ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

109 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்



சென்னை,ஏப்.2 அம்பத்தூர் எஸ்.ஆர்.எம். மேல் நிலைப் பள்ளியில் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணை வழங்குதல், பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடக்க விழா நேற்று (1.4.2017) நடந்தது. இதில் பங்கேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 109 பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 13 மாவட்டங்களில் ரூ. 36 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 36 கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்; கரூர் மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 25 லட்சத்து 54 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் பள்ளிக் கட்டடங்கள். அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 21 மாவட்டங்களில் 236 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 பள்ளிக் கட்டடங்கள்.
286 பள்ளிகளில் 6 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ள மெய்நிகர் வகுப்பறைகள் என 284 கோடியே 9 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டிலான பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடியே 5 லட்சம் செலவில் கட்டடங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
 -விடுதலை,2.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக