ஞாயிறு, 2 ஜூலை, 2017

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நல்.இராமச்சந்திரன் பணி நிறைவு பாராட்டுவிழா








வல்லம், ஜுலை 2- பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தில் துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் தனது 33 ஆண்டு கால சேவை யில் 10 ஆண்டுகளாக துணை வேந்தர் பொறுப்பு வகித்து 30.6.2017 அன்று பணி நிறைவு செய்தார்.
அவர் சேவையை பாராட் டும் விதமாக பல்கலைக்கழக கூட்டு நல பணியாளர் மன் றம்  பாராட்டு விழாவிற்கு ஏற் பாடு செய்திருந்தது. நிகழ்ச் சிக்கு பல்கலைக்கழக கூட்டு நல பணியாளர் மன்ற தலை வர் முனைவர் கே.லட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றிட அதனை தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் துணைவேந்தர் அவர்களிடம் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  விழாவில் பல் கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலை மையேற்று சிறப்பித்து உரை யாற்றும் போது பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் தன் பணிக் காலம் முழுவதும் பல் கலைக்கழகத்திற்கென்றே முழு அர்ப்பணிப்புடன் செயல் பட்டார் என்று பாராட்டினார்.
புதிய துணைவேந்தர் பங் கேற்று வாழ்த்துரை வழங் கினார். விழாவில் பதிவாளர் முனைவர்  சொ.ஆ.தனராஜ், அவர்களின் வாழ்த்துரையில் முன்னாள் துணைவேந்தர் வகுத்த பாதையில் மற்றும் புதிய துணைவேந்தர் அவர் களின் வழிகாட்டுதலின்படி யும் இப்பல்கலைக்கழகத்தை இன்னும் சிறந்த நிலைக்குக் கொண்டு செல்வோம் என்று உறுதி அளித்தார். விழாவில் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி துறையின் ஆலோசகர் முனை வர் எஸ்.தேவதாஸ், பேராசிரி யர் மோகன்,  கல்விப்புல முதன்மையர் பேரா.பி.கே.சிறீவித்யா, முனைவர் செந் தமிழ்குமார் மற்றும் இயக்கு நர்கள், பேராசிரியர்கள், பணி யாளர்கள் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார்கள். பல் கலைக்கழக வேந்தர் அவர்கள் முன்னாள் துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் மற்றும் வாழ்விணை யர் பேரா.உ.பர்வின் ஆகியோ ருக்கு பொன்னாடை அணி வித்தார்.
அதனை தொடர்ந்து பல் கலைக்கழக கூட்டு நல பணியாளர் மன்றம் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட் டது. முன்னாள் துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் புராவிற்கு ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் பெயரில் அறக்கட்டளை நிறுவி ரூ.1,00,000 -லட்சம் மற்றும் நிர் வாக மேலாண்மையில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ ருக்கு பரிசு வழங்குவதற்கு தனது தாயார் மாரிக்கண்ணு பெயரில் அறக்கட்டளை நிறுவி ரூ.1,00,000 வழங்கினார்.
இறுதியாக முனைவர் ஆர்.ஜெயந்தி நன்றியுரையாற் றினார்.
-விடுதலை,2.7.17

செவ்வாய், 13 ஜூன், 2017

பணி நிறைவு பாராட்டு விழா- கடலூர்


கடலூர், பிப். 11- கடலூர் மாவட் டம் உணவு பாதுகாப்பு (ம) மருந்து நிர்வாகத்துறை அலு வலர்கள் சார்பாக நெல்லிக் குப்பம் நகராட்சி மற்றும் அண்ணாகிராமம் வட்டாரம் உணவுப்  பாதுகாப்பு அலுவ லர் இரா.கந்தசாமி அவர்க ளுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 31.1.2017 அன்று மாலை கடலூர் மஞ்சக்குப்பம் அபி நயா ஓட்டலில் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளரும், கடலூர் வட் டார உணவு பாதுகாப்பு அலு வலர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக உணவு பாதுகாப்பு அலுவலர் ப.நல்ல தம்பி வரவேற்புரை ஆற்றி னார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்கள் இரா. கந்தசாமி அவர்களது பணிக் காலத்தில் தொழுநோய், பொது சுகாதாரம், உணவுப் பாது காப்பு ஆகிய துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக திராவிடர் கழக மாவட்ட செயலாளர் சிவக்குமார், பண்ருட்டி தொகுதி முன்னாள் செயலா ளர் க.இராமசாமி, முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சீ. பாலசுந்தரம், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் டி. புருசோத்தமன், அரசு ஊழியர் சங்க மு.மாவட்ட செயலாளர் காசிநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இல.அரிகிருஷ்ணன், நெல் லிக்குப்பம் வணிகர் சங்க தலைவர் இராமலிங்கம், திருக்கோவிலூர் உணவு பாது காப்பு அலுவலர் சரவணன், அஞ்சல் துறை மாவட்ட செயலாளர் இரட்சகர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் டி. மகாலிங்கம், கோவி.சுப்பிர மணியன், ஞானமணி ஆகி யோர் உரையாற்றினர்.
விழாவில் மாவட்ட கழக முன்னாள் செயலாளரும், பண்ருட்டி ஜோதி ஸ்டியோ உரிமையாளருமான கோ.புத் தன், அண்ணா கிராம ஒன்றிய கழக செயலாளர் இ.இராசேந் திரன், கிளை செயலாளர் ப. நாகமுத்து, சாத்திப்பட்டு பால முருகன், அருள்குமார், இரா. கந்தசாமி அவர்களது துணை வியார் க.அமுதா, மகன் க. திராவிடமணி, மகள் பகுத் தறிவு, மருமகன் செ.நவீன் மற்றும் உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள்.
ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சீ.செந்தாமரைக் கண்ணன் நன்றி கூறினார். முன்னதாக விழா நாயகர் இரா.கந்தசாமி ஏற்புரை வழங்கினார்.
-விடுதலை,11.2.17

சனி, 10 ஜூன், 2017

கோத்ரேஜ் நிறுவன ஊழியர் பணி நிறைவு பாராட்டு-5.5.17

 மறைமலைநகர், மே 15- கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்க செயற்குழு உறுப் பினர் எம்.கே.சூரியகலாவதி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவனத்தில் (மறை மலை நகர்) 34ஆண்டுகள் பணி யாற்றி 5.5.2017இல் ஓய்வு பெற் றார்.
5.5.2017 பிற்பகல் 4 மணி அளவில் தொழிற்சாலை வளா கத்தில் தொழிலாளர்கள் சார்பி லும், அலுவலர்கள் சார்பிலும் தொழிற்சாலை மேலாளர் பசுபதி அவர்கள் தலைமையில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. சங்க துணைச் செயலாளர் ம.கருணாநிதி வாழ்த்து மடல் அளித்தார்.  சங்க செயற்குழு  உறுப்பினர்கள் க.சிவகாமி, வ. வசந்தி, பா.இயேசுராஜா மற் றும் தொழிலாளர்களும் அலுவ லர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, அன்பளிப் புடன் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தொழிற் சாலை மேலாளர் பசுபதி, மனித வள அலுவலர் ஜோசப் மரியதாஸ் இராஜசோகர், சங்க தலைவர் த.ரமேஷ், துணச் செயலாளர் கோ.கணேஷ், செய லாளர் செ.ர.பார்த்தசாரதி பொரு ளாளர் க.நாகராஜ் மற்றும் துணைத் தலைவர் கோ.குமாரி ஆகியோர் பங்கேற்று சிறப்பித் தனர்.
-விடுதலை,15.5.17












ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராடத் தடை


லக்னோ, ஏப். 2 உத்தரப்பிரதேசத்தில் மாநில பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களும், ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அம்மாநில பாஜக அரசு தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 18 உள்ளன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இந்நிலையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களை, எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் ஆதித்யநாத் அரசு கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களோ, ஊழியர்களோ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இதனை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், வாரண்ட் இல்லாமல் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 -விடுதலை,2.4.17

109 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்



சென்னை,ஏப்.2 அம்பத்தூர் எஸ்.ஆர்.எம். மேல் நிலைப் பள்ளியில் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணை வழங்குதல், பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடக்க விழா நேற்று (1.4.2017) நடந்தது. இதில் பங்கேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 109 பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 13 மாவட்டங்களில் ரூ. 36 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 36 கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்; கரூர் மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 25 லட்சத்து 54 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் பள்ளிக் கட்டடங்கள். அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 21 மாவட்டங்களில் 236 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 பள்ளிக் கட்டடங்கள்.
286 பள்ளிகளில் 6 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ள மெய்நிகர் வகுப்பறைகள் என 284 கோடியே 9 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டிலான பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடியே 5 லட்சம் செலவில் கட்டடங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
 -விடுதலை,2.4.17

போராட்டங்களில் சங்கங்கள் ஒன்றிணையக் கூடாதாம்!



 தொழிலாளர்களை அச்சுறுத்தும் மத்திய அரசு நிறுவனம்
டில்லி, ஏப்.3- இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவன மான பிஎஸ்என்எல் நிறுவனத் தின் வெவ்வேறு  தொழிற்சங் கத்தினர் ஒன்றிணைந்து போராடக் கூடாது என்று மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு நிர்வாகத் தின் சார்பில் அளித்துள்ள அறி விக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த ஓராண்டாக பணி புரிந்து வருகின்ற  சங்கங்களின் அங்கீகாரம்குறித்த சரிபார்ப்புப் பணிகள் முடிந்துள்ளன. அதன் படி, நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் நிர்வாகம் சாராத பணியாளர்கள் சங்கத் துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இதன்பிறகு, நிர்வாக அலு வலர்கள் சங்கத்தைச் சேர்ந்த வர்களும், பணியாளர்கள் சங் கத்தைச் சேர்ந்தவர்களும் அவர வர்களுக்குரிய விதிமுறை களைக் கொண்டு தனித்தனியே இயங்கிடவேண்டும்.
அண்மைக்காலமாக இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு  செயல்பட்டுவருவது தெரிய வந்துள்ளது. ஆகவே, பின்கூறப்பட்டுள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண் டும்.
பிஎஸ்என்எல்லில் பணி யாற்றுவோர் பிரதிநிதிகளுக் கான விதிமுறைகளின்படி,  பிஎஸ்என்எல் நிர்வாகம் சாராத பணியாளர்கள் சங்கம் என்றும், பிஎஸ்என்எல் நிர்வாக அலு வலர்கள் சங்கம் என்றும் 2014ஆம் ஆண்டு விதிகளின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
நிர்வாக அலுவலர்கள் சங் கத்தின்கீழ் உள்ளவர்கள்  பணி யில் தங்கள் சங்க உறுப்பினர் களிடம் சேவை ஆர்வத்தை முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
நிர்வாக அலுவலர்கள் சங்கம், நிர்வாகம் சாராத பணி யாளர்கள் சங்கத்துடன் சங்கப் பணிகளிலும், பிரச்சினைகளி லும் கைகோர்க்கக் கூடாது. இரு அமைப்புகளும் எந்தப் பிரச்சினைகளிலும் ஒன்றி ணைந்து போராட்டத்தை முன் னெடுக்கக் கூடாது.
இரு சங்கங்களும் தங்கள் பணியாளர்களின் பிரச்சினை களை தனித்தனியே கையாண்டு கொள்ள வேண்டும் என அறி வுறுத்தப்படுகிறார்கள். இன் னும் சொல்லப்போனால், நிர் வாக அலுவலர்களுக்கான பிரச் சினைகளில் பணியாளர்கள் சங்கத்தினர் தலையிடக்கூடாது. பணியாளர்களுக்கான பிரச்சி னைகளில்  நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தலையிடக்கூடாது.
நிர்வாக அலுவலர்கள் தரப்பும், நிர்வாகம் சாராத பணியாளர்கள் தரப்பும் என ஒருவர் பிரச்சினையில் மற்றவர் தலையிடாமல் விலகியே இருக்கவேண்டும்.
இவ்வாறு தென்னக பிராந் தியத்துக்கான துணை பொது மேலாளர் ஏ.கே.சின்கா குறிப் பிட்டுள்ளதாக அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே தொழிலா ளர்கள், அலுவலர்கள் சங்கத் தினரை பிரித்தாளும் சூழ்ச்சி யுடன் மத்திய அரசு  அச்சுறுத் தும் வகையில் உள்ள பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தின் போக்கினை இருசங்கத்தினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
-விடுதலை,3.4.17