டிப்பாக திருப்பி வழங்க வேண்டியது அரசின் கடமை என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சுகாதார நிதித் திட் டத்தின்கீழ் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கட்டாய மருத்துவக் காப்பீட் டுத் திட்டம் அமலில் உள் ளது.
இத்திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதா ரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத் துவச் செலவுகளை தமிழக அரசும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உள்ளிட்ட 100-க்கும் மேற் பட்ட அரசு ஊழியர்கள் மற் றும் ஓய்வூதியதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினரின் நலனுக்காகவும் ஓய்வூதியதாரர்களின் உடல் நலனை கருத்தில் கொண் டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட் டது.
இதன்படி, ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களிடம் கட்டாய பிரிமீயம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளும்போது செலவு செய்த மருத்துவ செலவுகளை திருப்பிக் கேட் டால், பட்டியலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. நோய் பாதிப்பு இவ்வளவு சதவீதம் இருந்தால் செலவுத் தொகையை திருப் பிக் கோரமுடியாது. பட்டி யலில் இல்லாத இந்த நோய் பாதிப்புக்கு காப்பீடு கிடை யாது. சரியான நேரத்தில் இழப்பீடு கோரவில்லை என நொண்டிச்சாக்குகளைக் கூறி மாவட்ட அளவில் உள்ள மருத்துவ காப்பீட்டுக் குழு செலவு செய்துள்ள தொகையை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே நாங்கள் மருத்துவத்துக்காக செலவு செய்து உள்ள தொகையை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய தாரர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக் கப்பட்டுள் ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக் கான மருத்துவ செலவுகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை நொண்டிச் சாக்கு கூறி மறுக்கக்கூடாது.
எனவே, தமிழகம் முழுவ தும் இத்திட்டத்தின்கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மருத்து வத்துக்காக செலவு செய் துள்ள தொகை யை வழங்க முடியாது என பிறப்பிக்கப் பட்ட அனைத்து உத்தரவு களும் ரத்து செய்யப் படுகிறது.
மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய செலவுத் தொகை யை 6 % வட்டியுடன் வழங்க வேண்டும். தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக அர சு மருத்துவ மனைகளை யும் தரம் உயர்த்தியிருந்தால் அனைத்து தரப்பினரும் அரசு மருத்து வமனை களிலேயே இலவச சிகிச்சை பெற்றிருப்பர்.
ஆனால் தமிழகத்தில் ஆட்சி யாளர்கள் முதல் அதிகாரிகள் வரை தற்போது தனியார் மருத்துவமனை களை நாடும் நிலை உள்ளது.
எனவே, அரசு மருத்துவ மனைகளின் தரத்தை மேம் படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச் சை பெறும் அரசு ஊழியர் களுக்கும் ஓய்வூதியதாரர் களுக் கும் சட்டப்படி வழங்க வேண்டிய நிதியுதவிகளை அரசும் காப்பீட்டு நிறுவ னங்களும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத் தரவிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு, 29.5.19